Headlines

ரிஷாட் பதியுதீன் கிரிக்கட் கிண்ண சுற்றின் பரிசளிப்பு விழா!

புத்தளம், வேப்பங்குளம் 04 ஆம் கட்டையில் இடம்பெற்ற, ரிஷாட் பதியுதீன் கிரிக்கட் கிண்ண சுற்றின் இறுதிப் போட்டிப் பரிசளிப்பு விழாவில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அந்-நூர் விளையாட்டுக் கழகத்துக்கு வெற்றிக் கிண்ணத்தை வழங்கி வைத்தார். தௌபீக் மதனியின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதி அமைச்சர் அமீர் அலி, அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் ரிப்கான் பதியுதீன், புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் ஆகியோர் உள்ளிட்ட…

Read More

மருந்து முன்னேற்றம் குறித்து ஆராய குழு நியமிப்பு

நாடு பூராகவும் உள்ள மருந்து களஞ்சியசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருந்துகளை தட்டுப்பாடின்றி வழங்குவதற்காக மருந்து முன்னேற்றம் குறித்த பரிசீலனை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சரின் ஆலோசனைப்படி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி பாலித மஹிபாலவின் தலைமையிலான குழு அமைக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அரச மருந்தகக் கூட்டுத்தாபனம், அரச மருந்தக உற்பத்தி கூட்டுத்தாபனம், மருந்து விநியோக பிரிவு, தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளும் குறித்த குழுவில்…

Read More

வைத்தியர்களின் ஓய்வு வயதை 63ஆக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம்

வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயது தற்போது 60 ஆகும். ஆனால் இதை 63ஆக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன இதை கூறினார். மேலும், நாட்டில் தற்போது 1164 வைத்தியர்களுக்கான வெற்றிடம் காணப்படுவதாகவும் இவற்றை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், தற்போது உள்ள அனுபவமிக்க வைத்தியர்களின் ஓய்வூதிய வயதை மூன்று வருடங்கள் அதிகரிப்பதால் வைத்தியர்களுக்கு நிலவும் வெற்றிடங்களை கட்டுப்படுத்த முடியும் எனவும் அமைச்சர் ராஜித…

Read More

பல்கலை மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி ரத்து

பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளுக்­கான தலை­மைத்­துவ பயிற்­சியை நிறுத்­து­வ­தற்கு பல்­க­லைக்­க­ழக மற்றும் பெருந்­தெ­ருக்கள் அமைச்சு தீர்­மா­னித்­துள்­ளது. இது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, நாட­ளா­விய ரீதியில் உள்ள பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கு வரு­டந்­தோறும் புதி­தாக மாண­வர்­களை இணைத்­துக்கொள்ளும்போது முன்­னைய அர­சாங்­கத்தின் கீழ் மாண­வர்­க­ளுக்­கான தலை­மைத்­துவ பயிற்சி ஒன்று அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. அந்­த­வ­கையில் கடந்­த­கா­லங்­களில் வரு­டந்­தோறும் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு தெரி­வாகும் மாண­வர்கள் இந்த பயிற்­சி­களில் ஈடு­ப­டு­வது கட்­டா­ய­மா­ன­தாக இருந்­த­தோடு இவர்­க­ளுக்­கான பயிற்­சி­யா­னது இரா­ணு­வத்­தி­ன­ரா­லேயே வழங்­கப்­பட்டு வந்­தது. இவ்­வா­றான நிலையில் தேசிய அர­சாங்­கத்தின் கீழ் இது­வரை பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளுக்­காக வழங்­கப்­பட்டு…

Read More

வாழைச்சேனை  206 பிரதேசத்தில் தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா 

நேற்று 01.03.2017 ஆம் திகதி நியுஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஜெளபர்  தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் யுவதிகளுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு  இடம்பெற்றது. தையல் பயிற்சி முடிவில் தையல்  இயந்திரம் தங்களுக்கு வழங்கப்படும்  அதனை பயன்படுத்தி தங்களின் குடும்ப வருமானத்தை  உயர்த்தி கொள்ள முடியும் என்று குறிப்பிட்டார். இந்நிகழ்வில் பிரதி…

Read More

புதிதாக 10 விமானங்கள் கொள்வனவு

புதிதாக 10 விமானங்களை கொள்வனவு செய்வதற்கு சிவில் விமான சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவையின் விமானங்கள் பிரிவிற்கு வலுச்சேர்க்கும் நோக்கிலேயே இந்த விமானங்களை கொள்வனவு செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் டொக்டர் ரவீந்திர ருபேரு குறிப்பிட்டார். ஸ்ரீலங்கன் விமான சேவைக்கென தற்போது 23 விமானங்கள் காணப்படுவதாகவும் அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

