Headlines

மக்கள் காங்கிரஸின் அக்குரனை குருகொட கிளை அங்குரார்ப்பணம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அக்குரனை, குருகொட கிளை நேற்று (20) ஆரம்பித்து வைக்கப்பட்டது. குருகொட வட்டார வேட்பாளரும், பிரபல சமூக சேவையாளருமான நலீஸ் ஹாஜியார் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில்,மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளரும்,முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஹம்ஜாட் , கண்டி மாவட்ட இணைப்பாளர் றியாஸ் இஸ்ஸதீன், அக்குரனை மத்திய குழுத் தலைவர் இல்யாஸ் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், ஊர்ப்பிரமுகர்கள் உட்பட மக்கள் காங்கிரஸின்  முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர். (ன)  

Read More

பிரதமர் பதவியை தியாகம் செய்வதாக மஹிந்தவிடம் தெரிவித்தேன்: நிமல் சிறிபால டி சில்வா

பிரதமர் பதவியை தியாகம் செய்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தான் கூறியதாக முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கடந்த பாராளுமன்றத்தில் இறுதிக் காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக தானே இருந்து வந்ததாகவும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால் தானே பிரதமராகும் நிலை காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், கட்சியை ஒருங்கிணைப்பதற்காகவும், வெற்றிபெற வைப்பதற்காகவும் பிரதமர் பதவியை தியாகம் செய்வதாக முன்னாள் ஜனாதிபதியிடம் தெரிவித்தேன் என்று அவர்…

Read More

இலங்கை பெண் குவைத்தில் படுகொலை

குவைத்தில் இலங்கைப் பெண் ஒருவரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்தாக கூறப்படும் ஆப்கானிஸ்தானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து குவைத் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். தமக்கு கிடைத்த தகவல் ஒன்றின்படி, பஹாலில் பிரதேச இடம் ஒன்றில் இருந்து 33வயதான இலங்கைப் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. இதனையடுத்து, சுமார் 3 மணியத்தியாலங்களுக்குள் இறந்த பெண்ணின் நண்பர் என்ற ஆப்கானிஸ்தானியர் கைது செய்யப்பட்டார். விசாரணைகளின்போது தமது நண்பருடன் குறித்த இலங்கை பெண் உறவை கொண்டிருந்ததாக சந்தேகித்தே தாம்…

Read More

தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவனத்தின் புதிய தலைவராய் ஹம்ஜாட் நியமனம்.

கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான  பொல்கொல்லையில் இயங்கும் தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவனத் தலைவராக ஹம்ஜாட் அமைச்சர் றிஷாட் புதியுதீனால் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினரான ஹம்ஜாட் புதிய பதவியினை தேசிய கூட்டறவு அபிவிருத்தி திணைக்களத்தில் பொறுப்பேற்றதன் பின்னர் இங்கு உரையாற்றிய நிறுவனத் தலைவர், கடந்த காலங்களை விட இந்த நிறுவனத்தை முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்ல தன்னால் முடியுமான முயற்சிகளை அமைச்சர் றிஷாட் பதியுதீனோடு இணைந்து முன்னெடுக்கவுள்ளேன் என்று தெரிவித்தார். இலங்கையில் கூட்டுறவுத்துறையில் மறுமலர்ச்சியை உருவாக்கவும்…

Read More

கிழக்குப் பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான விரிவுரைகள் ஏப்ரல் 27ஆரம்பம்

கிழக்குப் பல்கலைக்கழக 2013/2014ம் கல்வியாண்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள முதலாம் வருட புதிய மாணவர்களுக்கான விரிவுரைகள் எதிர்வரும் 27.04.2015ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைகழக சிரேஸ்ட உதவிப் பதிவாளர் ரி.பாஸ்கரன் தெரிவித்தார். கலை கலாசார பீடம், விவசாய பீடம், வர்த்தக முகாமைத்துவப் பீடம், விஞ்ஞானப் பீடம் போன்ற மேற்படி பீடங்களைச் சேர்ந்த சகல மாணவர்களும் 26.04.2015 அன்று பிற்பகல் 05.00 மணிக்கு முன்னர் கிழக்கு பல்கலைக்கழகம், வந்தாறுமூலை, செங்கலடி எனும் விலாசத்திற்கு சமுகமளிக்குமாறு சிரேஸ்ட உதவிப் பதிவாளர் அழைப்பு விடுத்துள்ளார். குறித்த…

