Headlines

தெற்கில் 14 பாதாள உலகக் குழுக்கள்!

தெற்கில் 14 பாதாள உலகக்குழுக்கள் செயற்பட்டு வருவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பாதாள உலகக் குழுச் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் நியமிக்கப்பட்ட விசேட குழு நடத்திய ஆய்வுகளின் மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சுற்றுலா விடுதிகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் செல்வந்தர்களிடம் கப்பம் பெற்றுக் கொள்ளல் மற்றும் ஹெரோயின் போதைப் பொருள் வர்த்தகம் ஆகியனவே இந்த பாதாள உலகக் குழுக்களின் பிரதான வருமானமாக அமைந்துள்ளது. பாதாள உலகக்குழு உறுப்பினர்களுக்கு இடையிலான மோதல்களினால் மேற்கொள்ளப்படும் கொலைகள் மற்றும்…

Read More

போலாந்தில் இப்படியும் நடைபெற்றது..!

போலந்து நாட்டின் வார்சாவில் உள்ள விலங்கியல் காப்பகத்தில் காதலில் மூழ்கித் திளைத்த காரணத்திற்காக பிரிக்கப்பட்ட இரண்டு கழுதைகள் பிரிக்கப்பட்டு மீண்டும் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளன. அந்தக் கழுதைகளின் பெயர் நெப்போலியன் மற்றும் அனடோசியா என்பதாகும். இருவரும் இப்போது மீண்டும் தங்களது காதலைத் தொடர்கின்றனர். இரு கழுதைகளும் காதலில் மூழ்கித் திளைத்ததாக கூறி சமீபத்தில் இதைப் பிரித்து விட்டனர். இரு கழுதைகளும் கிட்டத்தட்ட 10 வருடமாக ஒன்றாக சுற்றித் திரிந்த காதல் பறவைகளாகும். ஆனால் இந்த விலங்கியல் பூங்காவுக்கு வந்த…

Read More

கெக்கிராவ – மகவெவ பிரதேச மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு இஷாக் ரஹுமான் எம்.பியினால் தீர்வு!

-ஊடகப்பிரிவு- சுமார் 150 இற்கும் அதிகமான சிங்கள குடும்பங்கள் வசிக்கின்ற, பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய கிராமமே, கெக்கிராவ பிரதேச சபைக்குட்பட்ட மகவெவ கிராமம். இந்த கிராமவாசிகள் பல வருடங்களாக குடிநீர்ப் பிரச்சினையை எதிர்நோக்கி வந்துள்ளனர். இவர்களது பிரச்சினையை அறிந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான், இப்பிரதேச மக்களுக்கு கிணறுகளை அமைத்துக்கொடுத்து அவர்களது குடி நீர் பிரச்சினைக்குத் தீர்வினை பெற்றுக்கொடுத்துள்ளார்.  அந்தவகையில் இந்த குடிநீர்க் கிணறுகளை மக்கள் பாவனைக்கு…

Read More

ஐ.எஸ் எவ்வாறு உருவானது.. ? விளாடிமிர் புடின் விவரிக்கிறார் (வீடியோ)

‘ஒபாமா அடிக்கடி ஐ.எஸ் பற்றி பேசுகிறார். ஓகே… இந்த உலகில் ஐ.எஸ் அமைப்புக்கு ஆயுத சப்ளை செய்வது யார்? சிரியாவில் ஆசாத் அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கியிருப்பவர்கள் யார்? இது போன்ற ஒரு குழப்பமான நிலையை அந்த நாட்டில் உருவாக்கியவர்கள் யார்? போரிடுபவர்களுக்கு ஆயுத சப்ளை செய்பவர்கள் யார்? ஆசாத் அரசுக்கு எதிராக போரிடுபவர்கள் உண்மையில் யார் தெரியுமா? அவர்கள் அனைவரும் கூலிப்படையினர். அவர்கள் அனைவருக்கும் மாத சம்பளம் வழங்கப்படுகிறது. சம்பளம் தருபவர்கள் பக்கம் சார்ந்து போரிடும்…

Read More

நிலைமைகள் தொடர்பில் ஆராய பொலிஸ் மா அதிபர் யாழ் விஜயம்

பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோன் யாழ்ப்பாணம் சென்றுள்ளார். யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் ஆராய நேற்று இரவு இவர் யாழ் புறப்பட்டுச் சென்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை யாழில் நேற்று ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பில் இதுவரை 130 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். புங்குடுத்தீவில் பாடசாலை மாணவி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், கைதான சந்தேகநபர்களை யாழ் நீதிமன்றத்துக்கு கொண்டு வந்த வேளை…

Read More

மனைவியின் சடலத்துடன் பஸ்ஸிலிருந்து வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்பட்ட கணவன்

பஸ்சில் பயணம் செய்து கொண்­டி­ருக்கும் போது உடல்­ந­லக்­கு­றைவால் உயிரிழந்த மனை­வி யின் சடலத்துடன்  நப­ரொ­ரு­வர் வலுக்­கட்­டா­ய­மாக இறக்கப்பட்ட சம்பவம் ஒன்று இந்திய மத்திய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மத்­திய பிர­தேச மாநிலம் தாமோ மாவட்­டத்தை சேர்ந்­தவர் ராம் சிங் லோதி, இவர் தமது மனை­விக்கு உடல் நலக் குறைவால் பிறந்து 5 நாட்­க­ளே­யான குழந்தை மற்றும் தாய் சனியா பாயுடன் தனியார் பஸ் ஒன்றில் பயணம் மேற்­கொண்­டுள்ளார். மனை­வியின் உடல்­நிலை மிகவும் கவ­லைக்­கி­ட­மாக இருந்ததால் அவர் பஸ்ஸில் செல்லும்…

