Headlines

முன்னாள் எம்.பி முஹம்மட் நௌஷாட் மக்கள் காங்கிரஸில் இணைவு!

முஸ்லிம் காங்கிரஸின்  முன்னாள் எம் பியும், சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான அப்துல் மஜீத் முஹம்மட் நௌஷாட், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்,  அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் முன்னிலையில், மக்கள் காங்கிரஸில்  இன்று (08) இணைந்து கொண்டார். இவர் சம்மாந்துறை நகரசபையின் தலைமை வேட்பாளராக இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.        

Read More

சிலாவத்துறையில் வெள்ளப்பெருக்கு – ரிப்கான் பதியுதீன் துரித நடவடிக்கை

ஏ.எச்.எம் பூமுதீன் மன்னார்- சிலாவத்துறை பிரதேசத்தில் அடைமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை அடுத்து ஸ்தலத்திற்கு உடன் விஜயம் செய்த வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், அங்கு மேற்கொள்ள வேண்டிய உடனடி தேவைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆராய்ந்துள்ளார். முள்ளிக்குளம், பாலைக்குளி, கரடிக்குளி ,காயாநகர் போன்ற கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருப்பது குறித்தும் அதிகாரிகள் ,கடற்படை மற்றும் இராணுவத்தினருடன் கலந்துரையாடியுள்ளார். கல்லாத்து பாலத்தின் மேலாக நீர் பாய்ந்து ஓடுவதால் மேற்படி கிராமங்களுக்கான போக்குவரத்தில் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலை நாளை…

Read More

 வரிப்பத்தன்சேனை மஜீட் புரம் வித்தியாலய சுற்றுப்புறச்சூழலை சுத்தப்படுத்த நடவடிக்கை!

-ஊடகப்பிரிவு- இறக்காமம் பிரதேசசபை எல்லைக்குட்பட்ட வரிப்பத்தன்சேனை மஜீட் புரம் பாடசாலை அருகில் உள்ள, “மடுவத்தை” என்ற இடத்தை வேறு இடத்துக்கு மாற்றி, சுற்றுப்புறச்சூழலை சுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் கலீலுர்ரஹ்மான், மக்கள் காங்கிரஸின் உபதவிசாளர் நௌபர் மௌலவி உட்பட மக்கள் காங்கிரஸின் பிரதேசசபை உறுப்பினர்களான அன்வர் மற்றும் பாஹிமா ஆகியோரும் கலந்துகொண்டனர். “மடுவத்தை” பாடசாலைக்கு அருகாமையில் இருப்பதால், துர்நாற்றம் மற்றும் சூழல் மாசுறுகின்றது. இதனால்…

Read More

மக்கள் காங்கிரஸும் சுதந்திரக் கட்சியும் இணைந்த ஆட்சியில், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளராக நௌஷாட்! பிரதித் தவிசாளராக ஜெயச்சந்திரன்!

-ஊடகப்பிரிவு-   சம்மாந்துறை பிரதேச சபையை முதன்முறையாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. இன்று காலை (27) சம்மாந்துறை பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்ற முதலாவது அமர்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளதுடன், சபையின் தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த ஏ.ஆர்.எம்.நௌசாட், பிரதித் தவிசாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த வி.ஜெயச்சந்திரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். தவிசாளர் மற்றும் பிரதித் தவிசாளர் ஆகியோருக்காக இடம்பெற்ற…

Read More

தலைவர் ரிஷாட் – மயோன் சமூக சேவை அமைப்புக்கும் இடையிலான சந்திப்பு!

அம்பாறை மாவட்ட மக்களின் பிரச்சினைகள், அமைப்பின் எதிர்கால செயற்பாடுகள் குறித்த பல விடயங்களை நோக்காகக்கொண்டு, மயோன் சமூக சேவை அமைப்புக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று வெள்ளிக்கிழமை (13) கொழும்பில் இடம்பெற்றது. மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளரும் மயோன் சமூக சேவை அமைப்பின் தலைவருமான றிஸ்லி முஸ்தபாவின் தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில், அமைப்பின் பொதுச் செயலாளர் சுகையில் ஜமால்டீன் அமைப்பின்…

Read More

நோன்பாளிகளின் கனிவான கவனத்திற்க்கு!