Read More

துருக்கி பெண்கள் 3 குழந்தைகள் பெற வேண்டும்: அதிபர் எர்டோகன் வேண்டுகோள்

துருக்கியில் மக்கள் தொகை பெருக்கம் மிக குறைவாக உள்ளது. அங்குள்ள பெண்கள் அளவோடு குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். எனவே, துருக்கி பெண்கள் குறைந்த பட்சம் தலா 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள வேண்டும். அதன் மூலம் நாட்டின் மக்கள் தொகை பெருக்கத்துக்கு உதவ வேண்டும் என அந்நாட்டு அதிபர் ரிசெப் தாயப் எர்டோகன் கோரிக்கை விடுத்துள்ளார். பெண்ணாக பிறந்து விட்டால் அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவர்களின் வாழ்க்கை முழுமை பெறாது என்றும் அறிவுரை வழங்கினார்….

Read More

அஸ்ரப் விட்டுச் சென்றதை அமைச்சர் றிஷாத் பதியுதீன் செய்துவருகின்றார் -சுபைர்

இந்த நாட்டு முஸ்லிம் மக்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் 2 அல்லது 3 காதி நீதிமன்றங்களை மட்டுமே பெற்றுக்கொடுத்துள்ளது தவிர வேறு எதனையும் சாதிக்கவில்லை என தெரிவித்துள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர்,கிழக்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பக்கம் மக்கள் சாரி சாரியாக இன்று இணைந்து கொண்டிருப்பது மறைந்த மாமனிதர் மர்ஹூம் அஷ்ரப் சேர் அவர்களின் அரசியல் விழுதாக செயற்படும் அமைச்சரும்,எமது கட்சியின் தேசிய தலைவருமான றிசாத் பதியுதீனின் அரசியல் செயற்பாடுகளை கண்டு…

Read More

“தொழில் முனைவோருக்கான சர்வதேச மாநாடு 09ஆம் திகதி திருமலையில் ஆரம்பம்” அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அறிவிப்பு!

ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் முன்னணி சர்வதேச தொழில் முனைவோருக்கான கல்வித்தொடர் மாநாடு, இம்முறை முதல்தடவையாக இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில், ஒக்டோபர் 09 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். திருமலையில் 9,10,11 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள இந்த மாநாட்டின் இறுதி அமர்வு கொழும்பு, ஷங்கிரிலா ஹோட்டலில் நிறைவுறும் என அவர் தெரிவித்தார். யுனெஸ்கோ – எபீட் (UNESCO-APEID) நிறுவனமும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான தேசிய கைத்தொழில் அபிவிருத்தி…

Read More

மே தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்துத் திட்டம்

மே தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் ஊர்வலங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் காரணமாக கொழும்பு நகரின் வீதிகள் சிலவற்றை மூடுவதற்கு நேரிடுமென பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மேலும் சில வீதிகள் ஊடான வாகனப் போக்குவரத்தை மட்டுப்படுத்துவதற்கும் நேரிடும் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மாளிகாவத்தை பிரதேசத்தில், பிரதீபா மாவத்தை, ஜும்ஆ மஸ்ஜித் சந்தியிலிருந்து சங்கராஜ சுற்றுவட்டம் வரையான வீதிகள் மூடப்படவுள்ளன. பிற்பகல் ஒரு மணிமுதல்…

Read More

நாம் முட்டாள்கள் கிடையாது! டிலான்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தும் அளவிற்கும் நாம் முட்டாள்கள் கிடையாது என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Read More

பதவி விலக விருப்பம் தெரிவித்துள்ள ஜப்பான் மன்னர்

உலகின் பெரும்பாலான நாடுகளில் மன்னராட்சி முடிந்து, ஜனநாயகம் தழைத்தோங்கும் மக்களாட்சி நடைபெறத் தொடங்கி பல ஆண்டுகள் ஓடிவிட்டன. இருப்பினும் தங்களை ஆண்ட மன்னர்கள் மீது குடிமக்கள் பற்றும் பாசமும் வைத்திருக்கின்றனர். குறிப்பாக நிர்வாக பொறுப்பில் இல்லாதபோதிலும், பிரிட்டனில் மன்னர் குடும்பத்தினர், அந்நாட்டு அரசியலிலும், மக்கள் மனங்களிலும் முக்கியத்துவம் மிகுந்தவர்களாகவே காணப்படுகிறார்கள். அதேபோல், ஜப்பான் நாட்டிலும் மன்னர் குடும்பத்தினர் மீது மக்கள் மிகுந்த மரியாதைக் கொண்டுள்ளனர். இந்நிலையில், 82 வயதான ஜப்பான் பேரரசர் அகிஹிட்டோ, தனது அரியணையில் இருந்து…

Read More