Headlines

மனைவியை மீட்டுத்தரும்படி கணவன், குழந்தை, வெட்டுக்கத்தி மற்றும் விஷ போத்தலுடன்..

சேவைக்காலம் நிறைவடைந்தும் சவுதி அரேபியாவில் பணியாற்றி வரும் தனது மனைவியை இலங்கைக்கு அழைத்து வரும் படி கூறி நபரொருவர் வேலைவாய்பு பணியகமொன்றின் முன் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். குருநாகலையில் உள்ள வேலைவாய்ப்பு பணியகமொன்றின் முன்னாலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தனது பிள்ளையுடனேயே குறித்த கணவர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். வெட்டுக்கத்தி மற்றும் விஷ போத்தல் ஆகியவற்றையும் அவர் தன் வசம் வைத்திருந்துள்ளார். பின்னர் அவ்விடத்துக்கு வந்த பொலிஸார் அவரை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பியுள்ளனர்.

Read More

மைத்திரிக்கு வெற்றி நிச்சயம்; சந்திரிகா

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன நிச்சயம் வெற்றி பெறுவார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். சுனாமிப் பேரலையின் தாக்கத்தினால் 2004 ஆம் ஆண்டு அனைத்துக் கட்சிகளும் பேதமின்றி இணைந்து செயலாற்றின. இதனால் குறுகிய காலத்திலேயே நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடிந்தது. இதைப்போன்றே இப்போதும் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்துள்ளன. எனவே அடுத்த மாதம் ஜனவரி 8 ஆம் திகதி நடக்கும் தேர்தலில் வெற்றிபெறுவோம். ‘ஹெல்பிங் அம்பாந்தோட்டை’ நிதி முறைகேடு சம்பந்தமான வழக்கில்…

Read More

காலை இழந்த எம்.பி. பாராளுமன்றம் வந்தார்

வாகன விபத்தில் சிக்கி ஒரு காலை இழந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப் பெரும நேற்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்துக்கு வருகை தந்திருந்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன மரணமானதையடுத்து பாராளுமன்றத்தில் ஏற்பட்டிருந்த வெற்றிடத்திற்கு அஜித் மான்னப் பெரும நியமிக்கப்பட்டிருந்தார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வாகன  விபத்தில் சிக்கி ஒரு காலை இழந்ததுடன் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வந்தார்….

Read More

தலைவர் ரிஷாட்டின் நிதியுதவியில் கும்பலங்கை ஹமீதியா பாடசாலைக்கு இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் (முன்னை அரசாங்கத்தின்) பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில், கட்சியின் அரசியல் அதிகாரபீட உறுப்பினரும் குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான முஸம்மிலின் வழிக்காட்டலின் கீழ், அல்ஹாஜ் மொய்னுதீனின் வேண்டுகோளின் பேரில், இப்/கும்பலங்கை ஹமீதியா முஸ்லிம் மஹா வித்தியாலயத்துக்கு இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. கட்சியின் உயர்பீட உறுப்பினரும் முன்னாள் மாநகரசபை உறுப்பினருமான அஷார்தீன் மொய்னுதீனினால், போட்டோகொப்பி இயந்திரம், பிரின்டர் இயந்திரம் மற்றும் Amp, Mic உள்ளிட்ட குறித்த இலத்திரனியல் உபகரணங்கள்,…

Read More

றிஷாத் பதியுதீன் குழுவினர் அட்டாளைச்சேனைக்கு விஜயம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு அம்பாரை மாவட்டத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுத்தீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் அம்பாரை மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கும் விஜயம் செய்து வருகின்றனர். நேற்று சனிக்கிழமை மாலை அட்டாளைச்சேனைக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கு மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர். அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் ஏ.சீ.எம் சமீர் ஹாஜி அவர்களின்…

Read More

மஹிந்தவின் கூட்டத்தில் புதிய தேசிய கோடி

கண்டி மாவட்டத்தில் யட்டிநுவர பகுதியில் இன்று மகிந்த ராஜபக்ஷ பங்கு பெறும் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் சர்ச்சைக்குரிய தேசியக்கொடியை பறக்க விட்டுள்ளதை சிங்கள மொழி முன்னணி ஊடகம் ஒன்று அம்பலப்படுத்தி உள்ளது. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் உதய கம்மன்பில உள்ளிட்ட சிலர் சிறுபான்மையினரை பிரநிதிதித்துவம் செய்யும் நிறங்களை அகற்றிய கொடிகளை ஏந்தி சர்ச்சை ஏற்பட்ட நிலையில் இன்று குறிப்பிட்ட மகிந்த ராஜபக்ச பங்குபெறும் அரசியல் கூட்டத்தில் இந்த கொடிகள் பறக்கவிட்டபட்டற்கு எந்த நடவடிக்கை எடுக்கப்படும்…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் அரக்கியால பாடசாலை மைதானம் புனரமைப்பு!

