Headlines

மாடு அறுப்பதற்கான தடையை மீள்பரிசீலனை செய்யவும் – நிந்தவூர் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!

அரசாங்கம் மாடு அறுப்பவதற்கு தடை விதிக்க இருப்பதனை மீள்பரிசீலனை செய்யுமாறு நிந்தவூர் பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றம். நிந்தவூர் பிரதே சபையின் செப்டம்பர் மாதக் கூட்டம் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீர் தலைமையில் இன்று (30.9.2020) காலை 10 மணியளவில் நடைபெற்றது. இன்றைய அமர்வின் போது தவிசாளர் தாஹீர் உரையாற்றுகையில், மாடு அறுப்பதற்கு அரசாங்கம் தடையை ஏற்படுத்துவதற்கு அமைச்சரவையின் அங்கிகாரத்தைப் பெற்றுள்ளது. பசு வதைக்கு எதிராகவே இத்தடையை கொண்டு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும், இத்தடை முயற்சியின் பின்னணியில்…

Read More

கவர்ச்சியான கண்களை வெளியில் காட்ட தடை – சவுதி அரேபியா

கவர்ச்சியான கண்கள் உள்ள பெண்கள் கண்களை வெளியில் காட்ட தடை விதித்து சவுதி அரேபியாவில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி கவர்ச்சியான கண்கள் உள்ள பெண்கள் அதை மறைக்கும் வகையில் பர்தா அணிய வேண்டும். இது குறித்து சவுதி அரசின் நல்லொழுக்க மேம்பாடு மற்றும் தீயவை தடுப்பு குழுவின் செய்தித் தொடர்பாளர் ஷஏக் மோத்லப் அல் நபத் கூறுகையில் :- கண்களை மறைக்குமாறு அதிலும் கவர்ந்திழுக்கும் கண்களை மறைக்குமாறு குழு உறுப்பினர்கள் பெண்களிடம் தெரிவிப்பார்கள்….

Read More

“அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இனம், மதம் கடந்த சேவை பாராட்டப்பட வேண்டிய ஒன்று”-ரிப்கான் பதியுதீன்!

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  தலைவருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், வவுனியா மாவட்டத்தில் உள்ள பல சிங்கள கிராமங்களுக்கான வேலைத்திட்டங்களை, வடமாகாண சபை முன்னாள் உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான ரிப்கான் பதியுதீனினால் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் கூறியதாவது, இந்த நிகழ்வானது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் சேவைகளின் உண்மை நிலையை இலங்கை மக்களுக்கு வெளிச்சமிட்டு காட்டக்கூடியதாக…

Read More

கொரியாவில் நடைபெற்ற இலங்கை கலாசார நிகழ்வு!

தென்கொரியாவில் இலங்கை நாட்டின் கலை கலாசார நிகழ்வொன்று கடந்த 11 ஆம் திகதி சியோல் கிரான்ட் பார்க்கில் நடைபெற்றது. கொரியாவின் இலங்கைக்கான தூதரகமும், இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகமும் இணைந்து ஏற்பாடு செய்த இவ் கலாசார நிகழ்வில் கடந்த 2010 ஆம் ஆண்டு இலங்கை நாட்டினால் தென்கொரியாவுக்கு வழங்கப்பட்ட இரண்டு யானைக்குட்டிகளின் பிறந்தநாள் நிகழ்வும் கொண்டாடப்பட்டது. இலங்கை நாட்டின் கலாசார அம்சங்களை கொரிய விருந்தினர்கள் மற்றும் சிறுவர்களுடன் பல்வேறுபட்ட வழிகளில் பரிமாற்றி நாட்டின் கலாசாரத்தினை ஒருங்கிணைப்பதே இந்நிகழ்வின்…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூலம் மாகோ, ரந்தனிகம குளத்தில் நன்னீர் மீன் வளர்ப்பு.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் விவசாய கிராமிய பொருளாதார மற்றும் நீர்பாசன கால்நடை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான அமீர் அலியின் நிதியொதுக்கீட்டில். குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் அமைப்பாளரும் முன்னால் மாகாணசபை உறுப்பினருமான எம்.என்.நஸீர் (MA) யின் ஆலோசனையில் குருநாகல் மாவட்ட முஸ்லிம் கிராமங்களில் உள்ள குளங்களுக்கு நன்னீர் மீன்களை விடும் திட்டம் அன்மையில் ஆரம்பமானது. அதன்படி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மாகோ பிரதேசசபை உறுப்பினர் அபூ தாலிபின் வேண்டுகோளுக்கினங்க.இதன் ஆறாவது கட்டமாக மாகோ,…

