Headlines

சர்வதேச கணித போட்டியில் இலங்கை மாணவர்கள்

தாய்லாந்தில் சிஅன்காமாய் என்ற நகரில் நடைபெறவுள்ள 2016 சர்வதேச கணித போட்டியில் இலங்கை மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளவனர். இம் மாதம் 14 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ளவுள்ள மாணவர்களுக்கான  விமான பயணச்சீட்டுக்களை கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் சமீபத்தில் வழங்கினார். தேசிய ரீதியில் தகுதி பெற்ற அணித்தலைவர்கள் நான்கு பேருக்கும் 16 மாணவர்களுக்குமான விமான பயணச்சீட்டுக்கள் இதன் போது வழங்கப்பட்டன. இந்தப் போட்டியை தாய்லாந்தின் அடிப்படை கல்வி…

Read More

தேசத்திற்கு மகுடம் கண்காட்சி நடைபெறாது: உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு

சுதந்திர தினத்துக்கு பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தினால் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டுவரை தேசத்திற்கு மகுடம் கண்காட்சி நடத்தப்பட்டது. 2007,2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் மற்றும் வளாகத்திலும் 2010ஆம் ஆண்டு கண்டியிலும் 2011ஆம் ஆண்டு மொனராகலையிலும் 2012ஆம் ஆண்டு அநுராதபுரத்திலும் 2013ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்திலும் 2014ஆம் ஆண்டு குளியாப்பிட்டியவிலும் நடத்தப்பட்டது. 2015ஆம் ஆண்டு மாத்தறையில் நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம் ஏற்கெனவே தீர்மானித்திருந்தமை…

Read More

ஜனாதிபதி தேர்தலுக்காக வேட்பு மனுத் தாக்கல் செய்த இரண்டு வேட்பாளர்கள் மகிந்தவை ஆதரிப்பதாக அறிவிப்பு

ஜே.வி.பியின் ஜனநாயகத்திற்கான செயற்பாட்டார்கள் அமைப்பின் தேசிய அமைப்பாளர் அனுருத்த பொல்கம்பொல ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார். நேற்று அவர் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார். இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை தேசிய முன்னணியின் தலைவர் டொக்டர் விமல் கீகனகே ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்திருந்தார். இதன்படி, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தி வேட்பு மனுத் தாக்கல் செய்த ஜனாதிபதி மஹிந்த மற்றும் மைத்திரிபால சிறிசேனவைத் தவிர்ந்த ஏனைய 17 பேரில் இருவர் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர்….

Read More

வெற்றிலைக்கு வாக்களிக்க வேண்டாம் – சந்திரிக்கா பகிரங்க அறிவிப்பு

ஊழல்களில் ஈடுபடும் தனிநபர்களிடமிருந்து எமது நாட்டை காப்பாற்றவேண்டும் என்றால், நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் வெற்றிலை மற்றும் கை சின்னங்களைத் தவிர வேறெந்த விலங்குக்கு வேண்டுமென்றாலும் வாக்கயுங்கள் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கா தெரிவித்துள்ளார். ஒரு தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்காகவே கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதியன்று, ஐ.தே.க, ஹெல உறுமய, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினர் மற்றும் இடதுசாரி கட்சிகள் அனைத்தும் கைக்கோர்த்தன என்றும் அவர் குறிப்பிட்டார். எம்பிலிபிட்டிய மற்றும் எஹெலியகொட ஆகிய…

Read More

சிங்க லே அமைப்புக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

சிங்க லே அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகன ஊர்வலம் மற்றும் கூட்டம் என்பனவற்றுக்கு நீதிமன்றத்தில் பொலிஸார் இடைக்காலத் தடை உத்தரவொன்றைப் பெற்றுள்ளனர். இந்த தடை உத்தரவை பதுளை நீதிமன்ற மேலதிக நீதவான் ஆர்.எம்.பி.சீ. ரத்நாயக்க பிறப்பித்துள்ளார். பண்டாரவளையிலிருந்து பதுளை நோக்கி வாகனப் பேரணியில் வந்து நேற்று (7) மாலை முதியங்கன ரஜமகா விகாரையில் கூட்டமொன்றை நடாத்த சிங்க லே அமைப்பு தயாராகி வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை வைத்து பொலிஸார் தடை உத்தரவைப் பெற்றுள்ளதாகவும்…

Read More

அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான பலசேனவின் சோடிக்கப்பட்ட பொய்கள் ஒரு போதும் உண்மையாகாது

K.C.M.அஸ்ஹர் (முசலியூர்) வடபுல முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 24 வருடங்கள் பூர்த்தியாகின்றன.உலக சரித்திரத்தில் கால் நூற்றாண்டு அகதிவாழ்வு(அவலவாழ்வு)வாழ்ந்தோர் என்ற பெயர் இவர்களின் தலையில் எழுதப்படவுள்ளது.மஹிந்த அரசின் ஆட்சிக்காலத்தில் வடபுலமண்ணில் முஸ்லிம்கள் மீளக்குடியேறக்கூடிய  வாய்ப்பு ஏற்பட்டது.ஆனால் ஒரு 30 வீதமக்களே இதனைச்சரியாகப் பயன்படுத்தி மீளக்குடியேறியுள்ளனர்.ஏனைய மக்கள் சரியான முடிவுக்கு வரமுடியாமல் திண்டாடி வருகின்றனர்.அதற்கான காரணங்களாவன,,போதிய காணிகள் இன்மை,அழிக்கப்பட்ட வீடுகள் இன்னும் மீளக்கட்டிக்கொடுக்கப்படாமை.நட்டஈடுகள் வழங்கப்படாமை, பலவந்த வெளியேற்றத்தால் ஏற்பட்ட 23 வருட தமிழ் முஸ்லிம் உறவிடைவெளி தற்போது மெல்ல குறைவடைந்து…

