Headlines

வடக்குக்கான ரயில் போக்குவரத்து பாதிப்பு

வடக்கு ரயில் மார்க்கத்தை இடைமறித்து ரயில் கடவை ஊழியர்கள் ஆர்ப்பாட்டமொன்றை இன்று காலை முதல் முன்னெடுத்துள்ளனர். அநுராதபுரம் – மதவாச்சி ஆகிய பகுதிகளுக்கு இடையில் ரயில் பாதையில் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக வடக்குக்கான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து காங்கேசன்துறை மற்றும் மன்னாரிலிருந்து கொழும்புக்கு பயணித்த ரயில்கள், மதவாச்சி ரயில் நிலையத்துக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்குமாறு கோரிக்கை விடுத்து இவர்கள் ரயில் பாதையை மறித்து…

Read More

முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்க்க பிரதமருடன் முஸ்லிம் கவுன்சில் பேச்சு அமைச்சர்களான ரிஷாட் , கபீர் பங்கேற்பு!

முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பல பிரச்சினைகள் குறித்து முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்சில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்றத்தில் புதனன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி பெற்றோலிய வள அமைச்சர் கபீர் ஹாஷிமின் ஏற்பாட்டில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பங்கேற்புடன் பாராளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற இப்பேச்சு வார்த்தையில் , தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினை , கொழும்பு தெற்கில் ஆண் பாடசாலை ஒன்றை அமைத்தல்,மௌலவி ஆசிரியர் நியமனத்தை துரிதப்படுத்தல் ,கொல்லன்னாவை பிரதேசத்தில் தமிழ் மொழி மூலப்பாடசாலை ஒன்றை அமைத்தல், யாழ்ப்பாணத்தில்…

Read More

நாட்டின் கடன்தொகை இரட்டிப்பாகியுள்ளது!- மஹிந்த

நாட்டின் கடன்தொகையானது இரட்டிப்பாகியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த கால அரசு பெற்ற கடன் தொடர்பில் பிரச்சாரங்கள் செய்வதற்குதற்போதைய அரசாங்கம் அதிக பணங்களை செலவு செய்வதாகவும், இதனை சேமித்தால்மக்களுக்காக உதவிகளையாவது செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று பண்டுவஸ்நுவர விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே மஹிந்தஇவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தமது 9 வருட அரசாங்கத்தில் பெற்ற கடனைவிட கடந்த ஒன்றரை வருடங்களிலநல்லாட்சி பெற்ற கடனானது இரட்டிப்பு என்றும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

Read More

ஆசிய பசுபிக் வீடமைப்பு அமைச்சர்களின் மாநாடு

இந்தியாவில் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசிய பசுபிக் வீடமைப்பு அமைச்சர்களின் மாநாட்டில் இலங்கை சார்பாக அமைச்சர் சஜித் பிரேமதாசவின் தலைமையிலான தூதுக்குழுவினர் கலந்துகொள்ளவுள்ளனர் ஆசிய பசுபிக் வலய நாடுகளின் வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர்களின் நாட்டில் அமுல்படுத்தப்படவிருக்கும், வீடமைப்பு மற்றும் குடியிருப்பு செயற்பாடுகளுக்கான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதே இதன் நோக்கமாகும். மாநாடு எதிர்வரும் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. வீடமைப்பு, குடியிருப்பு அபிவிருத்தி, நகரமயமாதல், போன்ற…

Read More

தலாவையில் நீர் சுத்திகரிப்பு இயந்திர நிலையம்

சிறுநீரக நோயை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கை கடற்படை, மேற்கொள்ளும் சமூகசேவை நிகழ்ச்சியில் ஒரு அங்கமாக தலாவை மகா வித்தியாலத்தில் நிறுவிய “ரிவேர்ஸ் ஒச்மொசிஸ்” நீர் சுத்திகரிப்பு இயந்திர நிலையம் அண்மையில் (29) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன, ஒன்லைன் தொழிநுட்பம் மூலம் கலந்து கொண்டார். கடற்படை தளபதியின் ஒரு எண்ணக்கருவில், கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் அதன் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப திறனைக் கொண்டு இந்நீர் சுத்திகரிப்பு…

Read More

சீன, சிங்கப்பூர் உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்ட பின்னர் இலங்கையின் இறக்குமதியில் மற்றுமொரு பாய்ச்சல்

இலங்கையுடனான சீனாவினதும், சிங்கப்பூரினதும் சுதந்திரவர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர்; சுங்கத் தீர்வையற்ற கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்குக்கு குறைவில்லாத பொருட்களை இலங்கை இறக்குமதி செய்யமுடியுமென்று  உலக வர்த்தக மையத்தின் பிராந்திய வர்த்தக உடன்படிக்கைகள் பிரிவின் தலைவர் டாக்டர். ரோகினி ஆச்சார்ய இவ்வாறு தெரிவித்தார். கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான வர்த்தக திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ‘உலக வர்த்தக மையமும், பிராந்திய வர்த்தக உடன்படிக்கைகளும்’ என்ற தலைப்பிலான தேசிய செயலமர்வில் உரையாற்றிய போதே…

Read More

MH370 விமானம் மாயமான முதலாம் ஆண்டு நிறைவுக்கு முந்தைய தினம் அறிக்கை!

