உயர் நீதிமன்ற நீதியரசராக சுஜீவ ஜயவர்தன நியமனம்
ஜனாதிபதி சட்டத்தரணி சுஜீவ ஜயவர்தன உயர் நீதிமன்ற நீதியரசராக நேற்று (16) பதவியேற்றார்.
ஜனாதிபதி சட்டத்தரணி சுஜீவ ஜயவர்தன உயர் நீதிமன்ற நீதியரசராக நேற்று (16) பதவியேற்றார்.
ஊவா, வெல்லஸ்ஸ பிரதேசத்தில் 200 குளங்கள் அமைக்கப்படவுள்ளதாக நீர்பாசன அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸா தெரிவித்துள்ளார். அதன் பிரகாரம், இன்னும் இரண்டு வருடங்களுக்குள் நவோதய திட்டத்தின் கீழ் இந்தக் குளங்கள் அமைக்கும் பணியானது நிறைவு பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மொனராகல பிரதேசத்தில் நேற்று (16) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பிரபல ஊடகவியலாளரும், அதிபருமாகிய ஏ.ஆர்.எம்.ஜிப்ரி கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனின் பாராளுமன்ற அலுவல்கள் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கல்முனையைப் பிறப்பிடமாக கொண்ட இவர், பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரி, பாணந்துறை அல்-பஹ்ரியா மத்திய கல்லூரி, களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி ஆகிய 1 ஏபீ தரப் பாடசாலைகளில் அதிபராகக் கடமையாற்றியுள்ளார். கல்வி இளமாணி (சிறப்பு), கல்வி முதுமாணி, விசேட கல்வி டிப்ளோமா, விவசாய டிப்ளோமா ஆகிய பட்டங்களையும் பெற்றுள்ள இவர், கடந்த 2010 ஜனவரி முதலாம் திகதி…
வவுனியா நகரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலைய நிர்மாணப் பணிகளை அடுத்த வாரம் ஆரம்பிக்க முடியுமென அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று (16/06/2016) நம்பிக்கை வெளியிட்டார். வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் அதன் இணைத்தலைவர்களான அமைச்சர் றிசாத் பதியுதீன், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்று முடிந்த பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அமைச்சர் கூறியதாவது, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர்…
ஜனாதிபதி சட்டத்தரணி திரு.பிரசன்ன சுஜீவ ஜயவர்தன உயர் நீதிமன்ற நீதியரசராக இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்தார். அத்துடன் பாரதூர ஊழல், மோசடி மற்றும் அரச சொத்துக்கள், வரப்பிரசாதங்கள், அதிகாரம் ஆகியவற்றை முறைகேடாக பயன்படுத்துதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் புதிய உறுப்பினராக மேல் நீதிமன்ற நீதிபதி திரு.பியசேன ரணசிங்க இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபேகோனும்…
அரநாயக்க சுகாதார வைத்திய அலுவலகத்தில் தற்போது நடைபெற்றுவரும்அபிவிருத்திக் குழு கூட்டத்துக்கு வருகை தந்துள்ள அமைச்சர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா, கபீர் ஹாசிம் உள்ளிட்டவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அமைச்சர்களின் வாகனங்கள் திரும்பிச் செல்ல முடியாதவாறு சிலர் வீதியில் படுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் அரநாயக்கவில் இடம்பெற்ற மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 11 மீனவர்களுக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால் இன்று வியாழக்கிழமை (16) தீர்ப்பளித்தார். அத்துடன், இந்த மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 384 கிலோகிராம் மீன்கள், நீதவானின் உத்தரவுக்கமைய, நீதிமன்றத்தில் வைத்து நீதவான் முன்னிலையில் ஏல விற்;பனை செய்து, 64,500 ரூபாய் வருமானமும் பெறப்பட்டது. குருநகர் பகுதியைச் சேர்ந்த 11 மீனவர்களும் 3 நாட்டு படகுகளில் தடை செய்யப்பட்ட தங்கூசி…
பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த ஏராளமான கோடீசுவரர்கள் வெளிநாடுகளில் போலி நிறுவனங்கள் பெயரில் முதலீடு செய்து வரி ஏய்ப்பு செய்து வந்துள்ளனர். இது தொடர்பான சட்ட ஆவணங்களை, பனாமாவை மையமாக கொண்டு செயல்படும் ‘மொசாக் பொன்சேகா’ என்ற சர்வதேச நிறுவனம் பாதுகாத்து வருகிறது. இந்த நிறுவனம் ரகசியமாக வைத்திருந்த ஏராளமான ஆவணங்கள் பனாமா லீக்ஸ் என்ற பெயரில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி உலக அளவில் பெரும் பரபரப்பை உருவாக்கியது. இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், பாகிஸ்தான்…
21-ம் நூற்றாண்டில் இந்தியா-இலங்கை உறவு என்ற தலைப்பிலான கருத்தரங்கம் கொழும்பில் உள்ள பண்டார நாயக்கா சர்வதேச படிப்பகத்தில் நடைபெற்றது. இதில், இலங்கைக்கான இந்திய தூதர் ஒய்.கே.சின்கா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் சிறிசேனா அதிபரான பிறகு இந்தியா-இலங்கை உடனான உறவு வலுவடைந்துள்ளது என்று கூறினார். மேலும் அவர் பேசியதாவது:- சிறிசேனா பதவியேற்ற பிறகு பல்வேறு உயர் மட்ட அதிகாரிகள் மட்டத்திலான சுற்றுப் பயணம் இருநாடுகளிடையே நடைபெற்றது. முதலில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு…
சவூதி அரேபியாவில் சாரதி அனுமதிப்பத்திரத்தை துரிதமாக புதுப்பித்துக்கொள்ள புதிய முறையை அந்த நாட்டு போக்குவருத்து துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கமைவாக சாரதி அனுமதிபத்திரத்துக்கு விண்ணப்பித்து 72 மணித்தியாலங்களுக்குள் அல் வெசல் சேவை ஊடாக உங்கள் முகவரிக்கே அனுப்பப்படுமென அந்த நாட்டு போக்குவருத்து துறை அறிவித்துள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்களை சவூதி அரேபிய போக்க்குவர்த்து திணைக்களத்தில் பெற்றுக்கொள்ள முடியும்..
-அபூ செய்னப் – மூத்த அரசியல்வாதி அலவி மௌலானா அவர்களது மரணச்செய்தியானது மிகுந்த கவலையையும்,மன வேதனையையும் உண்டு பண்ணியுள்ளது. அவர் நிரப்ப முடியாத அரசியல் வெற்றிடமாகும். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிஊன். அவரது இழப்பு இலங்கை முஸ்லிம் அரசியலுக்கு பேரிழப்பாகும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். அஷ்ஷெய்க் அலவி மெளலானா அவர்களின் மரணச்செய்தியை கேள்வியுற்றதும் பிரதியமைச்சர் வழங்கிய இரங்கல் செய்தியில் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கூறுகையில், இலங்கையின் மூத்த…
மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் பூதவுடலை, அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் வெலிக்கடை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. காலமான, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் இறுதிக் கிரியைகளை மேற்கொள்ள, பூதவுடலை தம்மிடம் கையளிக்குமாறு உறவினர்கள் முன்வைத்த கோரிக்கையையடுத்து, நீதிமன்றம் இந்த உத்தரவை பிரப்பித்துள்ளது.