Headlines

மாகாண அமைச்சுப் பதவிகளில் மாற்றம்

எதிர்வரும் மே தினத்தின் பின்னர் மாகாண அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை அறிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிக்கு விசுவாசமாக செயற்படும் தரப்பினர் மாகாண அமைச்சர்களாக நியமிக்கப்பட உள்ளனர். இதேவேளை, கட்சியை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.(smr)

Read More

முன்பள்ளி பாடசாலைக்கு தளபாடங்கள் வழங்கிவைப்பு

-A.R.A.Raheem – வடமாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரின் சகோதரருமான றிப்கான் பதியுதீன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மன்னார் மூர்வீதியில் இயங்கிவரும் அமெரிக்க சிலோன் மிஷன் முன்பள்ளி பாடசாலைக்கு இன்றயதினம் தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டது.அனைத்து மத மாணவர்களும் ஆரம்ப கல்வி கற்கும் பாடசாலையாகக் காணப்படும் இப் பாடசாலையானது அடிப்படை வசதிகள் ஏதும் இல்லா நிலையில் கடந்த காலங்களில் இயங்கிவந்தது. இது பற்றி றிப்கான் பதியுதீன் அவர்களின் கவனத்தின்கீழ் கொண்டுவந்ததற்கமைய இப் பாடசாலைக்கான கதிரை,மேசை,அலுமாரி…

Read More

கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் பாரிய வாகன நெரிசல்

புதிய போக்குவரத்து நடைமுறைகள் அறிமுகம் செய்துள்ளமையால், கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனடிப்டையில் கொழும்பு புறக்கோட்டையை நோக்கி செல்லும் வாகனங்கள் சற்றும் நகர முடியாத வகையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. வெள்ளவத்தை, பம்பலபிட்டி, கொள்ளுபிட்டி ஆகிய பகுதிகளிலும் காலி வீதியிலும் கடுமையான வாகன நெரிசல் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் 68ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டு வருகின்றன. இதனாலேயே தற்போது அதிக வாகன நெரிசல் காணப்படுகின்றமை…

Read More

பாரிய இயந்திர சிலந்தி

பாரிய சிலந்தி உருவில் தயாரிக்கப்பட்ட இயந்திரம் பிரான்ஸின் நன்டேஸ் நகரில் அண்மையில் காட்சிப்படுத்தப்பட்டது. “லா மெசின்” எனும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்தய சிலந்திக்கு குமோ நீ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த இராட்சத இயந்திர சிலந்தி வீதியில் செல்வதைப் பார்ப்பதற்கு பல்லா யிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.

Read More

வடமாகாணத்தில் காணி உறுதிப் பத்திரங்கள்

பழுலுல்லாஹ் பர்ஹான் வடமாகாணத்தில் காணி உறுதிப் பத்திரங்கள் இல்லாத ஒருதொகுதியினருக்கு காணி உறுதிப் பத்திரங்களையும் யுத்தகாலத்தில் புலிகளால் பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் தொலைந்து போனவர்களில் ஒருதொகுதியினருக்கு தங்கநகைகளையும்  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கையளித்தார். கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நேற்றைய தினம் (12) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி இவற்றை கையளித்தார். இதன் பிரகாரம் வடமாகாணத்தில் 20 ஆயிரம் பேர் காணி உறுதிப்பத்திரங்களைப் பெற்றுக் கொள்ளும் அதேவேளை, 2352 பேர் தொலைந்து போன நகைகளையும் மீளப் பெற்றுக்…

Read More

மலேசிய வனப்பகுதியிலிருந்து 139 ரோஹிஞ்சா அகதிகளின் உடல்கள் மீட்பு

மலேசியாவில் இதுவரை 139 அகதிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மியன்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் தீவிரமடைந்திருப்பதால் அவர்கள் மலேசியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு படகுகளில் தப்பிச் செல்கின்றனர். ஆட்கடத்தல் கும்பல் மூலம் அழைத்துச் செல்லப்படும் இம்மக்கள், மலேசியாவின் அடர்ந்த வனப்பகுதியொன்றில் தங்கவைக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து நகருக்குள் சட்டவிரோதமாக குடியேற்றம் செய்யப்படுகின்றனர். மலேசியாவின் புகிட் வாங் பர்மா, பெரில்ஸ் வனப்பகுதியில் அவ்வாறான சுமார் 28 முகாம்கள் இருந்துள்ளன. அம்முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான அகதிகள்…

Read More

மக்கள் காங்கிரஸ் வேற்பாளரை ஆதரிக்கும் புதுவெளி வட்டார மக்கள்!

