ஹுஸைன்-ரணில் சந்தித்துப்பேச்சு
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைனுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இன்று(9) இடம்பெற்ற சந்திப்பின் பொது எடுக்கப் பட்ட படங்கள்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைனுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இன்று(9) இடம்பெற்ற சந்திப்பின் பொது எடுக்கப் பட்ட படங்கள்.
பொதுமக்களின் தேவைகள், கோரிக்கைகள் தொடர்பாக முறையாக நடவடிக்கை எடுக்காமல் தான்தோன்றித்தனமாக கடமைகளைப் புறக்கணிக்கும் அரச அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க பிரதமரின் அலுவலகம் முன்வந்துள்ளது. தவறிழைக்கும் அரச அதிகாரிகளின் வருடாந்த சம்பள உயர்வினை இடைநிறுத்தவும் கவனம் திரும்பியுள்ளதாக பிரதமரின் செயலர் சமன் ஏக்கநாயக்கா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வாக்குறுதி வழங்கியவாறு நல்லாட்சி வேலைத் திட்டத்தின் முக்கிய அங்கமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் இத்திட்டம் அமுலாகும். கடிதம் கிடைத்து 14 நாட்களுக்குள் பதில்…
சத்தியக் கடதாசிகள் கையளிக்கப்பட்டதால் மாத்திரம் தாம் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என்று, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். பல்லேகல பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் வைத்து அவர் இதனக் கூறியுள்ளார்.எவ்வாறாயினும், மத்திய மாகாண சபையில் உள்ள 58 உறுப்பினர்களுள் 34 உறுப்பினர்கள் இணைந்து, மத்திய மாகாண புதிய முதலமைச்சராக திலினபண்டார தென்னகோனை நியமிக்குமாறு கோரி சத்தியகடதாசியை கையளித்திருந்தனர். இது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையின் அடிப்படையில் செயற்படவிருப்பதாக, மத்திய மாகாண ஆளுனர்…
ஜனாதிபதி ஊடகப் பிரிவு ஊவா மாகாணத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ள மீறியபெந்த தோட்டத்தை பார்வையிடவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்று நேரத்திற்கு முன்னர் கொஸ்லாந்தை பகுதியைச் சென்றடைந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி காலநிலை காரணமாக போதுமான மழை கிடைக்காமையினால் வருடத்தில் பெரும்போகங்களின் மூலம் பயிரிடப்படும் நெல் பயிர் செய்கை நிலங்கள் குறைந்துள்ளன. இதனால் சந்தையில் அரிசியின் விலை அதிகரிப்பு ஏற்படலாம் எனக் கருதி விலை அதிகரிப்பை தடுப்பதற்கு பாதுகாப்பான தொகையொன்றை பேணுவதற்காக தனியார் துறையினரால் அரிசியினை இறக்குமதி செய்வதற்கும், அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் அரிசியினை பாதுகாப்பான முறையில் களஞ்சியப்படுத்தி வைப்பதற்கும், சந்தையில் அரிசியின் விலையை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவான வகையில் அவ்வரிசியினை முறையாக சந்தைக்கு பகிர்ந்தளிப்பதற்கும் கைத்தொழில்…
“மன்னார் மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் மற்றும் சவால்கள்” என்ற தொனிப்பொருளில் ஒக்டோபர் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ள விழா தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், இன்று காலை (28) மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பிரதம அதிதியாகப் பங்கேற்கும் இந்த விழாவை முன்னிட்டு, மன்னார் அரசாங்க அதிபர் மோகன்ராஜ் தலைமையில் இடம்பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார். சுற்றாடல் அதிகார சபை உயரதிகாரிகள்,…
இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதிலும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளிலும் சிறந்த முன்னேற்றம் காணப்படுவதாக, மத்திய மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான அமெரிக்காவின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் நிஷா பிஷ்வால் தெரிவித்துள்ளார். இரண்டு நாள் விஜயமாக இலங்கை சென்ற அவர், அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சரவீர உள்ளிட்ட உயரதிகாரிகளை இன்று காலை சந்தித்து பேசினார். அதற்குப் பிறகு, ஊடகங்களிடம் பேசிய அவர், இலங்கை மக்களிடையே, நல்லிணக்கத்தை ஏற்படுத்த அமெரிக்கா தொடர்ந்தும் ஒத்துழைப்பு அளிக்கும் என்று கூறினார். மேலும், இலங்கையில்…
இலங்கையில் அமைப்பதற்கு உத்தேசித்துள்ள கைத்தொழில் பேட்டைக்கு தேவையான பல பாரிய முன்மாதிரிகளை சீனாவின் சொங்சி மாநகரிலுள்ள பானன் சுக்ஆன் கைத்தொழில் பேட்டையில் பெற்றுக் கொள்ள முடியுமாக இருந்ததாக மாநகர அபிவிருத்தி மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சீனாவுக்கு ஐந்து நாள் உத்தியோகபுர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள அமைச்சர் அங்குள்ள கைத்தொழில் பேட்டையைப் பார்வையிட்டதன் பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறினார்.
நாட்டின் பள்ளிவாசல்களில் புலனாய்வுப் பிரிவினரும், காவல்துறையினரும், படையினரும் சோதனை நடத்த வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கடசியின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார். பள்ளிவாசலில் என்ன நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகின்றன, என்ன விடயங்கள் பேசப்படுகின்றன என்பது குறித்து கண்காணிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். பௌத்த விஹாரைகளில் சோதனை நடத்தப்படுகின்ற போது ஏன் பள்ளிவாசல்களில் சோதனை நடத்தப்பட முடியாது? என கேள்வி எழுப்பியுள்ளார். கடும்போக்குவாத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட…
மறிச்சுக்கட்டி மண் மீட்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அந்த பிரதேசத்திற்கு விஜயம் செய்த மேல் மாகாண சபை உறுப்பினர்களான இப்திகார் ஜமீல், பைரூஸ் ஹாஜி, மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான லாபிர் ஹாஜியார், ஹிதாயத் சத்தார், இப்றாஹிம் மற்றும் தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அஸாத் சாலி, சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தலைமையில் களத்துக்கு வந்த சட்டக்கல்லூரி முஸ்லிம் மஜ்லிஸ் மாணவர்கள் ஆகியோரை படத்தில் காணலாம். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான…
வடக்கு மற்றும் தலைமன்னார் நோக்கி புறப்படும் புகையிரதங்களின் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது. அதன்படி புதிய நேர அட்டவணைகள் வருமாறு, கொழும்பு யாழ்பாணம் இடையில் சேவையில் உள்ள யாழ்தேவி கல்கிஸ்ஸையில் இருந்து காலை 05.50 மணிக்கு ஆரம்பமாகி கொழும்பு கோட்டையில் இருந்து காலை 06.35 இற்கு யாழ்ப்பாணம் நோக்கி புறப்படும் இந்த புகையிரதம் பிற்பகல் 02.37 இற்கு யாழ்ப்பாணத்தை சென்றடையவுள்ளதுடன், பிற்பகல் 03.20 ற்கு காங்கேசன்துறையை சென்றடையவுள்ளது. யாழ்தேவி யாழ்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி…
அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதித்தலைவருமான இஷாக் ரஹ்மான் மூலமாக நொச்சியாகம வல்பொல கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்களின் நீண்டகால பிரச்சினையாக இருந்த குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் முகமாக குடிநீர் விநியோக திட்டத்தினை (2019.02.11) ஆரம்பித்துவைத்தார்… இந்த நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஊர் பிரமுகர்கள், கிராம மக்களும் கலந்துகொண்டனர்.