Read More

அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் இறுதிநாள் இன்று

பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்கான தேசிய அடையாள அட்டைகள் இல்லாதவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டை வழங்கும் கால எல்லை இன்றுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இதன்படி தேர்தலில் வாக்களிக்க உரிய அடையாள அட்டை இல்லாதவர்கள், இன்றைக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். பிரதேசத்திற்கான கிராம சேவகர் அல்லது அருகிலுள்ள தேர்தல்கள் செயலக அலுவலகத்தில் குறித்த நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் எனவும் தற்காலிக அடையாள அட்டைகள் மாவட்ட செயலகத்தினால் மாத்திரம் விநியோகிக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

முசலி பிரதேச செயலகத்தினால் உருளை கிழங்கு வினியோகம்

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி நிலையினை கருத்தில் கொண்டு அதனை நிவர்த்தி செய்யும் முகமாக அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சினால் 7,500 கிலோ உருளை கிழங்கு பிரதேச செயலாளரின் வேண்டுகோளினை அடுத்து நேற்று (01) முசலி பிரதேச செயலகத்திற்கு வழங்கப்பட்டது. அதனை அடுத்து முசலி பிரதேசத்தில் உள்ள 21 கிராம உத்தியோகத்தர் பிரிவிற்கும் ஒரு குடும்பத்திற்கு 3 கிலோ விகீதம் பிரதேச செயலாளர் செல்லத்துறை கேதீஸ்வரன் மற்றும் முசலி பிரதேச சபை தவிசாளர் எஹியா பாய்…

Read More

கொஸ்லாந்தையில் மண்சரிவு இடம்பெற்று ஓராண்டு!

மலையக மக்கள் பட்ட இன்னல்களுக்கு மத்தியில் பேரிடியாக நிகழ்ந்த சம்பவம்தான் கொஸ்லாந்தை மண்சரிவு அனர்த்தம். கடந்த வருடம்  பண்டாரவளை – கொஸ்லாந்தை மீரியபெத்த பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவினால் ஒரு கிராமமே மண்ணுக்குள் புதையுண்டு போனது யாவரும் அறிந்ததே! ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கொஸ்லாந்தை மீரியபெத்த பகுதியில் கடந்த வருடம் இதேநாள் காலை வேளையில் ஏற்பட்ட குறித்த அனர்த்தத்தால் 30இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த அதேவேளை, அவர்களில் பலரின் சடலங்களையேனும் மீட்கமுடியாத அவலநிலை  ஏற்பட்டது. அத்துடன் சுமார் 10…

Read More

இலங்கையில் இன ரீதியான பதற்றங்களை உருவாக்கும் எவ்வித நோக்கமும் கிடையாது – நோர்வே

இலங்கையில் இன முரண்பாடுகளை தூண்டும் நோக்கம் நோர்வே அரசாங்கத்திற்கு கிடையாது என இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிரிட்டி லோஸன் தெரிவித்துள்ளார். இலங்கையில் இன ரீதியான பதற்றங்களை உருவாக்கும் எவ்வித நோக்கமும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். சுயகௌரவம், பல்வகைத் தன்மை போன்றவற்றை நோர்வே அரசாங்கம் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார். நோர்வே அரசாங்கம் கடும்போக்குடைய அமைப்புக்களை ஊக்குவிப்பதாகவும், இன முரண்பாடுகளை தூண்டுவதாகவும் இலங்கை ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், இலங்கையில் முரண்பாடுகளை…

Read More

“மக்களை தவறாக திசை திருப்புகின்றார் சார்ள்ஸ் எம்.பி” பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாட்..

  சதொச நிறுவனத்தை தாம் பொறுப்பேற்க முன்னர் 2014 ஆம் ஆண்டு அரிசி இறக்குமதியில் மோசடி இடம்பெற்றுள்ளதாக, எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு, சதொச நிறுவனத்தின் தற்போதைய தலைவர் மற்றும் நிறுவன உயரதிகாரிகள் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இந்த விசாரணைக்குத் தேவையான தரவுகளை உள்ளக கணக்காய்வு பிரிவு வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். 2018 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு – செலவு திட்டத்தின், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின்…

Read More

ஊவா மாகாண சபைத் தேர்தல் 2014: வாக்களிப்பு ஆரம்பம்!

பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களை உள்ளடக்கிய ஊவா மாகாண சபைக்கான தேர்தல் வாக்களிப்பு இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பமானது. 834 மத்திய நிலையங்களில் ஆரம்பமாகியுள்ள வாக்களிப்பு மாலை 04.00 மணிக்கு நிறைவு பெறும் என்று தேர்தல்கள் அத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே, தேர்தல்களுக்கான சகல ஏற்பாடுகளும் நேற்றையதினமே பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் உட்பட 12000 பேர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆள் அடையாளங்களை உறுதிப்படுத்தக் கூடிய தேர்தல் திணைக்களத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட…

Read More