  -ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், குருநாகல், அரக்கியால முஸ்லிம் மஹா வித்தியாலய விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்திப் பணிகள் நேற்று (12) ஆரம்பித்து வைக்கப்பட்டது. முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எம்.சி. இர்பானின் வேண்டுகோளுக்கிணங்க, நீண்டகாலம் புனரமைக்கப்படாமல் இருந்த, அரக்கியால பாடசாலை மைதானத்தின் அபிவிருத்திக்காக இருபது இலட்சம் ரூபா நிதி அமைச்சரினால் ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நசீர் தலைமையில் இடம்பெற்ற…

Read More

‘வாக்காளர் இடாப்பில் இருக்கும் விகிதாசாரத்துடன் ஒப்பிடும் போது, பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறைந்தமை வேதனையானது’ டாக்டர்.ஹஸ்மியா தெரிவிப்பு!

  -ஊடகப்பிரிவு- வாக்காளர் இடாப்பில் 52 சதவீதமாக இருக்கும் பெண்கள் அரசியல் பிரதிநிதித்துவத்தில் மிகவும் குறைவாக கஞ்சிக்குள் இட்ட பயிராக இருப்பது வேதனையானது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித் தலைவி டாக்டர் ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்தார். அம்பாறையில் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற மகளிருக்கான விஷேட கூட்டங்களில் அவர் கலந்துகொண்டார். ஒலுவில், கொலனி 5ஆம் பிரிவு, திராய்க்கேணி, பாலமுனை, நிந்தவூர் மற்றும் அட்டாளைச்சேனை ஆகியவற்றில் இடம்பெற்ற கூட்டங்களில் அவர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்….

Read More

ஏறாவூரில் றிஷாத் பதியுதீனுக்கு ஊர்கூடி உணர்ச்சிபூர்வமான வரவேற்பு

ஏ.எச்.எம்.பூமுதீன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் றிஷாத் பதியுதீன் இன்று கிழக்கிற்கான தனது பயணத்தை மேற்கொண்டார். இதன்போது ஏறாவூருக்கு விஜயம் செய்த தேசியத் தலைவன் றிஷாத் பதியுதீனுக்கு ஏறாவூர் மக்கள் ஊரோடு ஒன்றிணைந்து உணர்ச்சி பூர்வ வரவேற்பளிப்பதை படத்தில் காணலாம்.

Read More

இந்தியாவின் நடைமுறையைப் பின்பற்றி ஆகக்கூடிய சில்லறை விலை

-சுஐப் எம் காசிம் அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைத்து மக்களின் சுமையைக் குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகுமென்றும் அதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்  கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியுதீன் இன்று மாலை தெரிவித்தார். “வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை” விளக்கும் செய்தியாளர் மாநாடு நிதியமைச்சில் இடம்பெற்ற போது பல்வேறு கருத்துக்களை அவர் தெரிவித்தார். இந்த செய்தியாளர் மாநாட்டில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, கிராமியப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஹரிஸன், மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு…

Read More

இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவும்

இலங்கையின் ஜனநாயக   மற்றும் பொருளாதார  மறுசீரமைப்புக்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை செய்யும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அத்துல் கேசாப் தெரிவித்தார். அமெரிக்க யுஎஸ்எய்ட்  நிறுவனத்தின் ஏற்பாட்டில்  கொழும்பில் கிங்கஸ்பரி ஹோட்டலில்  நேற்று (26) ஆரம்பமான அரச தனியார் ஒத்துழைப்பு தொடர்பாக ஆராயும்  தேசிய மாநாட்டில்  கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அத்துல் கேசாப்  இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், அரச தனியார் ஒத்துழைப்பு மாதிரியை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை மக்களிற்கும்…

Read More