Headlines

“அங்கவீனம் ஓர் இயலாமை அல்ல” என்பதை திஹாரிய அங்கவீனர் நிலையத்துக்கு விஜயம் செய்த அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் நிதர்சனமாக உணர்த்திய மாணவர்கள்!

திஹாரிய அங்கவீனர் நிலையத்துக்கு திடீர் விஜயம்  ஒன்றை மேற்கொண்ட கைத்தொழில், வர்த்தக அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீனிடம், அங்கு கல்வி கற்கும் மாணவர்கள் தமது உள்ளக்கிடக்கைகளையும், தேவைகளையும் சைகை மொழியின் மூலமும், எழுத்து மூலமும் வெளிப்படுத்தினர். 1984 ஆம் ஆண்டு ஐந்து பிள்ளைகளுடன் ஒரு வாடகை வீட்டில், தனி மனிதன் ஒருவனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிலையத்தின் முன்னோடியும், ஸ்தாபகத் தலைவருமான ஜிப்ரி ஹனீபா, அண்மையில் காலமான போதும் கல்லூரி நிர்வாகம் பல்வேறு…

Read More

ரோஹித அபேகுணவர்த்தனவிடம் லஞ்ச, ஊழல் பிரிவு விசாரணை!

முன்னாள் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தனவிடம் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடு ஒன்று தொடர்பில் முன்னாள் அமைச்சரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Read More

“கட்டுநாயக்க மூடப்பட்டால் எங்களுக்கு செல்ல மத்தள விமான நிலையம் இருக்கிறது”; நாமல்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, தேர்தல் பிரசார கூட்டங்கள் சிலவற்றில் நேற்றைய தினம் கலந்துகொண்டார். கொலன்ன பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கருத்து வெளியிட்டார். “எதிர்வரும் 8ஆம் திகதி மைத்திரியின் ஆட்சி, நல்லாட்சியை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர். 8ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தை மூடப்போகின்றார்களாம். ஒவ்வொரு வரையும் செல்வதற்கு இடமளிக்க மாட்டார்களாம். அவர்களுக்குத் தேவையான நபர்கள் மாத்திரமே செல்ல அனுமதிக்கப்படுமாம். எந்தவொரு நபரும் செல்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என கூறுகின்றனர். அதுவா…

Read More

வெள்ளத்தினால் நிரம்பியுள்ள கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை

பெய்துவரும் அடைமழை காரணமாக கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை வெள்ளத்தினால் நிரம்பி காணப்படுகின்றது. மிக நீண்டகாலமாக மழை காலங்களில் இப்பாடசாலையில் வெள்ளம் தேங்கி நிற்பதனால் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிப்படைவது குறிப்பிடத்தக்கது.

Read More

வாழைச்சேனை கடதாசி ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை… அமைச்சர் ரிஷாட் உறுதியளிப்பு!

வாழைச்சேனை கடதாசி ஆலையை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்று மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், உயர்மட்டக் கூட்டம் ஒன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இன்று (29/11/ 2017) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வாழைச்சேனை கடதாசி ஆலையை மீளத் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் விடுத்த வேண்டுகோளை அடுத்தே அமைச்சர் ரிஷாத் இவ்வாறு தெரிவித்தார்.

Read More

“இஸ்ரேலின் எந்த ஈனச்செயல்களும் முஸ்லிம்களின் ஈமானை அழித்துவிடாது; இறுதி வெற்றியும் எமக்கே”

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்! சர்வதேச அளவில் முஸ்லிம்கள் பாரிய சவால்களை எதிர்கொள்ளும் நிலையிலேயே, முஸ்லிம்கள் இம்முறை புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாட நேர்ந்துள்ளதாகவும் நெருக்கடிகள் நீங்கி, நிம்மதி ஏற்பட இந்நாளில் பிரார்த்திக்கும்படியும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு அவர் வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது, “முஸ்லிம்களுக்கு எதிரான ஸியோனிஸவாதிகளின் அத்துமீறல்கள் எல்லைமீறியுள்ளன. காஸாவில் ஈவிரக்கமின்றி இனவழிப்புச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் இஸ்ரேலிய அரசு,…

