Headlines

புலவர் திருநாவுக்கரசின் மறைவு மன்னார் மக்களுக்கு பாரிய இழப்பாகும்.

மன்னார் மாவட்டத்தின் திருக்கேதீஸ்வர ஆலய அறங்காவலர் சபை இணைச்செயலாளர் புலவர்  அம்பலவாணர் திருநாவுக்கரசு (சமாதான நீதவான்) மறைவு இந்துக்களுக்கு மாத்திரமன்றி அந்த மாவட்டத்தில் வாழும் ஏனைய இன மக்களுக்கும் கவலை தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். தமிழிலே நன்கு புலமையும், பாண்டித்தியமும் பெற்ற அமரர் திருநாவுக்கரசு சைவத்தின் மேன்மைக்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தார். மன்னார் மாவட்டத்தில் இந்து, இஸ்லாமிய கிரிஸ்தவ மக்களின் இன நல்லுறவை வலுவாக்கும் வகையில் அவரது செயற்பாடுகள்…

Read More

‘வன்னிச் சமூகங்களை குழப்பி வாக்கு வேட்டையாட சிலர் சதி; சோரம் போகாது துணிந்து நில்லுங்கள்’ – மன்னாரில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்!

சிறுபான்மைச்  சமூகங்களை அச்சுறுத்தி, பிரித்தாண்டு பெரும்பான்மைச் சமூகத்தின் வாக்குகளைப் பெறத் துடிப்போரைத் தோற்கடிப்பதற்கு, தொலைபேசிச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னாரில் (01) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே, அவர் இதனைத் தெரிவித்தார். ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்ததாவது; சிறுபான்மையினர் பயமுறுத்தப்படும் ஒரு சூழலில் நாம் இத்தேர்தலை எதிர்கொண்டுள்ளோம். பேரினவாதிகளின்…

Read More

முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயா அவர்களுக்கு!

-மனாப் அஹமத் றிசாத் , அக்கரைப்பற்று – இலங்கை போன்ற பல்லின மக்கள் வாழும் நாட்டில் குறு நில மன்னர்களாக வாழ்வதற்கு முஸ்லிங்களுக்கு என்ன தேவை இருக்கிறது. தற்காலிகமாக இரவோடிரவாக முஸ்லிங்களை பற்றி சிந்திக்காமல் இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்கள் தற்பொழுது சட்டரீதியாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. இப்பொழுது கிழக்கில் வாழும் தமிழ் முஸ்லிம் யாவரும் நலமாகத்தான் இருக்கிறார்கள். தமிழ் கூட்டமைப்பும், வடக்கு மாகாணசபை முதல்வராகிய நீங்களும்; வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைவதன் நோக்கம்…

Read More

மட்டகளப்பு அரசியல் வாதிகளின் ஊழல்கள் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படும் – அமீர் அலி (photos)

ஓட்டமாவடி அஹமட் இர்சாட் மொஹமட் புஹாரி தான் இந்த பிரதி அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றதற்கினங்க மாவட்டத்தில் அரசியல் பிரமுகர்களும் அரச அலுவலர்களும் நீண்ட காலமாக செய்து கொண்டிருக்கும் ஊழல்களை சட்டத்துக்கு முன் கொண்டு வந்து அனைத்தையும் உடைத்தெரிவதே எனது நூறு நாள் வேலைத்திட்டத்தில் முதற்திட்டமாக இருக்கும் என எம்.எஸ்.எஸ்.அமீர் அலி நேற்று(23.01.2015) செத்சிரிபாயாவில் உள்ள சமூர்த்தி வீடமைப்பு பிரதி அமைச்சில் தனது கடமையை பொறுப்பேற்றதற்கு பிற்பாடு அஹமட் இர்சாட்டின் கேள்விக்கு மேற்கண்டவாறு பதிலளித்தார். அமீர் அலி பிரதி…

Read More

220 பேர் தொடர்பில், இதுவரை தகவல் இல்லை

இயற்கைப் பேரனர்த்தத்தினால் இலட்சக்கணக்கான மக்கள் நிர்க்கதியாகியுள்ளதுடன் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதேவேளை, ஆகக்குறைந்தது 173 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதேவேளை, 414,627 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த மத்திய நிலையம் அறிவித்துள்ளது. மலையகத்தில் மண்சரிவுகளும், தாழ்நிலப்பிரதேசங்களில் வெள்ளமும் சூழ்கொண்டுள்ளன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றுமுழுதாகப் பாதிப்படைந்துள்ளது. இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மட்டுமன்றி, அவர்களின் உறவினர்கள் மற்றும் துயர்பகிரச் செல்வோரும் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். பாரிய அழிவுகளை ஏற்படுத்திய…

