Headlines

சோபித தேரரின் நலம் விசாரிக்கச் சென்ற மஹிந்த

சுகவீனம் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாதுளுவாவே சோபித தேரரின் நலம் விசாரிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.   கடந்த பதினெட்டாம் திகதி இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. கடுமையான சுகவீனம் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாதுளுவாவே சோபித தேரரின் நலனை விசாரிப்பதற்காக மஹிந்த ராஜபக்ச குறித்த மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் வருகை தந்துள்ளார். இதன் போது இருவரும் சுமார் அரை மணிநேரம் சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டுள்ளனர்….

Read More

( முழு வீடியோ இணைப்பு) சாதித்தாரா அமைச்சர் றிஷாத்

அஷ்ரப் அவர்களுக்கு தீகவாபி என்றால், அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் அவர்களுக்கு மரிச்சுக்கட்டி எனலாம். அன்று TNL சோம ஹிமியை வைத்து அஷ்ரப்புக்கு ஆப்படிக்க நினைத்த போது அவர் காலை வாற ஒரு பௌசி! ஆனால் இன்று ஒட்டுமொத்த மீடியாவும் இனவாதிகளோடு ஓரணியாக திரள, “அண்ணன் எப்ப சாவான்? திண்ண எப்போ காலியாகும்னு ?” ஏங்கும் போராளிகளின் ஓலம் பேஸ்புக்கெங்கிலும் ஈனஸ்வரமாக கேட்கிறது. ஓகே ! நேற்றிரவு நடந்த 360 நிகழ்ச்சியை கொஞ்சம் அலசுவோம்! ‘சங்க’ (සංඛ)என்ற பிறவியால்…

Read More

இசுறுபாயவுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்யத்தடை

வைத்தியர்களின் பிள்ளைகளை, அரசாங்கப் பாடசாலைகளுக்குச் சேர்ப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைக்கு எதிராக, இசுறுபாயவிலுள்ள கல்வி அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கத்தை, அங்கிருந்து விலகிச் செல்லுமாறு, கடுவெல நீதவான் நீதிமன்றத்தினால், சற்றுமுன்னர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பொதுமக்களை அசௌகரியத்துக்கு உள்ளாக்குதல், சமாதானத்தை சீர்குழைத்தல் போன்ற விடயங்களைக் கருத்திற்கொண்டே, கடுவெல நீதவான் தம்மிக்க ஹேமபாலவினால், இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Read More

புனர்நிர்மாணம் செய்யப்படும் மினன் ஜும்ஆ மஸ்ஜித் மையவாடி பாதை

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் ஆண்டங்கனி ஏதாளை பிரதேசத்தில் உள்ள மினன் ஜும்ஆ மஸ்ஜித் மையவாடி இல் உள்ள 300m பாதை புனர்நிர்மாணம் செய்வதற்கான வேளை திட்டம் நடத்தபட்டுள்ளது அவ்வேளை திட்டத்தை பார்வையிடும் போது..

Read More

டெங்குக் காய்ச்சலால் 22 வயது முஸ்லிம் பெண் வபாத்(கம்பளை)

எம்.எம்.எம்.  ரம்ஸீன் கம்பளையில் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட இளம் முஸ்லிம் குடும்பப் பெண்னொருவர் நேற்று 07.10.2014 உயிரிழந்துள்ளார். உடுநுவர வட்டதெனியவை சேர்ந்த இவர் கம்பளை ஆண்டியாகடவத்தை பகுதியில் திருமணம் முடித்து வசித்து வந்துள்ளார். கம்பளை போதனா வைத்தியசாலையில் கடந்த வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்ட பாத்திமா நஸ்லூன் என்ற (22 வயது) இப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரின் சடலம் கம்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டு விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதேவேளை கம்பளை பகுதியில் கடந்த சில வாரங்களாக மழை பெய்த நிலையில் மீண்டும்…

Read More

‘இலங்கையின் கூட்டுறவு சொத்துக்களின் பெறுமதி 03 பில்லியன் ரூபாயினை அண்மித்துள்ளது’ அமைச்சர் ரிஷாட்!

-ஊடகப்பிரிவு- இலங்கை கூட்டுறவு சங்கத்தின் அடிப்படை சொத்தின் பெறுமதி ஏறத்தாள 03 பில்லியனாக அதிகரித்துள்ளது. கூட்டுறவுச் சங்கங்கள் தொடர்ச்சியாக உதவி பெறுகின்றவைகளாக இல்லாமல், அவைகளும் சுதந்திர சந்தைப் பொருளாதாரத்தில் போட்டியிட முன்வர வேண்டும் என்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கொழும்பு, கலதாரி ஹோட்டலில் சர்வதேச கூட்டுறவு அமைப்பினால் நடாத்தப்பட்ட ஆசிய பசுபிக் கூட்டுறவு அபிவிருத்தி மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.  …

Read More

ஒரே நாளில் 50 சதொச விற்பனை நிலையங்களை ஜனாதிபதி, பிரதமரின் பங்ககேற்புடன் திறக்க ஏற்பாடு. கூட்டுறவுத்துறைக்கு புதிய கொள்கை வகுக்கும் மாநாட்டில் அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு

ஊடகப்பிரிவு ஜனாதிபதி, பிரதமர், மற்றும் கைத்தொழில் வர்த்தக அமைச்சரின் பங்கு பற்றுதலுடன் இம்மாதம் 28 ஆம் திகதி ஒரே நாளில் நாடு முழுவதிலும் 50 சதொச விற்பனை நிலையங்களை திறந்து வைக்க கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் முடிவு செய்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கூட்டுறவுத்துறைக்கான கொள்கையைத் தயாரிக்கும் வகையிலான இறுதிக்கட்ட மாநாடு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற போது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். மாகாண கூட்டுறவு அமைச்சர்கள்,…

Read More

மோட்டார் சைக்கிளை பதிவு செய்ய காலக்கெடு

சட்ட ரீதியான முறையில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் இல்லாத மோட்டார் சைக்கிளை பதிவு செய்ய நான்கு மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா முன்வைத்த கோரிக்கைக்கு  அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது ஊடகத் துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க, இதனைத் தெரிவித்துள்ளார்.

Read More

இலங்கை மீனவர்கள் 1205 பேர் கைது

இலங்கை மீனவர்கள் 1205 பேர் இந்திய கடற்படையினரினால் கடந்த ஐந்து வருடங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் இந்திய கடற்பரப்பில் அனுமதியின்றி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றத்தின் காரணமாக, அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதனுடன், 241 படகுகள்  கடற்படையினரினால் கைப்பற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இந்திய மீனவர்கள் 2391 பேர் இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய கடலோர கடற்படை தலைமை அதிகாரி சத்ய பிரகாஷ் சர்மா தெரிவித்துள்ளார். நாளைய தினம் குறித்த கடற்படை அதிகாரி சத்ய…

Read More

கியூபா பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது

கியூபாவை பயங்கரவாத நாடுகள் பட்டியலில் இருந்து நீக்குவதாக  அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இந்த நேற்று இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். கியூபாவிற்றும் அமெரிக்காவுக்கும் இடையில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக பகை நிலவி வந்தது. எனினும் கடந்த வாரம் அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி, கியூப உயர் மட்டத் தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார். அதனை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கும் கியூப தலைவர் ராகுஸ் கெஸ்ரோவிற்கும் இடையிலான நேரடி சந்திப்பு…

Read More