Read More

லங்கா சதொச நிறுவனம் தனியார்மயப்படுத்தப்படமாட்டாது அமைச்சர் ரிஷாட் உறுதி

ஊடகப்பிரிவு   லங்கா சதொச நிறுவனம் ஒரு போதும் தனியார்மயப்படுத்தப்படமாட்டாது என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உறுதிபடத் தெரிவித்தார். லங்கா சதொச மற்றும் ஹேமாஸ் நிறுவனம் இணைந்து நடாத்திய வாடிக்கையாளர்களுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றோhர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு கொழும்பு சினமன் கிரேன்ட் ஹேட்டலில் நடைபெற்ற போது அமைச்சர் கலந்துகொண்டு இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் மேலும் கூறியதாவது,; சதொச நிறுவனம் தனியார் மயப்படுத்தப்படுமென சமூக வலைத்தளங்களில் கூறப்படுவது அப்பட்டமான பொய்யாகும். இந்தச் சந்தர்ப்பத்தில் உண்மையை வெளிப்படுத்துவது எனது கடமையாகும்….

Read More

177, 224/1 தனியார் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

வீதி இலக்கம் 177 கடுவல – கொள்ளுபிட்டி மற்றும் வீதி இலக்கம் 224/1 கடுவல கம்பஹா தனியார் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். முறையற்ற வகையில் வீதி அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வேலை நிறுத்தல் முன்னெடுக்கப்படுகிறது. மேலும் சில வீதி இலக்க பஸ் ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளதாக கெமுனு குறிப்பிட்டார்.

Read More

இந்திய ராணுவத்தால் காஸ்மீர மக்கள் படு கொலை செய்யபடுகிறார்கள் – சீமான் (வீடியோ)

இந்திய ராணுவத்தால் காஸ்மீர மக்கள் படு கொலை செய்யபடுகிறார்கள் நாம் தமிழர் கட்சி  சீமான் ஆவேசமாக கூறியுள்ளார் காஸ்மீரில் இந்திய ராணுவத்தால் இதுவரை .92- ஆயிரம் பேர்கள் படுகொலை, 10000- ஆயிரம் பெண்கள் கற்பழித்து கொலை 22- ஆயிரம் விதவைகள் உள்ளார்கள் இலட்ச கணக்கான குழந்தைகள் அனாதையாக உள்ளார்கள். . ஈராக்கிலும், ஈரானிலும், இலங்கையில், நடந்தது காஷ்மீரில் நடக்குது. . காஷ்மீர் மக்களுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றுங்கள் அவர்கள் தீவிரவாதிகள் அல்ல தன் உரிமைக்காக போராடும் போராளிகள்.

Read More

கிரிக்கெட் விளையாட்டில் பாடசாலை மாணவர்களை ஈடுபடுத்துவதற்கான விசேட திட்டம்

கிரிக்கெட் விளையாட்டில் பாடசாலை மாணவர்களை ஈடுபடுத்துவதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக முன்வரும் பாடசாலைகளுக்கு நிதி உதவி வழங்கப்படும் என்று கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். பிரதமரின் ஆலோசனைக்கு அமைவாக விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக கல்வி அமைச்சர் கூறினார். இங்கிலாந்து சுற்று பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை அணியினருக்கு விருதுகளை வழங்கும் நிகழ்வில் அமைச்சர்; இந்த விடயங்களை குறிப்பிட்டார். இதுதொடர்பான நிகழ்வு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

Read More

வெள்ளப்பெருக்கில் மூழ்கிப்போன இராணுவ முகாம்!

நாட்டில் நிலவும் அசாதாரண வானிலை காரணமாக களனி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் இராணுவ முகாம் ஒன்று மூழ்கடிக்கப்பட்டுள்ளது. களனியாற்றுப்படுகையில் அமைந்துள்ள களுஅக்கல பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாம் சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவ முகாமுக்குள் ஆறு அடி உயரம் வரை வெள்ள நீர் புகுந்துள்ளதாக முகாமின் கட்டளை அதிகாரி தெரிவித்துள்ளார். வெள்ளம் காரணமாக இராணுவ முகாமுக்கு வழங்கப்பட்ட மின்சார விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த ட்ரான்ஸ்போமரை மின்சார சபை அதிகாரிகள் அகற்றி எடுத்துச் சென்றுள்ளனர். இதன் காரணமாக…

Read More

ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கையில் சந்தேகம்- டிலான் பெரெரா

ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் எதிரான தடை நீக்கம் தொடர்பில் தெரிவித்துள்ள கருத்து தமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் டிலான் பெரெரா தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட முடிவானது ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் சட்டரீதியான தீர்ப்பாகும். இது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளினால் எடுக்கப்பட்ட அரசியல் ரீதியான தீர்மானமல்ல என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியை பாதுகாப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளதா என்ற சந்தேகமும் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய…

Read More