Headlines

ஓவன் மேல் சார்ஜில் போடப்பட்டிருந்த தொலைபேசி தொடர்பிலான அதிர்ச்சி தகவல்

– எம்.எப்.எம்.பஸீர் – தெஹிவளை, கவுடான வீதியில் உள்ள மூன்று மாடிகளைக் கொண்ட வீடொன்றின் கீழ் மாடியில் இருந்து, கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் அவரது குடும்பத்தார் சகிதம் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸ் நிலையத்தின் சிறப்புக் குழுவினர்  விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். வீட்டின் ஒரு பகுதியை மட்டும் தீ எப்படி ஆக்கிரமித்தது, அதற்கான காரணம் என்ன போன்ற கேள்விகளுக்கு விடையை அறியவும் மரணமடைந்த நால்வரின் மரணத்துக்கு காரணம் என்ன என்பதை உருதி செய்துகொள்ளவுமே மேலதிக விசாரணைகள்…

Read More

சல்மான் எம்.பி அவசர அவசரமாக இராஜினாமாச் செய்ததன் பின்னணி என்ன? அமைச்சர் ரிஷாட் விபரிப்பு!

  -ஊடகப்பிரிவு- அம்பாறை மாவட்டத்தில் மயில் வீரியம் கொண்டு தோகை விரித்தாடுவதைக் கண்டு அச்சம் கொண்ட காரணத்தினால்தான் பாராளுமன்ற உறுப்பினர் சல்மானை இராஜினாமா செய்ய வைத்துவிட்டு, அந்தப் பாராளுமன்ற உறுப்புரிமையினை அம்பாறை மாவட்டத்திற்கு வழங்க நாங்கள் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூறி வருகின்றது. ஆகையினால், அம்பாறை மாவட்ட மக்கள் மயில் சின்னம் கொண்ட கட்சிக்கு நன்றிகளை தெரிவிக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்….

Read More

யாழ் ஒஸ்மானியா மைதானத்தில் சிறுவர் பூங்கா அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்ட கால அகதிகளின் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் விசேட நிதியொதுக்கீட்டில், இருபது இலட்சம் ரூபா செலவில் யாழ் / ஒஸ்மானியா மைதானத்தில் சிறுவர் பூங்கா அமைப்பதற்கான வேலைத்திட்டம் நடைபெறுகின்றது. மேற்படி வேலைத்திட்டங்களை இன்று (01)அகில இலங்கை மக்கள் காங்கிரசின் யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம்.நியாஸ் நிலாம் மற்றும் அமைச்சரின் செயற்திட்ட இணைப்பாளர் முஜாஹித் நிசார் ஆகியோர் பார்வையிட்டனர்.

Read More

சாரதி அனுமதிப்பத்திரங்கள் சர்வதேச தரத்தில்

முகம்மட் பஹாத் இலங்கையின் சாரதி அனுமதிப்பத்திரம் சர்வதேச தரத்தில் உருவாக்கப்படவுள்ளது. வெகுவிரைவில் சர்வதேச தரத்திலான சாரதி அனுமதிப்பத்திரம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார். வியன்னா சர்வதேச பிரகடனத்திற்கு அமைவான போக்குவரத்து விதிகள் வர்த்தமானியில் அறிவிக்கப்படவுள்ளன. இதன் பின்னர் இலங்கை சாரதி அனுமதிப்பத்திரமும் சர்வதேச தரத்திற்கு உயர்வடைந்துவிடும் என அவர் தெரிவித்துள்ளார். இதேநேரம், சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை இணையத்தின் ஊடாக மேற்கொள்ளக்கூடிய வசதிகள் விரைவில் ஏற்படுத்தப்பட உள்ளன எனவும் தெரிவித்தார்.

Read More

விவசாய நடவடிக்கைகளில் நவீன உத்திகளைப் பயன்படுத்தி மலர்ச்சியை ஏற்படுத்துவோம் – மன்னார் களஞ்சியசாலைத் திறப்புவிழாவில் அமைச்சர் ரிஷாட்!!!

(அமைச்சின் ஊடகப்பிரிவு) விவசாய நடவடிக்கைகளிலே நவீன உத்திகளைப் புகுத்தி அந்தத் தொழிலை பாரிய இலாபமீட்டும் தொழிலாக மாற்றியமைப்பதே நல்லாட்சி அரசின் நொக்கமாகுமென்றும் அதற்காகவே அரசாங்கம் புதிய திட்டங்களை முன்னெடுத்துவருவதாகவும் அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார். மன்னார் நானாட்டனில் நிதி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட அரசாங்க  தானியக் களஞ்சியத்தை நிதி அமைச்சர் ரவிகருணாயக்க இன்று மாலை (26. 01. 2017) திறந்து வைத்த நிகழ்வில் இந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார். சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்…

Read More

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சவூதி சகோதரர்கள் உதவி

-அஸ்பாக் – அல் கிம்மா நிறுவனமானது நாடலாவிய ரீதியில் மேற்கொண்டு வரும் சமூகப்பணிகளின் தொடரில் அன்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ள அனர்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாத்தியமான உதவிகளை வழங்கி வருகின்றது. எமது நிறுவனம் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட மக்களின் நிலமைகளை அறிந்து கொண்டு தொடர்ந்தும் துரிதமான உதவிகளையும் செய்து வருகிகிறது. அந்த வகையில்  வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வெள்ளம்பிட்டிய கொலன்னாவ மக்களுக்கும் தனது உதவிகளை வழங்கியது சுமார் 300 குடும்பங்களுக்கு உலர்உணவு, பாய், தலையனை உள்ளிட்ட பொருட்களையும் பாடசாலை…

