ஜப்பானிலுள்ள அமெரிக்க இராணுவத்தினருக்கு மது அருந்தத் தடை
ஜப்பானில் அமெரிக்க கடற்படை வீரர் ஓட்டிச் சென்ற கார் மோதி இருவர் காயமடைந்ததால், ஓகினாவோ தீவிலுள்ள அமெரிக்க கடற்படை வீரர்கள் 18,600 பேர் இனி மது அருந்த கூடாது என அமெரிக்க கடற்படை தலைமையகம் தடை விதித்துள்ளது. அமெரிக்க கடற்படை வீரர்களில் ஒருவரான ஐமி மேஜியா(21) என்பவர் நேற்று முன்தினம் வீதி விதிகளை மீறியவகையில் எதிர்திசையில் தனது காரை வேகமாக ஓட்டிச்சென்று அவ் வழியாக சென்ற இன்னொரு காரின்மீது நேருக்குநேராக மோதியுள்ளார். இதில் எதிரே சென்ற …