Read More

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு

– ஜவ்பர்கான் – முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திர காந்தனை மீண்டும் 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் 27ம்; திகதி வரை (27.1.2016) விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நிதவான் எம்.கணேசராஜா உத்தரவிட்டார். கடந்த 2005.12.25 ஆம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில்; கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கடந்த 09.10.2015 அன்று…

Read More

நான் வெற்றிபெற்றால் ஜனாதிபதி மாளிகைக்கு செல்லமாட்டேன் – மைத்திரி

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால், ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ இல்லத்திற்குக் கூட செல்ல மாட்டேன் என்று, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று 2/12/2014 கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். தான் பதவிக்கு வந்த பின்பு நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்படுமா என்று பலர் கேள்விகளை எழுப்பி வருவது குறித்து குறிப்பிட்ட அவர், நான் ஒன்றைக் கூற விரும்புகிறேன். நான் தேர்தலில் வெற்றி பெற்றால்…

Read More

மீனவர்களே அவதானம்: அனர்த்த முகாமைத்துவம் அறிவுறுத்தல்

யாழ்.மாவட்டத்தில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவுறுத்தியுள்ளது. யாழ்.மாவட்டத்தில் கூடிய காற்றுடன் மழை பெய்வதற்கான சாத்தியம் அதிகமிருப்பதால் மீனவர்கள் அவதானமாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் இது தொடர்பான அறிவுறுத்தல்களை மீனவர் சமாசங்கள் ஊடாக விடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

கேரளாவை ராட்சத எரிகல் தாக்கியதா? மர்மத்தால் பீதியில் உறைந்த மக்கள்

கேரள மாநில வான்வெளியில் நேற்றிரவு மிகப்பெரிய எரிகோளத்தை கண்டதாக மக்கள் பீதியடைந்துள்ள நிலையில், எர்ணாகுளம் மாவட்டத்தில் இன்று எரிகல் தாக்கி பள்ளம் ஏற்பட்டதாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ராட்சத வெடிகளை கொளுத்தியதுபோல் தோன்றிய அந்த எரிகோளம் மெதுவாக நகர்ந்து சென்றது என்றும் அப்போது அங்குள்ள வீடுகளின் கதவு மற்றும் ஜன்னல்கள் அதிர்ந்தது எனவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கரிமல்லூர் கிராமத்தில் இன்று ராட்சத எரிகல் விழுந்ததைப் போல் மிகப்பெரிய…

Read More

தேசிய பல்கலை கூடைப்பந்தாட்டக்கு கிழக்கிலிருந்து இருவர்!

இலங்கை தேசிய பல்கலைக்கழக கூடைப்பந்தாட்ட அணியில் கிழக்கு பல்கலைக்கழகத்தினை சேர்ந்த சச்சிதானந்தன் உகந்தன் மற்றும் கிறிஸ்ரின் விஜய் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். சீனாவில் எதிர்வரும் மாதம் 19 – 24 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ள ஆசிய பல்கலைக்கழகங்களுக்கிடையிலான 3 – 3 கூடைப்பந்தாட்டதொடரில் இலங்கை அணியினை பிரதிநிதித்துவப்படுத்தி இவர்கள் இருவரும் பங்குபற்றவுள்ளனர். அத்துடன் இலங்கை தேசிய பல்கலைக்கழக கூடைப்பந்தாட்ட அணிக்கு பல்கலைக்கழகங்களுக்கிடையிலான விளையாட்டு சங்கம் மு.பரணிதாசனை பயிற்றுவிப்பாளராக நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More