ஏ.எம்.ரிஸாத் நடைபெறவிருக்கும் முசலி பிரதேச சபை தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பாக, புதுவெளி வட்டாரத்தில் போட்டியிடும் அப்துர் ரஹ்மான் மெளலவியை ஆதரித்து, கரம்பை கிராமத்தில் வசிக்கும், புதுவெளி கிராம மக்கள் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கல்விமான்கள், ஊர் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன்  மூலம் எமது கிராமத்துக்கு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் செய்து தரப்பட்டு இருக்கிறது. அதேபோல் வேலைவாய்ப்புகள் இன்னும்…

Read More

யால தேசிய சரணாலயத்திற்கு கட்டுபாடு

யால தேசிய சரணாலயத்திற்குச் செல்வோருக்கும் மற்றும் அவர்கள் பயணிக்கும் வாகனங்கள் தொடர்பிலும் புதிய ஒழுங்குமுறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சரணாலயப் பொறுப்பதிகாரி இதனை தெரிவித்தார். அதன்படி, வாகனங்களின் வேகம், ஒலி எழுப்புதல் என்பவற்றில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன. அத்துடன்,  பொலித்தீன் உள்ளிட்ட கழிவுப்பொருட்கள் கொண்டுசெல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More

முஸ்லிம்கள் மீதான யுத்த குற்றங்கள் கவனத்தில் கொள்ளப்படுமா?

– மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் – இந்த நாட்டின் நிலையான சமாதானமும், ஸ்திரப்பாடும், அரசியல் தீர்வும், அபிவிருத்தியும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை போருக்குப் பின்னரான இலங்கையில் அர்த்தமுள்ள விதத்தில் கட்டி எழுப்புவதிலேயே தங்கியுள்ளது என அண்மையில் இராணுவ வெற்றி குறித்த ஞாபகார்த்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரி வலியுறுத்தினார். உண்மையில் கடந்த மூன்று தசாப்த கால இனப்பிரச்சினை வரலாற்றில் பாதிப்புக்குள்ளான சகல சமூகங்களுக்கும் உரிய நீதியை நியாயத்தை பெற்றுக் கொடுப்பதிலேயே யதார்த்தபூர்வமான இன நல்லிணக்கமும் சமாதான சகவாழ்வும் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். LLRC கற்றுக்…

Read More

இலங்கை பயணத்தின் போது குண்டு துளைக்காத கார் வேண்டாம்; பாப்பரசர் கோரிக்கை

இலங்கைக்கு வருகை தரும் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் குண்டு துளைக்காத காரில் பயணிக்க விருப்பமில்லை, தெரிவித்ததாக கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.புனித பாப்பரசர் பிரான்சிஸின் இலங்கை வருகையை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். பாப்பரசர் பிரான்சிஸ் வரும் ஜனவரி 13 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார். 3 நாள் பயணமாக இலங்கை வரும் பாப்பரசர் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.அத்துடன் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவையும் சந்திக்கவுள்ளளார். இந்நிலையில்…

Read More

இந்தியாவின் தேர்தல் ஆணையாளராக, செய்யது நசீம் அகம்மது சைதி நியமனம்

இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக செய்யது நசீம் அகம்மது சைதி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமன உத்தரவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பிறப்பித்துள்ளார். இவர் வரும் ஏப்ரல் -19ம் தேதி பொறுப்பேற்கவுள்ளார். ஜனாதிபதி அலுவலக செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக இருந்து வரும் ஹரி சங்கர் பிரம்மா , வரும் 18ம் தேதி ஓய்வு பெறுகிறார். இந்த பொறுப்பில் ஜனாதிபதி நியமித்துள்ள செய்யது நசீம் உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர். 1976 ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்றவர்….

Read More