Read More

புறக்கோட்டை தங்க ஆபரண கடைத்தொகுதி இன்று திறப்பு; அமைச்சர் பசில் பிரதம அதிதி

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள புறக்கோட்டை இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண கடைத் தொகுதி இன்று மாலை 4.30 மணிக்கு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ள இந் நிகழ்வில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உட்பட முக்கியஸ்தர்கள் பலர் பங்குபற்றவுள்ளனர். 1894 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலம் முதல் சென். ஜோன்ஸ் மீன் சந்தையாகவும் 1983 ஆம் ஆண்டு முதல் மீன்…

Read More

ஐ.தே.க வை மறுசீரமைக்கும் அதிகாரம் பிரதமரிடம்

ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைக்கும் அதிகாரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்க கட்சியின் மத்திய செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது. சிறிகொத்தாவில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று  (25)முன்தினம் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட செயற்குழுக் கூட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. கட்சியில் ஏற்படுத்தப்பட வேண்டிய கட்டமைப்பு மாற்றங்கள், சங்கங்கள் மற்றும் கிளைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. இதேவேளை, மே தினக் கூட்ட ஏற்பாடுகள் குறித்து தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு பிரதமர் இதன் போது…

Read More

85ஆயிரம் மெற்.தொன் நெல் சந்தைக்கு!

நெல் களஞ்சிய சபையிலிருந்து பெருந்தொகையான நெல்லை சந்தைக்கு விநியோகிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 85,000 மெட்றிக் தொன் நெல் சந்தைக்கு வழங்கப்படவுள்ளதாக நெல் களஞ்சிய சபையின் தலைவர் எம்.பீ.திசாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் இதற்கான கேள்வி அறிவிப்பு அடுத்த வாரத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இதுவரை நெற் களஞ்சிய சபையில் உள்ள 2 லட்சம் மெட்றிக் தொன் நெல் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை மீண்டும் ஒரு தடவை மத்தள விமான நிலையத்தில் நெல்லை களஞ்சியப்படுத்தும் தேவை…

Read More

அன்னத்திற்கு வாக்களியுங்கள் ,சிறுபான்மை சமூகத்தை பாதுகாக்க முடியும்_காத்தான்குடியில் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அன்னச் சின்னத்திற்கு வாக்களித்து சஜீத் பிரேமதாசவை ஜனாதிபதியாக்குவோம் இதனால் தான் சிறுபான்மை சமூகத்தை பாதுகாக்க முடியும் என பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். காத்தான்குடியில் நேற்று (19) இடம் பெற்ற ஐக்கிய தேசிய முன்னனியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவை ஆதரித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவு பொதுக் கூட்டத்தில்” ஒன்றாய் முன்னோக்கி” எனும் தொனிப்பொருளில் இடம் பெற்ற கூட்டத்தின் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றுகையில்  18 ஆவது திருத்தச்…

Read More

இனவாத சக்திகளின் வாய்க்கு பூட்டுப்போடுவோம்-றிசாத் பதியுதீன்

  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் கொழும்பு புதுக்கடை இறுதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஆற்றிய உரை  மேல்மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இறுதித்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உங்கள் முன்னிலையில் உரையாற்றுதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட எமது கட்சி வடக்கு கிழக்கில் இதுவரை காலமும் அரசியல் செய்து பாராளுமன்றத்திலும் மாகாண சபைகளிலும் உள்ளுராட்சி மன்றங்களிலும் பிரதிநிதிகளை பெற்றிருக்கின்றது. அந்த மக்களின் விடிவுக்காக உழைத்தும்…

Read More

“வில்பத்து பிரதேசத்தில் ஓர் அங்குலக் காணியிலேனும், மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை”

-ஊடகப் பிரிவு – வில்பத்து பிரதேசத்தில் ஓர் அங்குலக் காணியிலேனும் மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை எனவும், கடும்போக்காளர்கள் வேண்டுமன்றே திட்டமிட்டு, அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது இவ்வாறான பொய்யான பரப்புரைகளையும், உண்மைக்குப் புறம்பான செய்திகளையும் வெளியிட்டு, நாட்டு மக்களை தவறாக வழி நடத்துகின்றனர் என்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தேசப்பிரிய தெரிவித்தார். அமைச்சர் றிசாத் பதியுதீனின் அழைப்பின் பேரில் நேற்று (03/09/2016) மன்னாருக்கு விஜயம் செய்த, நிலையான அபிவிருத்தி மற்றும் வனவிலங்கு அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா மன்னார் கச்சேரியில்…

Read More

கலாவெவயில் புணர் நிர்மாணம் செய்யப்பட்ட வீதி மக்கள் பாவனைக்காக திறப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இப்பலோகம பிரதேச சபை உறுப்பினர் நளீமின் வேண்டுகோளுக்கு இனங்க அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிராத்தித்தலைவருமான இஷாக் ரஹுமானின் பன்முகப்படுத்தப்படட நிதியொதுக்கீட்டில் கலாவெவ 491 குசலானகம துலானையில் புணர் நிர்மாணம் செய்யப்பட்ட ஈச்சன்குலம் ஒழுங்கை வீதி பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானினால் மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் பிரதேச மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்ததனார்

Read More