Headlines

ஜனாதிபதியின் காத்தான்குடி கூட்டத்தில் கம்பி சரிந்து விழுந்ததில் 6 பெண்கள் காயம்

அபூ ஷஹ்மா (19) காத்தான்குடியில் நடைபெற்ற ஜனாதிபதி மஹிந்தவின் தேர்தல் பிச்சாரக் கூட்டத்தின் இடையில் பொலித்தீன் கொடிகள் மற்றும் ஒலிபெருக்கிகள் கட்டப்பட்டிருந்த இரும்புக் கம்பி ஒன்று சரிந்து விழுந்ததில் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த ஆறு பெண்கள் காயமடைந்துள்ளனர். அங்கு வீசிய பலத்த காற்றும் அதனோடு பெய்த கடும் மழையை அடுத்தே குறித்த கம்பி சரிந்து விழுந்துள்ளது. காயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Read More

சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் குறையும் அபாயம்! எச்சரிக்கிறார் வை.எல்.எஸ்.ஹமீட்

ஊடகப் பிரிவு எம்.வை.அமீர்,எம்.ஐ.சம்சுதீன்- . புதிதாக நாட்டை ஆட்சிசெய்யும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் தலைமையிலான அரசு, தனது 100நாள் வேலைத்திட்டத்தின் கீழ் அரசியலமைப்பில் இரண்டு பெரிய மாற்றங்களை செய்வதற்கான முன்னெடுப்புகளை செய்ய திட்டமிட்டு வருகின்றது. அதில் ஒன்று நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அட்சி முறையை மாற்றுவது அடுத்தது தற்போது நடைமுறையில் இருக்கின்ற தேர்தல் முறையை மாற்றுவது என்பதாகும். குறித்த இரண்டு மாற்றங்களும் இலங்கையில் வாழும் சிறுபான்மையினரைப் பொறுத்தவரையில் ஆரோக்கியமான ஒன்றல்ல என்று, அகில இலங்கை…

Read More

இலங்கையிலிருந்து வெளியேறிய ஊடகவியலாளர்களை, நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை

வெள்ளை வான் கடத்தல்களுக்கு பயந்து நேபாளத்திற்கு சென்ற ஊடகவியலாளர்களை எதிர்வரும் வாரத்தில் நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க எழுப்பி கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய ஊடகவியலாளர்களை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை நல்லாட்சி மேற்கொள்ளாதா என அனுர குமார திஸாநாயக்க வினவியுள்ளார். அதற்கு பதலளிக்கும்…

Read More

அசின் விராது பௌத்த தேரர் இலங்கை விஜயம் செய்வதற்கு முஸ்லிம் அமைப்புக்கள் எதிர்ப்பு

மியன்மாரின் கடும்போக்கு பௌத்த அமைப்பின் தலைவராக கருதப்படும் அசின் விராது பௌத்த தேரர் இலங்கை விஜயம் செய்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை முஸ்லிம் பேரவை தெரிவித்துள்ளது. 969 என்ற பௌத்த கடும்போக்கு அமைப்பின் தலைவரான விராது தேரரை டைம்ஸ் சஞ்சிகை பௌத்த பயங்கரவாதி என அடையாளப்படுத்தி அட்டைப்படத்தில் புகைப்படமொன்றை வெளியிட்டிருந்தது. எதிர்வரும் 28ம் திகதி பொதுபல சேனா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாட்டில் விராது தேரர் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. பொதுபல சேனா அமைப்பின் அழைப்பிற்குஅமைய…

Read More

முஸ்லிம் சமூகத்தின் முதுகில் நிரந்தர அடிமைச்சாசனம் எழுதப்படும் அபாயம். அமைச்சர் றிஷாட் தெரிவிப்பு.

புதிய அரசியல் யாப்பின் மூலம் முஸ்லிம் சமூகத்தின் முதுகின் மீது நிரந்தரமான அடிமைச் சாசனமொன்று எழுதப்படும் அபாயம் இருப்பதாக அஞ்சுகிறோம் என்று அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். பெண் எழுத்தாளர் எஸ்.யு. கமர்ஜான் பீபி எழுதிய ‘நான் மூச்சயர்ந்த போது’ எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா வத்தளை ஹூணுப்பிட்டி சாஹிரா மகா வித்தியாலயத்தில் நேற்று (11)  நடைபெற்ற போது அமைச்சர் றிஷாத் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே இந்த அச்சத்தை வெளியிட்டார். முஸ்லிம்…

Read More

தம்புள்ளை பள்ளியை புதிய இடத்தில் நிர்மாணிக்க வக்பு சபை அனுமதி

தம்­புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்­ளி­வா­சலை தற்­போ­துள்ள இடத்­தி­லி­ருந்து அகற்றி நகர அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை தம்­புள்ளை நக­ருக்கு அண்­மையில் வழங்­க­வுள்ள காணியில் புதி­தாக நிர்­மா­ணித்துக் கொள்­­வ­தற்கு வக்­பு ­சபை பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­துக்கு அனு­மதி வழங்­கி­யுள்­ளது. வக்பு சபை அங்­கத்­த­வர்­க­ளுக்கும் பள்­ளி­வாசல் நிர்­வாக சபை பிர­தி­நி­தி­க­ளுக்­கு­மி­டையில் நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தை­களை அடுத்தே வக்­பு­சபை இந்த அங்­கீ­கா­ரத்தை வழங்­கி­யுள்­ளது. ‘தம்­புள்ளை நக­ருக்கு அண்­மையில் பள்­ளி­வா­ச­லுக்கு நகர அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை காணி வழங்­கு­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ளதால் வச­தி­யான ஒரு பள்­ளி­வா­சலை நிர்­மா­ணித்துக் கொள்­ள­மு­டியும். தற்­போது பள்­ளி­வாசல்…

Read More

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய பழங்கள்!!!

