Headlines

தேசிய பல்கலை கூடைப்பந்தாட்டக்கு கிழக்கிலிருந்து இருவர்!

இலங்கை தேசிய பல்கலைக்கழக கூடைப்பந்தாட்ட அணியில் கிழக்கு பல்கலைக்கழகத்தினை சேர்ந்த சச்சிதானந்தன் உகந்தன் மற்றும் கிறிஸ்ரின் விஜய் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். சீனாவில் எதிர்வரும் மாதம் 19 – 24 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ள ஆசிய பல்கலைக்கழகங்களுக்கிடையிலான 3 – 3 கூடைப்பந்தாட்டதொடரில் இலங்கை அணியினை பிரதிநிதித்துவப்படுத்தி இவர்கள் இருவரும் பங்குபற்றவுள்ளனர். அத்துடன் இலங்கை தேசிய பல்கலைக்கழக கூடைப்பந்தாட்ட அணிக்கு பல்கலைக்கழகங்களுக்கிடையிலான விளையாட்டு சங்கம் மு.பரணிதாசனை பயிற்றுவிப்பாளராக நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

முசலி முள்ளிக்குளம் கிராம மக்களுக்கு விடிவை ஏற்படுத்த அமைச்சர் ரிஷாட் நடவடிக்கை

முசலி பிரதேச சபைக்குட்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்களால் தங்கள் பூர்வீக நிலங்களை மீட்டெடுப்பதற்கான போராட்டத்தை தீர்வு காணும் நோக்குடன் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அமைச்சரின் வேண்டுகோளின் பெயரில் , மக்கள் தற்காலிகமாக வசிக்கும் இடங்களை நேரடியாக பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான வசதிகளை நிவர்த்தி செய்வதற்கான நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைவாக அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் றிப்கான் பதியுதீன் தலைமையில் மக்களை சந்திக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது அவர்களுக்கான குடிநீர் பிரச்சனைகளை தீர்த்து…

Read More

ஒருபோதும் முஸ்லிம் மக்களை தாக்கவில்லை : பொதுபல சேனா

பொதுபல சேனா அமைப்பு மற்றும் அதற்கு சம்பந்தப்பட்ட யாரும் ஒருபோதும் முஸ்லிம் மக்களை தாக்கவில்லை என அவ் அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே தெரிவித்துள்ளார். கந்தளாய் பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திர் அமைச்சர் கே.கே.டீ.எஸ். குணவர்தனவினால் பொதுபல சேனா அமைப்பு முஸ்லிம் மக்களை தாக்கியதாக கூறிய கருத்திற்கு திலந்த விதானகே கண்டனம் வெளியிட்டதோடு, பகிரங்க விவாதத்திற்கு வருமாறும் சவால் விடுத்துள்ளார். நாட்டின் அமைச்சர் என்ற ரீதியில் போலியான கருத்துக்களை வெளியிட்டு முஸ்லிம் இனத்தின்…

Read More

சுகாதார அமைச்சராக திஸ்ஸ பதவியேற்றார்

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அண்மையில் அரசாங்கத்துடன் இணைந்துகொண்ட நிலையில், சுகாதார அமைச்சராக இன்று வியாழக்கிழமை  பதவியேற்றுக்கொண்டார்.  கண்டியிலுள்ள ஜனாதிபதி இல்லத்தில் இந்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.

Read More

இன்னும் இரண்டு மாதங்களில் மினி பட்ஜெட்

நடப்பாண்டு வரவு செலவுத்திட்டத்தில் திருத்தம் செய்து மினி பட்ஜெட் இன்னும் இரண்டு மாதங்களில் சமர்ப்பிக்கவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். அரசாங்கத்தினால் எந்தநேரமும் சலுகைகளை வழங்க முடியாது. சலுகை வழங்குவது மாத்திரமே அரசாங்கத்தி வேலை கிடையாது. சர்வதேச நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள தருவாயில் பல்வேறுபட்ட திருத்தம் செய்யவுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Read More

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 14 போ் கைது

மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டுவந்த 14 போ் இன்று (19) அதிகாலை கைதுசெய்யபட்டுள்ளதாக பொகந்தலாவை பொலிஸார் தெரிவிக்கின்றனா். மாணிக்கக்கல் அகழ்விற்க்காக குறித்த பகுதி ஒரு வருடத்திற்கு மாத்திரம் அனுமதி வழங்கபட்டிருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனா். இதேவேளை, நேற்றயதினம் பொகந்தலாவை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது. பொகவந்தலாவை பொலிஸாரால் 9பேரும் விசேட அதிரடிப் படையினரால் ஐந்து பேரும் கைது செய்யபட்டுள்ளதாகவும் மாணிக்கக்கல் அகழ்விற்காக பயன் படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் கைபற்றியுள்ளனா்.