Read More

தமிழ்க்கூட்டமைப்புடனான நெருக்கத்தை பயன்படுத்தி முல்லைத்தீவு காணிப்பிரச்சினையை தீர்க்கப்போவதாக கூறியவர்கள் எங்கே? முள்ளியவளையில் அமைச்சர் ரிஷாட் கேள்வி

தமிழ் அரசியல்வாதிகளுக்கும் தனக்குமிடையே இருக்கும் நெருக்கத்தையும் உறவையும் பயன்படுத்தி, முல்லைத்தீவு முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை மற்றும் மீள்குடியேற்றத்தடைகளை நீக்கப்போவதாக முல்லைத்தீவிலும் வவுனியாவிலும் பகிரங்கமாக உறுதியளித்திருந்த முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவுப் ஹக்கீம் இற்றைவரை இது தொடர்பில் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளார்? என மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கேள்வி எழுப்பினார். முல்லைத்தீவில் நேற்று முன்தினம் (29.07.2017) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் கூறியதாவது, ‘வன்னி அமைச்சரின் பிழையான அணுகுமுறைகளாலும், அவரது…

Read More

எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் எச்ஐவி நோய்த் தொற்று உண்டா என சோதனை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது இந்தாண்டில் எச்ஐவி நோய்த் தொற்று உண்டா என சோதனை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பால் நோய் மற்றும் எயிட்ஸ் நோய் தடுப்புப் பிரிவினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இதுவரை காலப்பகுதியில் சுமார் எட்டு லட்சம் பேர் தமக்கு எயிட்ஸ் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதனை பரிசோதனை செய்து கொண்டுள்ளனர் என…

Read More

“சமூக தொழில் முயற்சியாண்மை இலங்கையில் வேரூன்றி வருவது பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் உத்வேகம் தரும்” அமைச்சர் ரிஷாட் நம்பிக்கை!!

உலக பொருளாதார அபிவிருத்தியின் பிரதான பாத்திரமாக விளங்கும் சமூக தொழில் முயற்சியாண்மை, தற்போது படிப்படியாக வேரூன்றி வருவதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வெறுமனே இலாபத்தை மையமாகக்கொண்டு ஆரம்பிக்கப்படும் தொழில் முயற்சியாண்மையை விட சமூக தொழில் முயற்சியாண்மையானது, பிரதானமாக சேவைகளையும், இலாபத்தையும் மையமாகக்கொண்டு இயங்கி வருவது, நமது நாட்டுக்கு மிகவும் அத்தியவசியமானது என்றும் அமைச்சர் தெரிவித்தார். பிரிட்டிஷ் கவுன்சிலும், ஐக்கிய நாடுகளின் எஸ்கேப் நிறுவனமும் இணைந்து மேற்கொண்டுள்ள தேசிய ரீதியிலான, சமூக தொழில்…

Read More

நீர்கொழும்பில் பதற்றம்!

நீர்கொழும்பில் இரு மீனவக்குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் மீனவர்கள் இருவர் காயமடைந்தமையடுத்து அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து மேலதிக பாதுகாப்புக்காக விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரு குழுக்களுக்கும் இடையிலான மோதலில் முச்சக்கரவண்டிகள் மூன்று, இன்னும் சில வாகனங்களுக்கும் மீன்பிடி படகொன்றுக்கு தீ மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்த மீனவர்கள் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு குழுக்களுக்கும் இடையிலான மோதலில் முச்சக்கரவண்டிகள் மூன்று, இன்னும் சில வாகனங்களுக்கும் மீன்பிடி படகொன்றுக்கு தீ மூடப்பட்டுள்ளதாக…

Read More

“இனவாதத்தை கிளப்பி தெற்கில் படம்காட்டி வாக்குச் சேகரிக்க முற்படுகின்றனர்” – முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்!

தெற்கில் படம் காட்டி இன துவேசத்தை கிளப்பி வாக்குகளை சேகரிக்க முற்படுகிறார்கள் என மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்தார். கிண்ணியாவில் இன்று (12) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் எமது கட்சி எட்டுக்கும் குறையாத ஆசனங்களை பெறுகின்ற போது, கவனத்தை ஈர்க்கும். ஆகஸ்ட் ஆறாம் திகதிக்குப்…

Read More

கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 11 வயது சிறுமிக்கு நீதிமன்ற அனுமதி

தனது மூத்த சகோதரியின் கணவரினால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கருத்தறிக்கப்பட்ட 11 வயது சிறுமிக்கு குழந்தைப் பிரசவிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. 11 வயது கருத்தறித்துள்ள நிலையில், அதனைக் கலைப்பது சிறுமியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் அந்தக் குழந்தையைப் பிரசவிக்க அனுமதிக்க வேண்டும் என நாவலப்பிட்டி பொது வைத்தியசாலையின் விசேட மருத்துவ அதிகாரி கே.எம்.மகசேன ஹட்டன் நீதிமன்ற நீதவானிடம் அனுமதி கோரியிருந்தார். இதிலுள்ள உளவியல் மற்றும் சட்ட விவகாரங்கள் குறித்து ஆராய்ந்த நீதவான் இதற்கான அனுமதியை வழங்கினார். சிறுமியின் மூத்த…

Read More