மாம்பழம்: பழங்களின் ராஜா என்று கூறப்படும் மாம்பழம் உலகிலேயே அதிக சுவை மிகுந்த ஒரு பழமாக விளங்குகிறது. ஆனால் அப்பழத்தில் மிகுந்த சர்க்கரை இருப்பதால் இப்பழத்தை தவிர்ப்பது நல்லது. தொடர்ந்து இதை உட்கொண்டால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகிவிடும். சப்போட்டா: இந்த பழத்தில் GI குறியீட்டு எண் 55 க்கு மேலுள்ளதால் இது சாப்பிடுவதற்கு உகந்தது அல்ல. இப்பழத்தில் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் அதிக அளவில் உள்ளது. அன்னாசி: இப்பழத்தில் அதிக அளவு கிளைசீமிக் குறியீடு இருப்பதால் இப்பழத்தை அறவே தவிர்க்க…

Read More

முகமது நபி (ஸல்) அவர்களின் கண் கலங்க வைக்கும் எளிய வாழ்கை!

ஒரு முறை நபித் தோழர் உமர்பின் கத்தாப் அவர்கள் முகமது நபி அவர்களின் இல்லத்திற்கு வந்திருந்தார். வீட்டில் உள்ள பொருட்களைப் பார்த்தார். முகமது நபி அவர்களின் வீட்டில் பதனிடப்பட்ட மூன்று தோல் துண்டுகளும் வீட்டின் ஒரு மூலையில் ஒரு கைப்பிடி பார்லி அரிசியும் கிடந்தது. சுற்றும் முற்றும் பார்த்தார். வேறு பொருட்கள் எதுவும் தென்படவில்லை. உமர் அழத் தொடங்கினார். ‘உமரே ஏன் அழுகிறீர்கள்?’ என்று முகமது நபி கேட்டார். அதற்கு உமர் ‘இறைவனின் தூதரே! நான் ஏன்…

Read More

கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் ஒட்டமாவடி ஹைர் பள்ளிவாசலுக்கு ஐந்து லட்சம் நிதி ஒதுக்கீடு

கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் ஒட்டமாவடி ஹைர் பள்ளிவாசலுக்கு விவசாய , நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி ஐந்து லட்சம் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புணரமைக்கப்பட்ட மையவாடி சுற்று மதில் திறந்து வைக்கும் நிகழ்வு செயலாளர் றம்லான் தலைமையில் 02.02.2019 இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர் அமீர் , உதவித் திட்டமிடல் பணிப்பாளர் றுவைத், பள்ளிவாசல் தலைவர் இர்ஷாத், வட்டாரக் குழு உறுப்பினர்கள் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகளும் மற்றும் ஜமாஅத்தார்களும் கலந்து…

Read More

இலவச வைஃபை வலயங்களை அதிகரிக்க நடவடிக்கை

மேலும் சில பஸ் தரிப்பிடங்கள் மற்றும் ரயில் நிலையங்களில்  இலவச வைஃபை வலயங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்கீழ், திஸ்ஸமகாராம பஸ் தரிப்பிடத்திலும் இலவச வைஃபை வலயம் நிறுவப்பட்டுள்ளதாக தகவல் மற்றும் தொலைத்தொடர்பாடல் முகவர் நிறுவன வேலைத்திட்டத்தின் முகாமையாளர் கவாஸ்கர் சுப்ரமணியம் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் மேலும் பல இடங்களில் இலவச வைஃபை வலயங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக களுத்துறை மற்றும் பாணந்துறை ரயில் நிலையங்களிலும் விரைவில் இலவச வைஃபை வலயங்களை ஏற்படுத்துவதற்கு…

Read More

எலிசபெத் மகாராணியின் அழைப்பையேற்று ஜனாதிபதி பிரித்தானியா பயணம்!

இங்கிலாந்தின் மகாராணி எலிசபெத்தின் விசேட அழைப்பினை ஏற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் மார்ச் மாதம் 7ஆம் திகதி பிரித்தானியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். பிரித்தானியாவுக்கான நான்கு நாள் விஜயத்தை மேற்கொள்ளும் ஜனாதிபதி, எலிசபெத் மகாராணியுடன் விசேட சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதுடன், மகாராணி அளிக்கும் பகல் போசன விருந்துபசாரத்திலும் கலந்து கொள்ளவுள்ளார். மார்ச் 9ஆம் திகதி இலண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘பொதுநலவாய தினம்’ நிகழ்வுகளில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அங்கு சிறப்புரை ஒன்றையும் ஆற்றவுள்ளார்….

Read More

VIDEO-“அஸ்வெசும திட்டத்தில் அதிகமானவர்களை உள்வாங்க நடவடிக்கை எடுங்கள்”

தலைவர் ரிஷாட் சபையில் கோரிக்கை! ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் அம்பாறை மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (05) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு ஆகியவற்றின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே…

Read More