Read More

அமைச்சர் றிஷாதின் கரங்களை பலப்படுத்துவோம் – அமைச்சர் சத்தியலிங்கம்

– சுஐப் எம்.காசீம் – “வடமாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமோசனம் பெற்றுக்கொடுக்கும் வகையிலும், அந்த மக்களின் பொருளாதார மேம்பாட்டை உயர்த்தும் வகையிலும் கட்சி, இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் அமைச்சர் றிஷாத்தின் கரங்களை நாங்கள் பலப்படுத்துவோம்” இவ்வாறு வடமாகாண சுகாதார, சுதேச சமூக சேவைகள் மகளிர் விவகார அமைச்சர் டாக்டர். பி.சத்தியலிங்கம் தெரிவித்தார். சர்வதேச நுகர்வோர் உரிமைகள் தின தேசிய விழா, வவுனியா காமினி மஹா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்ற போது, கெளரவ அதிதியாக கலந்துகொண்ட…

Read More

நான் குற்­ற­வா­ளி­ என்றால், தண்­ட­னையை­ ஏற்­றுக்­கொள்­ளத்­ த­யா­ர் – றிஷாத்

வில்­பத்து பிர­தே­சத்தில் எமது மக்­களோ நானோ காடு­களை அழிக்­க­வில்லை. யானை­க­ளையோ மிரு­கங்­க­ளையோ கொல்­ல­வில்லை. ராவணா பலய அமைப்பின் செய­லாளர் என்னைத் தூக்­கி­லிட வேண்­டு­மென கருத்து வெளி­யிட்­டுள்­ளமை இன­வா­தத்தின் வெளிப்­பா­டாகும் என கைத்­தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் தெரி­வித்தார். ராவணா பலய அமைப்பின் செய­லாளர் இத்­தே­கந்த சத்­தா­திஸ்ஸ தேரர் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் வில்­பத்து வன பிர­தே­சத்­தி­லுள்ள காடு­களை அழித்து அங்­குள்ள யானை­களை அழிக்கும் முயற்­சியில் ஈடு­பட்­டுள்ளார் என குற்றம் சுமத்­தி­யுள்­ள­மைக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு…

Read More

”மண்சரிவு ஏற்பட்ட மீரியபெத்த கிராமத்தவர்கள், உயிருடன் இருப்பதற்கான நம்பிக்கை இல்லை” – அமைச்சர்

பாடசாலை சென்ற மாணவர்கள் மற்றும் தோட்ட தொழிலுக்காக சென்ற தரப்பினரை தவிர மண்சரிவு ஏற்பட்ட மீரியபெத்த கிராமத்தில் இருந்த ஏனைய அனைவரும் உயிருடன் இருப்பதற்கான நம்பிக்கை இல்லை என  அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இன்றைய தினம் அந்த பிரதேசத்திற்கு விஜயம் செய்திருந்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மண்சரிவு ஏற்பட்ட மண்மேட்டு பகுதிக்கு பின்னால், நிலச்சரிவு ஏற்படுவதன் காரணமாக மீட்பு பணிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, மண்சரிவில் காணாமல் போனவர்களை…

Read More

உள்ளூராட்சி தேர்தல் 2025; அம்பாறையில் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்த தலைவர் ரிஷாட்!

கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) அம்பாறைக்கு விஜயம் மேற்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், தொடர்ந்து இரு தினங்களாக (13,14) மாவட்டத்தின் பல பகுதிகளில், உள்ளூராட்சி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார். அந்தவகையில், அக்கரைப்பற்று மாநகர சபை, அக்கரைப்பற்று பிரதேச சபை, சம்மாந்துறை பிரதேச சபை, இறக்காமம் பிரதேச சபை, அட்டாளைச்சேனை பிரதேச சபை, பொத்துவில் பிரதேச சபை, காரைதீவு பிரதேச சபை, நாவிதன்வெளி பிரதேச சபை மற்றும் நிந்தவூர் பிரதேச…

Read More

“இலக்கு நோக்கிய பயணத்திற்கு இடப்பெயர்வு படிப்பினையாக அமையட்டும்” – உலக அகதிகள் தினத்தில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்!

சர்வதேச இடம்பெயர்ந்த தினத்தில், இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு புதிய நம்பிக்கையினை இட்டுச் செல்லும் செயற்பாடுகளின்பால் எமது பார்வை செலுத்தப்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் சுட்டிக்காட்டியுள்ளார். இன்றைய நாள் என்பது இடப்பெயர்வுகளை சந்தித்த ஒவ்வொரு மனிதனது வாழ்விலும் மறக்க முடியாத தினமாக பதியப்பட்டுவிட்டது என்பது யதார்த்தமாகும். பழையதை மறக்காமல் நிகழ்காலத்தில் நின்றுகொண்டு, எதிர்காலத்தினை அடைவாகக்கொண்டு செயற்படும் இலக்கு நோக்கிய பயணத்திற்கு மிகவும் முக்கியமானதாக, இன்றைய “சர்வதேச இடப்பெயர்வுக்குள்ளான மக்களின் தினம்”…

Read More