Headlines

மத்திய மாகாண சபையில் அமளி

மத்திய மாகாண சபை உறுப்பினர்களில் ஒரு உறுப்பினருக்கு மாத்திரம் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கும் பாதுகாப்பு எப்படி வழங்கப்படுகிறது எனக் கேள்வி எழுப்பிய ஏனைய உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். மத்திய மாகாண சபையின் அமர்வுகள் நேற்று பேரவை தலைவர் எல்.டி. நிமலசிறி தலைமையில் பல்லேகலவில் உள்ள மாகாண சபை அவையில் நடைபெற்றது. மத்திய மாகாண சபை உறுப்பினரான அசாத் சாலிக்கு மாத்திரம் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு வழங்கப்படுவதாகவும் ஏனைய உறுப்பினர்களுக்கு அந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்…

Read More

சவால்களுக்கும் அழுத்தங்களுக்கும் மத்தியிலே இலங்கை: நவீன பொருளாதார மறுசீரமைப்பை நோக்கி முன்னேறுகின்றது!

சவால்களுக்கும் அழுத்தங்களுக்கும் மத்தியிலே இலங்கை: நவீன பொருளாதார மறுசீரமைப்பை நோக்கி முன்னேறுகின்றது! ஜெனீவா உலக வர்த்தக அமைய மாநாட்டில் அமைச்சர் றிசாத்… -சுஐப் எம்.காசிம் –      இலங்கை பல்வேறு சவால்களுக்கு மத்தியிலே நவீன பொருளாதார மறுசீரமைப்பை இலக்காகக் கொண்டு தனது வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும், 2030 ஆம் ஆண்டில் உரிய அடைவு மட்டத்தை அடைவதே எமது குறிக்கோளாகும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். சுவிட்சர்லாந்து, ஜெனீவா நகரில் இடம்பெற்ற உலக வர்த்தக…

Read More

கூட்டு எதிரணி கரைகிறது

‘கூட்டு எதிரணியினர் வர வர கரைந்துச் செல்கின்றனர். அவர்களிலிருந்து மூவர் நேற்றைய தினம் (6), அரசாங்கத்தோடு இணைந்துகொண்டனர். எதிர்வரும் நாட்களில், மேலும் சிலரும் இணைந்துகொள்வர். அதற்கானப் பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன’ என்று அரச நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில், இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

Read More

 புதிய அரசியலமைப்புக்கு 5,000 யோசனைகள்

புதிய அரசியலமைப்பு தொடர்பில், பொதுமக்களின் யோசனைகளைப் பதிவு செய்யும் குழுவின் அறிக்கை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் இன்று கையளிக்கப்படவுள்ள நிலையில், அந்த அறிக்கையில், ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட யோசனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க கூறினார்.

Read More

புதிய பொருளாதார வேலைத்திட்டங்கள் ஆரம்பம்!

எதிர்வரும் 6 மாதங்களுக்குள் புதிய பொருளாதாரத் திட்டங்கள்நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கதெரிவித்துள்ளார். குறித்த புதிய பொருளாதார திட்டங்களானது எதிர்வரும் நாட்களில் பிரதமரால்அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். பேருவளை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர்இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Read More

என்ன செய்ய நினைக்கிறார் ஒபாமா?

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவி காலம் முடிவடைவதற்கு இன்னும் 18 மாதங்களே உள்ளது. அந்நாட்டு சட்டப்படி ஒருவர் இரண்டு முறைக்கு மேல் அதிபராக இருக்க முடியாது என்பதால் அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது. இந்நிலையில் இன்னும் மீதமிருக்கும் இந்த 18 மாதங்களில் நீங்கள் முக்கியமாக என்ன செய்ய நினைக்கிறிர்கள் என்று கேட்கப்பட்டதிற்கு ஒபாமா ”இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளையும் பருவநிலை மாற்றம் தொடர்பான அமெரிக்காவின் பரிந்துரைகளை ஏற்க செய்வது தான் என் முக்கிய…

