Headlines

‘2020ம் ஆண்டை நோக்கிய புதிய பாதை’ கூட்டுறவுத்துறையின் நவீன வளர்ச்சிக்கு உதவும் குருணாகலில் அமைச்சர் ரிஷாட் நம்பிக்கை

  நூறு வருட பழமைவாய்ந்த இலங்கையின் கூட்டுறவுத் துறையை மறுசீரமைத்து  நவீனத்துவப்படுத்தும் வகையிலான 2020ம் ஆண்டை நோக்கிய புதிய பாதை ஒன்றுக்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். 95வது சர்வதேச கூட்டுறவுத் தின விழா குருணாகலில் இடம்பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். கூட்டுறவு, அபிவிருத்தி, நோக்கு – 2020 என்பதை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும் இந்த நவீன மறுசீரமைப்பு, கூட்டுறவுத்துறையை மேலும் பலப்படுத்துவதற்கு உதவும்….

Read More

உயர்நீதிமன்ற விளக்கத்தை ஏற்கத் தயாரில்லை – ஜே.வி.பி.

ஜனாதிபதி மஹிந்த மூன்றாவது முறையாகவும் ஜனாதி பதித் தேர்தலில் போட்டியிட முடியுமென உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள சட்ட வியாக்கியானத்தை ஏற்க முடியாதென திட்டவட்டமாக நேற்று அறிவித்தது ஜே.வி.பி. அத்துடன், சட்டவிரோதமான முறையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு மஹிந்த முன்னெடுக் கும் நடவடிக்கைகளைத் தோற்கடிப்பதற்கு ஜே.வி.பி. நடவடிக்கை எடுக்கும் என்றும் இதன் ஓரங்கமாக எதிர்வரும் 18ஆம் திகதி கொழும்பில் மாபெரும் எதிர்ப்புப் பேரணியை தமது கட்சி நடத்தும் என்றும் ஜே.வி.பியின் பொதுச் செய லாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். பத்தரமுல்லை…

Read More

‘கருத்தடை மருந்து இருப்பதாக உறுதிப்படுத்தினால் பதவி துறப்பேன்’ பாராளுமன்றில் இஷாக் எம்.பி. தெரிவிப்பு! 

-ஊடகப்பிரிவு- கருத்தடை மருந்துகள் இருப்பதாக உறுதிப்படுத்தினால் உடனடியாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பதற்குத் தயாராக இருக்கின்றேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர். இஷாக் ரஹ்மான் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (20) செவ்வாய்க்கிழமை நம்பிக்கை பொறுப்பு சட்டமூலத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், கடந்த மாதத்தில் நாட்டில் சில இடங்களில் ஏற்பட்ட குழப்ப நிலைமை தொடர்பில் பௌத்தமதத் தலைவர்கள் மற்றும்…

Read More

இலகுவில் பாராளுமன்றம் செல்லலாம் என்று கட்சி தாவிய ஹிஸ்புல்லாவுக்கு மக்கள் பாடம் புகட்டுவர் – வேட்பாளர் சுபைர் தெரிவிப்பு!

காத்தான்குடி மக்களிடத்தில் செல்வாக்கிழந்து பலவீனமடைந்துள்ள கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா ஏறாவூர் எல்லைக் கிராமங்களில் பொய்களைக்கூறி வாக்குகளை சூறையாட முயற்சித்து வருகிறார் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, ஐக்கிய மக்கள் கூட்டணியில், மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளரும் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரூமான எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார். ஹிஸ்புல்லாவின் மோசமான அரசியல் செயற்பாட்டிலிருந்தும், ஏறாவூர் மண்ணையும் மக்களையும் பாதுகாப்பதற்கு, ஊரின் சிரேஷ்ட அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்….

Read More

கைத்தொழிற்துறையை மேம்படுத்துவதே எனது இலக்கு – அமைச்சர் றிஷாத்

-சுஐப் எம்.காசிம் – கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழான கைத்தொழில் அபிவிருத்திச் சபை, சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் இன்கொம் (INCOM -2016) என்ற தொனிப்பொருளிலான மாபெரும் கண்காட்சியை ஆகஸ்ட் 26 – 30 வரை நடாத்துவதற்கு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். கொழும்பு, ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் இன்கொம் கண்காட்சி தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அமைச்சர் மேலும் கூறியதாவது, யுத்தத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட…

Read More

தேசிய கீதம் தமிழ் மொழியில் படப்பட வேண்டும்- ரவூப் ஹக்கீம்

தேசிய கீதத்தைக் கூட நாங்கள் இன்னும் ஒரே மொழியில் படித்துக் கொண்டிருக்கின்ற ஒரு நிலைமை இருப்பது வருந்தத்தக்க விடயம், இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும் என   நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நாங்களாக இருக்கிற ஒரு மாகாண சபையில் கூட இரண்டு மொழிகளிலும் இசைப்பதற்கு நாங்கள் துணிய வேண்டும். அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றால், அது உண்மையிலேயே நாங்கள் எல்லோரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய விசயம். என்னைப் பொறுத்தமட்டில் நாங்கள் துணிகரமாக…