Read More

பீ. ஜெ வந்தால் கலவரம் வெடிக்குமாம்

இந்திய மார்க்க அறிஞர் பி ஜெய்னுலாப்தீன் இலங்கை வரவுள்ள நிலையில் அவரை இலங்கைக்குள் அனுமதிக்க கூடாது என ஆசாத் சாலி வலியுருத்தியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் கடந்த 2005ல் ஜனாதிபதி சந்திரிக்கா அவர்களும் அப்போதைய பாதுகாப்பு செயலாலரும் அவரை நாட்டை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர். இன்று ரனிலின் அரசு அவர் நாட்டுக்குள் வந்து மார்க்க சொற்பொழிவு நடத்த அனுமதி அளித்துள்ளது.இலங்கைக்குள் இஸ்ரேல் நட்பு உயிர்பெற்றுள்ள நிலையில் பி ஜெய்னுலாப்தீன் இஸ்ரேல்…

Read More

அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் சிறு தையல் தொழில்சாலை பயிற்சி நிலையம் ஆரம்பம்

கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிசாட் பதீயுதீன் அவர்களால் திருகோணமலை மாவட்ட யுவதிகளின் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்தி மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் சுய தொழிலை உருவாக்கிகொடுக்கும் நோக்கில், சிறு தையல் தொழிட்சாலை பயிற்சி நிலையங்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூப் அவர்களினால் கந்தலாய் பிரதேசத்துக்கான பயிற்சி நிலையம் ஆரம்பித்து வைக்கபட்டது. இந் நிகழ்வில் சட்டத்தரணி மதார் , இணைப்பாளர் ரியாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read More

மைத்திரி- ரணில் ஒப்பந்தம் போலியானது ; இரசாயனப் பகுப்பாய்வாளர் அதிரடி

மைத்திரி-ரணில் ஒப்பந்தம் குறித்து திஸ்ஸ அத்தநாயக்க முன்வைத்த ஆவணம் போலியானது என்று அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் அதிரடியாக நிராகரித்துள்ளார். தனி ஈழம் வழங்குவது உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பாக பொது வேட்பாளர் மைத்திரி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையில் இரகசிய ஒப்பந்தம் ஒன்று இருப்பதாக அரசாங்கம் குற்றம் சாட்டியது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து அரசாங்கத்துக்கு தாவி, அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொண்டுள்ள திஸ்ஸ அத்தநாயக்க இது தொடர்பில் ஆவணம் ஒன்றையும்…

Read More

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

-ஊடகப்பிரிவு- ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கமைய பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்களுக்கு விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு சதொச லொறிகள் மூலம் ஆரம்பித்துள்ள நடமாடும் விற்பனை நிலையங்களை, இன்று (18) வட மாகாணத்தின் பல பிரதேசங்களில்; கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆரம்பித்து வைத்தார். வவுனியாவில் இடம்பெற்ற இந்நிகழ்வின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு குறிப்பிட்டார். தற்போது 65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் வௌ்ளைப் பச்சை அரசியை…

Read More

“சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கிலேயே சமூகக் கட்சிகளுடன் இணைந்து களமிறங்கியுள்ளோம்” – மன்னார், பொற்கேணியில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்!

சமூகக் கட்சிகளுக்கிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள், கொள்கை ரீதியான முரண்பாடுகள் இருக்கின்ற போதும், அவற்றையெல்லாம் ஒருபுறம் தள்ளிவிட்டு, இந்தத் தேர்தலில் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்ற களமிறங்கியுள்ளோம் என்று மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியில், தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் ரிஷாட் பதியுதீனை ஆதரித்து, இன்று (05) மன்னார், பொற்கேணியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது,…

Read More

மைத்திரி – மோடி சந்திப்பு; 4 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து

மோடி, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான முக்கிய விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இலங்கையின் முந்தைய அரசாங்கம், சீனா அரசாங்கத்துடன் நெருக்கமாக இருந்து வந்ததுடன் புதிய அரசாங்கம் இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை பேணி வருகிறது. இலங்கை சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான முக்கிய…

Read More

நாவலயில் மனித கை மீட்பு

நாவல பகுதியிலுள்ள நீர் நிலையொன்றிலிருந்து மனித கையொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்வம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சனிக்கிழமை தெமட்டகொட பகுதியில் உள்ள நீர் நிலையொன்றிலிருந்து மனித கால்கள் இரண்டு மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Read More