“மறுமைக்கு மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும்” “உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும்” நுரையீரல் அதிகபடியாக இயங்கும் நேரம் காலை 3-5. ஸஹர் நேரத்தில் நாம் நோன்பு வைப்பதற்காக அதிக நேரம் விழித்திருப்பதால் நமது நுரையீரல் மிகுந்த புத்துணர்வு பெற்று சிறப்பாக செயல்படுகின்றது.இதன் மூலம் மற்ற உறுபுக்கள் புத்துணர்வு பெறுகின்றன. காலை மதியம் இரவு வழக்கமாக சாப்பிட்டு பழகி போன நமது வயிறு, மண்ணீரல், கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல் போன்றவை 1 மாத காலம் இந்த நேரம் மாறி…

Read More

சிகிரியா வருமானம் அதிகரிப்பு

சிகிரியாவைப் பார்வையிட வரும் உல்லாசப் பிரயாணிகளின் வருகையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதனால் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் ஆறரைக் கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக மத்திய கலாசார நிலையத்துக்கு சொந்தமான சிகிரிய திட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த மாதத்தில் சிகிரியாவுக்கு வருகை தந்திருந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 150,000 இனைத் தாண்டியுள்ளது. இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 34 சதவீத அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

Read More

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உயர் அதிகாரி இலங்கை வருகிறார்

-லியோ நிரோஷதர்ஷன் – அமெரிக்க இராஜாங்க தினைக்களத்தின்  பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்கான துணை செயலாளர் சாள்ஸ் எச். ரிவ்கின் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு வியாழக்கிழமை இலங்கை வருகின்றார்.

Read More

மட்டக்களப்பு வீரன் இலங்கை கிரிக்கட் அணிக்கு தெரிவு!

மட்டக்களப்பு  மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவனும் மற்றும் லக்கி விளையாட்டு கழக கிரிக்கட் அணியின் தலைவராகிய ஜெயசூரியம் சஞ்சீவ் இலங்கை 25 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர்  மலேசியாவில் இடம் பெற உள்ள மலேசிய அணியுடனான (Minor team- Sri Lanka tour of Malasia) போட்டிக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சகலதுறை ஆட்டக்காரர் ஆன இவர் பல தடவை தனது திறமையை வெளிப்படுத்தி 2012ம் ஆண்டு சிங்கப்பூர் அணியுடனான ஒருமைப்பாடு போட்டியிலும் மற்றும் இலங்கை…

Read More

“கல்குடா பா. உ. பதவியை தக்கவைக்க தயார்”

– அனா – மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பிரதேசத்தில் இருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்கு தங்கலாலான அனைத்து உதவிகளையும் தாங்கள் மேற்கொள்வதற்கு தயாராகவுள்ளோம் என்று வாழைச்சேனை ஹைராத் ரான்ஸ்போட் நிருவாகிகள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும் அமைச்சரமான றிஸாட் பதியுதீன் மற்றும் உயர் பீட உறுப்பினர்களிடம் உறுதியளித்துள்ளதாக கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். வாழைச்சேனை ஹைராத் ரான்போட் நிருவாகத்திற்கும் அகில இலங்கை…

Read More

பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கு: மைத்திரி வாழ்த்து!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரித்தானியாவின் புதிய பிரதமரான தெரேசாவிற்குவாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வாழ்த்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரது டுவிட்டர் பக்கத்தில்பதிவேற்றம் செய்துள்ளார். ஐக்கிய இராச்சியத்தின் முக்கிய காலகட்டத்தில் இந்த மாற்றம் இடம்பெறுகின்றமையினால் பிரித்தானியாவிற்கு வலிமையை வழங்கும் என்றும் தன்நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் டேவிட் கமரூனிற்கு பதிலாக நேற்றைய தினம்  (13) தெரேசாபதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.

Read More