Read More

PJ வருகை குறித்து, ஜம்இய்யத்துல் உலமா எச்சரிக்கை

1437-01-22 2015-11-05 தென்னிந்தியாவைச் சேர்ந்த பீ. ஜைனுலாப்தீன் அவர்கள் ஒரு நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொள்ள இருப்பதாக ஊடகங்களினூடாக அறிய முடிகிறது. கடந்த கால அவரது விஜயத்தின் பொழுது ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகள் மற்றும்  சமூக ஒற்றுமையையும், சக வாழ்வையும் சீர்குலைக்கும் சம்பவங்கள் ஏதும் ஏற்படாமலிருப்பதை கவனத்திற் கொண்டு இலங்கையின் பல முன்னணி இஸ்லாமிய நிறுவனங்களும், அமைப்புக்களும், அறபுக் கல்லூரிகளும் அவரது விஜயம் ஆரோக்கியமற்றது என எழுத்து மூலமும், தொலைபேசி மற்றும் நேரடியாகவும் ஜம்இய்யாவுக்கு அறிவித்த…

Read More

தந்தையைக் கொன்றவர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள்;ஹிருனிகா

தந்தையைக் கொன்றவர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் என  ஆளும் கட்சியிலிருந்து பிரிந்து எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளருக்கு ஆதரவளிக்கும் மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். மூன்று வருடங்களாகியும் எனக்கு நீதி கிடைக்கவில்லை. ஆனாலும் ஒழுங்கான தலைமைத்துவம் ஒன்றில்லாததால் நான் பொறுமையுடன் காத்திருந்தேன். தற்போது அதற்கான சூழ்நிலை உருவாகியிருப்பதால் நான் பொது வேட்பாளரைப் பலப்படுத்தி அவரது வெற்றிகாக உழைக்க முடிவெடுத்திருக்கிறேன். அரசிலிருந்து வெளியில் இருந்து வருபவர்களுக்கு பதவிகளும் அமைச்சுகளும் முன்னரிமையுடன் வழங்கப்படுவதைக் கொண்டு சுதந்திரக் கட்சியின் மூத்த…

Read More

இலங்கை வர முற்பட்ட அகதி கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கடல் மார்க்கமாக தனது உறவினர்களை பார்ப்பதற்காக இலங்கை வர முற்பட்ட நபர் ஒருவரை தமிழக பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த நபர் மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த நடராஜன் (55) ஆவார். குறித்த நபர் கடந்த 2011 ஆம் ஆண்டில் தமிழகம் சென்று, வெளிப்பதிவு அகதியாக விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தங்கியிருந்ததோடு, கூலித் தொழில் செய்து வந்தார் என தமிழன ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன. மீனவர்களின் தகவலின்படி தனுஷ்கோடி பொலிஸார், நடராஜனை பிடித்து மேலதிக விசாரனை…

Read More

இறை­வரித் திணைக்­க­ளத்தில் கடந்த காலத்தில் பாரி­ய­மோ­ச­டி­கள்

வரி அற­வீ­டுகள் தொடர்பில் இறை­வரித் திணைக்­க­ளத்தில் பாரிய மோச­டிகள் இடம்­பெற்­றுள்­ளன. அவை தொடர்­பில் முழு­மை­யான விசா­ர­ணை நடத்­தப்­பட வேண்­டு­மென அமைச்சர் ரவூப் ஹக்கீம் சபையில் கோரிக்கை விடுத்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வுக்கு எதி­ராக கொண்­டு­வ­ரப்­பட்ட நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் உரை­யாற்­று­கையில்; கடந்த காலங்­களில் பல நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைகள் இந்த சபையில் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளன. 1994 ஆம் ஆண்டு நானும் நிதி அமைச்சர்…

Read More

கல்கிசை பொலிஸ் குற்றத்தடுப்பு ஓ.ஜ.சி கைது

– அஷ்ரப் ஏ சமத் – கல்கிசை பொலிசின் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஒரு பெண்ணிடம் லஞ்சம் பெற்றதற்காக இன்று  (21) ஆம் திகதி பொலிசின் விசேட விசாரனைப்பிரிவின் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டாா். பொறுப்பதிகாரி ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்கு எதிராக பதியப்பட்ட முறைப்பாட்டினை சரிசெய்து தருவதற்காக 1 இலட்சம் ருபா பேரம் பேசி உள்ளாா். அதில் முற்பணத்தினை தெஹிவளை மக்கள் வங்கிக்கருகில் வைத்து குறித்த பெண்ணிடம் 20ஆயிரம் பெறும்போதே விசேட பொலிஸ் கைது செய்தனா். இவர் கொழும்பு மஜிஸ்திரேட்…

Read More

வெளியாகியது ஊவா தேர்தல் முடிவுகள்

வெளியாகியுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின் படி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 349906 வாக்குகளைப் பெற்று 19 ஆசனங்களை வசப்படுத்தியுள்ளது.இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி 274773 வாக்குகளைப் பெற்று 13 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 36580 வாக்குகளைப் பெற்று 02 ஆசனங்களையும் பெற்றுக் கொண்டுள்ளன.இதன்படி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 51.25 வீத வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 40.24 வீத வாக்குகளையும், மக்கள் விடுதலை முன்னணி 05.36 வீத வாக்குகளையும் வசப்படுத்தியுள்ளன.இதேவேளை…

Read More