Read More

வெலிக்கடைக்கு சென்ற மஹிந்த: அனுரவை சந்தித்தார்

றகர் வீரரான வஸீம் தாஜுதீன்  கொலை செய்யப்பட்டது தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவை சந்திப்பதற்காக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவும் அவரது மகனான ரோஹித்த ராஜபக்ஷவும் வெலிக்கட சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர். இது குறித்து மஹிந்த ராஜபக்ஷ தெரிவிக்கையில், முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கொழும்பு நகரத்திற்கு பெரும் சேவைகளை செய்துள்ளார் அதனாலேயே அவரை சந்திக்க வந்துள்ளேன். கொஸ்கம சாலாவ…

Read More

“சமூகத்தை ஒற்றுமைப்படுத்தி பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க மக்கள் காங்கிரஸ் அக்கறை” நாச்சியாதீவில் அமைச்சர் ரிஷாட்!

பெரும்பான்மைச் சமூகம் அதிகமாக வசிக்கும் இடங்களில் சிதறி வாழுகின்ற நமது சமூகத்தினர் கட்சி, நிறம் மற்றும் கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பால் ஒற்றுமைப்படுவதன் மூலமே தமது பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க முடியுமெனவும், கடந்த பொதுத்தேர்தலில் அனுராதபுர மாவட்டத்தில் நமக்குக் கிடைத்த வெற்றி இதனை நன்கு உணர்த்தியது என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அனுராதபுரம், நாச்சியாதீவு முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் மைதானத்தில், புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள பார்வையாளர் அரங்கிற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதம…

Read More

155 சட்டவிரோத ஆயுதங்கள் அரசிடம் ஒப்படைப்பு

சட்­ட­வி­ரோத ஆயு­தங்­களை அர­சாங்­கத்­திடம் கைய­ளிக்கும் வேலைத்­திட்­டத்தின் கீழ் இதுவரை 155 ஆயு­தங்கள் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ள­தாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சட்­ட­வி­ரோத ஆயு­தங்­களை அர­சாங்­கத்­திடம் கைய­ளிக்கும் நட­வ­டிக்கை கடந்த மாதம் 25 ஆம் திகதி ஆரம்­ப­மாகி எதிர்­வரும் மே 6 ஆம் திகதி முடி­வ­டை­கி­றது. இக்­கா­லத்­தினுள் கைய­ளிக்­கப்­படும் ஆயுதம் தொடர்பில் எவ்­வித சட்ட நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­ட­மாட்­டாது எனவும் ஆயு­தங்­களை கைய­ளிப்­ப­வர்­க­ளுக்கு அவற்றின் வகை­க­ளுக்கு ஏற்ப பணத்தொகை வழக்­கப்­ப­டு­வ­தாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், எதிர்வரும் மே 6 ஆம் திக­தியின்…

Read More

தீர்வில்லா நிலையில் வீதிக்கு இறங்கும் பட்டதாரிகள்

அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில்வாய்ப்பை பெற்றுத்தருமாறும், மாகாணங்களில் காணப்படுகின்ற 15000திற்கும் அதிகமான ஆசிரியர் வெற்றிடத்திற்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்ளுமாறும் வலியுறுத்திய கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பில் நாளை (18) நடைபெறவுள்ளதாக ஒன்றிணைந்த வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் கடந்த 7 மாத காலமாக தாம் பொறுப்பு கூற வேண்டிய அனைத்து தரப்பினருடனும் தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கான தீர்வு…

Read More

திருகோணமலை மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

திருகோணமலை மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் கிண்ணியா முஸ்லிம் பாடசாலையில் நேற்று முன்தினம் (12) இடம்பெற்றது. திருகோணமலை மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கு பற்றிய இக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில், பிரதியமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ் மஹ்ரூப், இஷாக் ரஹ்மான், டொக்டர் ஹில்மி, டொக்டர் ஷாபி ஷிஹாப்தீன்,…

Read More