Read More

வீரமுனை வட்டார வீட்டுக்கு வீடு தேர்தல் பிரச்சாரம்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் வீரமுனை வட்டார வேட்பாளரான ஏ.சி.எம்.சஹீலின் தலைமையில்,  வீரமுனை வட்டத்தின் (உடங்கா 2) வீட்டுக்கு வீடு பிரச்சாரத்தின் இரன்டாம் நாள் நிகழ்துவு இன்று (13 )  இடம்பெற்றது. இந்த தேர்தல் பிரசாரத்தின் போது, முன்னாள் பிரதேச சபை தவிசாளரும், சம்மாந்துறை பிரதேச சபையின் முதன்மை வேட்பாளருமான ஏ.எம்.எம்.நெளஷாட், வேட்பாளர்களாகிய டாக்டர்.ரஷீட் மற்றும் யாஸ்தீன் ஆகியோர் உட்பட பலர்  பங்கேற்றிருந்தனர்.    

Read More

மு.கா முன்னாள் மூதூர் பிரதேச சபை உறுப்பினர் ஹரீஸ் மக்கள் காங்கிரஸில் இணைவு!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்  கட்சியினுடைய மூதூர்  முன்னாள் பிரதேச சபை தவிசாளரும், அக்கட்சியின் உயர்பீட உறுப்பினரும், தற்போதைய பிரதேச சபை உறுப்பினருமாகிய  ஏ.எம்.ஹரீஸ் ஆசிரியர், அவருடைய ஆதரவாளர்களுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டார் . மூதூர், பேர்ல் கிரேன்ட் ஹோட்டலில் நேற்று (21) இடம்பெற்ற குறித்த நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் அவர்களின் முன்னிலையில் இணைந்துகொண்டார்….

Read More

‘இந்திய பிரதமரின் உரை வேதனையளிக்கின்றது’

மலையக மக்களை மறந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்றத்தில் நேற்று ஆற்றிய உரையானது வேதனையளிப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் தொப்புள் கொடி உறவுகளை மறந்து பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை வேதனையளிக்கின்றது. இதற்காக, மலையக மக்களின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நான் வருந்துகிறேன். இது அவர், எமது சமூகத்தை சரியாக புரிந்துகொள்ளவில்லை என்பதையே…

Read More

வத்தளை பள்ளிவாயலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

கம்பஹா மாவட்டத்திலுள்ள வத்தளை, திப்பிட்டிகொட பள்ளிவாசலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று (01) மஹர நீதிமன்த்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது. குறித்த பள்ளிவாசலினால் பொதுமக்களுக்கு தொல்லை எனத் தெரிவித்து இந்தப் பள்ளிவாசலுக்கு எதிராக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் கிரிபத்கொட பொலிஸாரினால் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து பள்ளிவாசலில் தொழுகை மேற்கொள்வதற்கும் நிர்மாணத்திற்கும் நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும் ஆர்.ஆர்.டி சட்ட ஆலோசனை அமைப்பு, இந்த வழக்கிற்கு எதிராக கடந்த ஒன்றரை வருடங்களாக போராடியதுடன் இந்த பள்ளிவாசல் முஸ்லிம்…

Read More

மதுகம மஜிஸ்திரேட் நீதிமன்றம் ஞானசார தேரருக்கு பிடிவிறாந்து

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக மத்துகம மஜிஸ்திரேட் நீதிமன்றம் கண்ட இடத்தில் கைதுசெய்வதற்கான வாரண்ட் ஒன்றை பிறப்பித்துள்ளது. கடந்த பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின்போது களுத்துறை வெளிபென்ன பிரதேசத்தில் உள்ள பௌத்த விகாரைக்குள் பிரச்சாரக் கூட்டமொன்றை நடத்தியதால் ஞானசார தேரர் தேர்தல் சட்டங்களை மீறியதாக வழக்கு தொடரப்பட்டது. பிரச்சாரக் கூட்டத்தை பொது இடத்தில் நடத்துவதற்கு பொதுபல சேனாவிற்கு அனுமதி வழங்கியிருந்த போதிலும் முன்னறிவித்தல் எதுவுமின்றி பிரச்சாரக்கூட்டத்தின் இடத்தை மாற்றியதாக வெளிபென்ன பொலிஸார் நீதிமன்றத்தில்…

Read More

டெல்லி சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை: ஆம் ஆத்மி -57. பா.ஜ.க- 12 தோல்வி. காங். ‘முட்டை’!! படுதோல்வி

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 57 இடங்களில் முன்னிலை வகித்து அபார வெற்றி பெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சியோ 12 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. 3 தொகுதிகளையாவது வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சிக்கு “முட்டை”தான் கிடைத்துள்ளது. டெல்லியில் கடந்த 2013 இறுதியில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் 28 இடங்களை கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி 8 இடங்களை பிடித்த காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. ஜன்லோக்பால் மசோதாவை…

Read More