Headlines

வுதியில் பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு ; இதுவரை 21 பேர் மரணம்

கிழக்கு சவுதி அரேபியாவில் அல் குவாடிப் மாகாணத்திலுள்ள ஒரு கிராமத்திலுள்ளது இமாம் அலி என்ற  ஷியா மசூதி பாரிய குண்டுவெடிப்பு சம்பம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்த மசூதியில் சியாக்கள் சுமார் 150 பேர்,  தொழுகையில் ஈடுபடும்போது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளதாக சவுதித் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெடிகுண்டு மிகுந்த சத்தத்தோடு வெடித்து சிதறியதாக சம்பவ இடத்தின் அருகே உள்ளவர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பில் சவுதி பொலிசார் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர்….

Read More

எம்மில் ஏற்படுகின்ற மாற்றமே சமூக மாற்றத்தைக் கொண்டு வரும் – இராஜாங்க அமைச்சர் அமீர் அலி

நாம் என்றும் ஒற்றுமைப்பட்டவர்களாக இருப்போமானால், எங்களுடைய பிரதேசத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களைச் செய்வதற்கு இறைவன் வாய்ப்பினைத்தருவான் என விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார். மீராவோடை றிழ்வான் பள்ளிவாயலுக்கு அமைச்சரினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியிலிருந்து நிறைவு செய்யப்பட்ட வேலைத்திட்டங்களை கையளிக்கும் நிகழ்வு சனிக்கிழமை (19) இஷாத்தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் அங்கு பேசுகையில், ஒவ்வொரு பிரதேசத்திலுமுள்ள பள்ளிவாயல்கள்…

Read More

எனக்கு கிடைக்கவிருந்த மேலுமொரு பிரதியமைச்சை, TNA தடுத்தது – அப்துல்லா மஹரூப் வேதனை

நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலில் அதிகாரங்களை  கைப்பற்றுவதன் ஊடாக எமது சமூகத்துக்கு விடிவு கிடைக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குறைந்த பட்சம் கிழக்கில் மாகாண சுகாதார அமைச்சையும் அதிகூடிய பட்சம் முதலமைச்சையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும், துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சருமான அப்துல்லா மஹரூப் தெரிவித்தார்.  தோப்பூரில் நேற்று ஞாயிற்றுக் கிழமை முன்னெடுக்கப்பட்ட  அபிவிருத்தி திட்டங்களை திறந்து…

Read More

யாழ்.பல்கலையில் மலர் வளையம்

யாழ்.பல்கலைக்கழகத்தில் நேற்று முதலாவது பேரவைக் கூட்டம் ஆரம்பமான நிலையில் பதிவாளர் அலுவலகத்தின் முன்பாக இனந்தெரியாதவர்களால் மலர் வளையம் வைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு என்று எழுதப்பட்ட வாசகமும் அதில் பொறிக்கப்பட்டுள்ளது. அதனை யார் வைத்தார்கள் என்பது அங்கள்ள எவருக்கும் தெரியாதுள்ளது. பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்கள் புதிதாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் முதல் கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதன் போதே பதிவாளர் அலுவலகத்தின் முன்பாக குறித்த மலர் வலையம் வைக்கப்பட்டுள்ளது.

Read More

அரச உத்தியோகத்தர் எவரும் பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது

அரச உத்தியோகத்தர்கள், அமைச் சின் செயலாளர்கள் உள்ளிட்ட அரசியல் உரிமையற்ற அனைத்து அரச உத்தி யோகத்தர்களும் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய, அரச சொத்துக்கள் தேர்தல் பிரசாரத்துக்காகப் பயன்படுத்தக்கூடாது என்றும் தெரிவித்தார். நேற்றுக் காலை தேர்தல்கள் திணைக்களத்தில் இடம்பெற்ற ஜனாதிப தித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக் கலின்போது, வேட்பாளர்க ளுக்கிடை யில் உரையாற்றியபோதே மேற் கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் தெரிவித்தவை வருமாறு,…

Read More

Disaster Risk Management தொடர்பான கலந்துரையாடளில் பிரதியமைச்சர் அமீர் அலி..

Disaster Risk Management தொடர்பான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்  அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் தலைமையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில்  அனர்த்த முகாமைத்துவ  அமைச்சர் கௌரவ  அநுர பிரியதர்சன யாப்பா கலந்து கொண்டார். இக்கலந்துரையாடலில்  இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், ஸ்ரீநேசன் மற்றும்  அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 

Read More

உயர்ஸ்தானிகர் மீதான தாக்குதல்! மலேசிய அரசாங்கம் வருத்தம்!

மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர், கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டமை குறித்து மலேசிய அரசாங்கம் தமது கவலையை வெளியிட்டுள்ளது கடந்த 4ஆம் திகதியன்று உயர்ஸ்தானிகர் அன்சார் தாக்குதலுக்கு உள்ளானார். இதன்போது அவர் சிறுகாயங்களுக்கு உள்ளானார். இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மலேசிய அரசாங்கம் கவலை கொள்வதாக அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர்தெரிவித்துள்ளார். அத்துடன் குற்றவாளிகள் விரைவில் நீதிக்கு முன் நிறுத்தப்படுவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதை இலங்கை உயர்ஸ்தானிகரத்துடன் இணைந்து உறுதிப்படுத்தவுள்ளதாகவும்தெரிவித்துள்ளார்….

Read More

மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாயலில் புனித குர்ஆனை வீசி எறிந்து இஸ்ரேலிய இராணுவம் அட்டகாசம் (photo)

முஸ்லிம்களின் புனித இடமாக கருதப்படும் மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாயலில் இஸ்ரேலிய இராணுவம் இன்று அட்டகாசம் செய்துள்ளது. 1967 இல் இருந்து மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாயலை ஆக்கிரமித்து பல்வேறு ஆட்டூளியங்க்களை புரிந்து வரும் இஸ்ரேலிய இராணுவம் முஸ்லிம்கள் அங்கு சென்று தொழுவதையும் தற்போது தடை செய்துள்ளது. அதனை தொடர்ந்து பாலஸ்தீன பொதுமக்கள் இஸ்ரேலிய இராணுவம் மீது கல் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் இஸ்ரேல் போலீசார் மற்றும் இராணுவத்தினர் சப்பாத்துக் காலுடன் பள்ளிவாயளுக்குள் நுழைந்து தளபாடம், கட்டிடத்தை உடைத்ததுடன்,…

Read More

கண்ணீரை சிந்தவைக்கும் நேர்மை – சவூதி அரேபியாவில் நடைபெற்ற உண்மைச் சம்பவம்..!

சவூதி அரேபியாவைச் சார்ந்த ஒருவர் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார் அந்த நிறுவனத்தில் இருந்து விலகிவிட்ட பிறகு அந்த நிறுவனம் தவறுதலாக இவரின் வங்கி கணக்கிர்கு ஓரு இலட்சம் சவுதி ரியால்களை அனுப்பிவிட்டது (சுமார் 37 லட்சம் இலங்கை  ரூபாய்) தனது கணக்கில் ஒரு இலட்சம் ரியால் வந்ததை கண்ட அந்த மனிதர் அது தமக்கு உரியதல்ல என்பதை உறுதி படுத்தியதும் அந்த பணத்தை வங்கி கணக்கிலிருந்து விடுவித்து உரிய நிறுவனத்தை தேடி சென்று ஒப்படைத்தார்…

Read More

எமக்­கான புதிய பாதை­யினை ஆரம்­பித்­துள்ளோம், முஸ்லிம்களையும் இணைத்துக்கொண்டு பயணிக்க தயார் – ஞான­சாரர்

இஸ்லாமிய சமய நடவ­டிக்­கை­க­ளுக்­காக நாம் முரண்­ப­ட­வில்லை. இந்த நாட்டை இஸ்­லா­மிய மயப்­ப­டுத்தும் முயற்சிகளுக்காகவே நாம் போராடினோம். இப்போதும் எமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இலங்கையின் உண்மையான மதம் பௌத்தம் மட்டுமே. அதை பாதுகாக்க வேண்டியது எம் ஒவ்வொருவரதும் கடமை. அந்த கடமையினையே நாம் செய்து வருகின்றோம் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார் . பெளத்த சிங்கள மக்களை பாது­காக்க தாம் புதிய அரசியல் பாதையினை உருவாக்கவுள்ளதாகவும்,…

Read More

பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் முயற்சியில் மையவாடி சுற்றுமதில் நிர்மாணிப்பு.

  தம்பலகமம் , சிராஜ் நகர் மையவாடி சுற்றுமதில் 10 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிப்பு பாராளுமன்ற உறுப்பினருர் அப்துல்லா மஹ்ரூப் முயற்சியில் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அவர்களின் உதவியுடன் தம்பலகமம் , சிராஜ் நகர் மையவாடி சுற்றுமதில் 10 இலட்சம் ரூபா நிதி பெற்றுகொடுகபட்டு நிர்மாணிப்பு பணிகள் ஆரம்பிக்கபட்டுள்ளது. இவ் வேலைத்திட்டம் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர்…

Read More