கடந்த வருடம் மார்ச் 8 ஆம் திகதி மலேசியன் ஏர்லைன்ஸின் MH370 விமானம் 239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து பீஜிங் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது நடுவானில் மாயமாகி இருந்தது. காணாமற் போன இவ்விமானத்தின் மர்மம் ஏவியேஷன் வரலாற்றிலேயே மிகவும் புதிர் மிக்கதாகவும் இன்று வரை சிறிய ஒரு தடயமும் கிடைக்காத ஒன்றாகவும் பதியப் பட்டுள்ளது. மேலும் இதைத் தேடும் பணியும் விமானவியல் வரலாற்றில் அதிகளவு பணம் செலவழித்துத் தேடப் பட்ட ஒன்றாக மாறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்…

Read More

மஹிந்தவின் அலுவலகத்திற்கருகில் ஒருவர் கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்திற்கருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய ஒருவர்  கைதுசெய்யப்பட்டுள்ளனர். பத்தரமுல்லையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷவின் காரியாலயத்திற்கருகில் இன்று மதியம் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நிலையிலேயே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

சிறுவர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

ஆபத்துக்களில் இருந்து சிறுவர்களை பாதுக்கும் வகையில் மக்களுக்கும் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மன்னார் பொலிஸாரால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நேற்றுக் காலை மன்னாரில் நடைபெற்றது. மன்னார் பொலிஸ் நிலைய தலைமையக பொறுப்பதிகாரி அஜந்த ரொட்ரிகோ தலைமையில் மன்னார் நீதிமன்ற பிரதான வீதியில் மு.ப. 10.30 மணியளவில் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் ஆரம்பமானது. குறித்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் சிறுவர்களை ஆபத்துக்களில் இருந்து பாதுகாக்கும், சிறு வர்களுக்கு எவ்வாறான வகையில் ஆபத்துக்கள் ஏற்படுகின்றது என்பதைத் தெளிவுபடுத்தும்…

Read More

த.தே.கூ. கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் மக்களுக்காக பேசாமல் ஊடகங்களுக்காக பேசுகின்றனர் –  பிரதியமைச்சர் அமீர் அலி

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மக்களுக்காக பேசாமல் ஊடகங்களுக்காக பேசுகின்றனர் என கிராமிய பொருளாதர அபிவிருத்தி பிரதியமைச்சர்; எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று(28.12.2016) புதன்கிழமை நடைபெற்ற கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வாழ்வதார உபகரணங்கள் வழங்கி வைக்கும் வைபவத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய அவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் அன்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஊடக நண்பர்களை நான் அச்சுறுத்துவதாகவும் பயமுறுத்துவதாகவும் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்திற்கு…

Read More

சதொசவில் ஊழல் நடைபெற்றதாக கூறுப்படுவது அப்பட்டமான பொய் – டாக்டர் ரொஹாந்த

கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் சதொச நிறுவனத்தை பொறுப்பேற்றதன் பின்னர் ஊழல்களும் மோசடிகளும் இடம்பெற்றதாக கூறப்படுவது ஓர் அப்பட்டமான பொய்யென்று சதொச நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ரொஹாந்த அத்துக்கோரள அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சதொச நிறுவனத்தை பொறுப்பேற்ற போது ரூபா 15 கோடி நஷ்டத்தில் அந்த நிறுவனம் இயங்கிக்கொண்டிருந்தது. அதனால் அந்த நிறுவனத்தின் தொழிற்பாடுகள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக KPMG நிறுவனம் பணிக்கமர்த்தப்பட்டது. அந்த நிறுவனம்…

Read More

தோப்பூர் நீனாக்கேணி காணிபிரச்சினைக்கு தீர்வுக்காக நீனாக்கேணி வில்கம் விகாரை தேரரை சந்தித்த அப்துல்லா மஹ்ரூப் தலைமையிலான குழுவினர்.

  தோப்பூர் நீனாக்கேணி காணிபிரச்சினை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவருமான அப்துல்லா மஹ்ரூப், முன்னாள் பிரதேச சபை தலைவர் பௌசி, இணைப்பாளர் ரசாக் நளீமி, நீனகேணி மஸ்ஜிதுல் ஹுதா ஜும்மா பள்ளிவாசல் பிரதித்தலைவர் அடங்கலாக இன்று பிற்பகல் நீனாக்கேணி வில்கம் விகாரை தேரரை சந்தித்து இப்பிரதேசத்தில் இருக்கும் காணி முஸ்லீம்களுடைய பூர்வீகக்காணியாகவும் பல நூறு வருடம் பராமரிக்கப்ட்டதுமாகவும் காணப்படுவதோடு காணிக்கான உறுதிப்பத்திரம் உட்பட உரிமத்துவதுக்கான சகல ஆவணங்களும் எமது சகோதரர்களிடம் காணப்படுவதையும் காண்பித்து விகராதிபதிக்கு…

Read More