Headlines

செல்வநகர் மக்கள் சந்திப்பில் டாக்டர்.ஹில்மி மஹ்ரூப் பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- தோப்பூர், செல்வநகரில் இன்று மாலை (29) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளரும், கிண்ணியா முன்னாள் மேயருமான டாக்டர். ஹில்மி மஹ்ரூப் பங்கேற்றார். இங்கு உரையாற்றிய அவர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்திலே அதிகமான வட்டாரங்களைக் கைப்பற்றும் வாய்ப்பை இறைவன் ஏற்படுத்தித் தருவான். சிறுபான்மை மக்களின் சேவைத் தலைவராக மக்கள் பணியாற்றி வரும் மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்காக துஆ செய்யுங்கள் என்றும்…

Read More

பெண்கள் வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் தேர்தல் முடிவு ரத்து: பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் உத்தரவு

பாகிஸ்தானில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பெண்களுக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து தேர்தல் முடிவை அந்நாட்டு தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. நாட்டின் வடமேற்கில் உள்ள, பழமைவாதிகள் அதிக அளவில் வசிக்கும் கைபர் பக்துன்க்வா மாகாணம் லோயர் திர் மாவட்டத்தில் உள்ள பிகே-95 தொகுதிக்கு கடந்த மே 7-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. எனினும், தேர்தலின்போது பெண்களுக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, சமூக ஆர்வலர்கள்,…

Read More

சிறுபான்மை எமக்கு தேவையில்லை – அமைச்சர் மகிந்த யாப்பா

சிறுபான்மை மக்களின் வாக்குகளோ அல்லது ஆதரவோ எமது ஜனாதிபதிக்கு தேவையில்லை  என அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் இங்கு மேலும் தெரிவிக்கையில், நிறைவேற்று அதிகாரத்தை கொண்டே யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்தோம். தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் ஈழ கனவை நனவாக்க கங்கணம் கட்டி கொண்டு இருக்கின்றது. வெளிநாட்டு சக்திகளும் ஊடுருவப்பார்க்கின்றது. இதற்கு உதாரணமே வட மாகாண சபையில் செங்கோல் வீசி எறியப்பட்டது. யுத்தம் முடிந்தாலும் பிரச்சினைகள்…

Read More

மன்னார் கடலில் கலவரம்

மன்னார் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற மீன்பிடிப் படகொன்றின் மீது, மற்றுமொரு படகில் வந்த சிலர் தாக்குதல் மேற்கொண்டதால், அப்படகில் இருந்த மூன்று மீனவர்களில் ஒருவர், கடலில் குதித்து சுமார் 10 கிலோமீற்றர் தூரம் நீந்தி கரை சேர்ந்துள்ளார். ஏனைய இருவரும் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தின் போது, மேற்படி மீனவர்கள் மூவர் மீதும் கடுமையாக தாக்குதல் நடத்தப்பட்டதாக உயிர் தப்பிய மீனவர், பொலிஸாரிடம் சென்று அறிவித்துள்ளார். இந்நிலையில், மாயமாகியுள்ள மீனவர்கள் இருவரையும் தேடும்…

Read More

வாகன நெரிசலுக்கான தீர்வு : மக்களிடம் வேண்டுகோள்

புத்தாண்டை முன்னிட்டு தெற்கு அதிவேக நெடுஞ்சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்களை கட்டுப்படுத்த நேற்று முன்தினம் 08ஆம் திகதியிலிருந்து 13ஆம் திகதி வரையிலும் பின்னர் ஏப்ரல் 15ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரையிலும் பிரதான நுழைவாயில்களுக்குப் பதிலாக மாற்று நுழைவாயில்களை பயன்படுத்துமாறு வாகன உரிமையாளர்களிடம் நெடுஞ்சாலைகள் அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

Read More

கல்கமுவ அல் /அஸ்ஹர் பள்ளிவாசலுக்கு கதிரைகள் வழங்கிவைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், கல்கமுவ மஸ்ஜிதுல் அஸ்ஹர் ஜூம்ஆ பள்ளிக்கு பிளாஸ்டிக் கதிரைகளை வழங்கிவைக்கும் நிகழ்வு, நேற்று முன்தினம் (04) முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான எம்.என்.நஸீரின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், குளியாப்பிட்டிய பிரதேச சபை பிரதித்தவிசாளர் எம்.சி.இர்பான், பிரதேசசபை உறுப்பினர் எம்.ஐ.எம்.ஸபீர், கல்கமுவ தொகுதி அமைப்பாளர் பத்ர் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், கல்கமுவ பள்ளி நிர்வாக உறுப்பினர்கள் உட்பட ஊர்ப்பிரமுகர்களும்…

Read More

களனி கங்கையின் நீர்மட்டம் குறைகிறது

களனி கங்கையின் நீர்மட்டம் குறைந்து வருவதாகத் தெரிவித்துள்ள நீர்ப்பாசனத் திணைக்களம், இன்னும் மூன்று நாட்களில் கங்கையின் நீர்மட்டம் சாதாரண நிலைக்கு வரும் எனத் தெரிவித்துள்ளது. எனினும், வெள்ளம் வடிவதற்கு சில நாட்களாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Read More

மர்ஹூம் வை.எல்.எஸ். ஹமீட் ‘வாழ்வும் பணியும்’ நினைவேந்தல் நிகழ்வு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஸ்தாபகச் செயலாளர் மர்ஹூம் வை.எல்.எஸ். ஹமீட் அவர்களின் ‘வாழ்வும் பணியும்’ நினைவேந்தல் நிகழ்வு, இன்று சனிக்கிழமை (27) கல்முனை, ஆஸாத் பிளாஸா மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டு விஷேட உரை நிகழ்த்தியதுடன், முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நினைவுரை ஆற்றியிருந்தார். மேலும், மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளர் M.S.S. அமீர் அலி, சிரேஷ்ட பிரதித் தலைவர் சட்டத்தரணி N.M….

Read More

சுதந்திர கட்சி மாநாட்டில் மஹிந்த கலந்துக்கொள்ளமாட்டார்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65 வருட பூர்த்தி மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துக்கொள்ள மாட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். இன்று (18) ஒன்றிணைந்த எதிர்கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  வெளிநாட்டு பயணம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதால் குறித்த மாநாட்டில் கலந்துக்கொள்ள முடியாதென அவர் தெரிவித்தார். எவ்வாறாயினும் முன்னாள் ஜனாதிபதி சுதந்திர கட்சியின் 65 வருட பூர்த்தி மாநாட்டில் கலந்துக்கொள்வார்…

Read More

​கொழும்பின் பல பகுதிகளில் இன்று நீர்வெட்டு

இன்று இரவு 9 மணி முதல் நாளை காலை 5 மணி வரை கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. கொழும்பு 1, 2 ,3 ,7, 8, 9 ,10 ,11 ,12 மற்றும் கொழும்பு 13 ஆகிய பகுதிகளில் இந்த நீர் வெட்டு அமுலில் இருக்கும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. மாலிகாகந்தயிலுள்ள அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ள்படவுள்ள சுத்திகரிப்பு…

Read More

ஜாதிக ஹெல உறுமய இன்று அலரி மாளிகை செல்கிறது

ஜாதிக ஹெல உறுமைய இன்று 27-10-2014 ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சந்திக்கின்றது. அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, முக்கியமான சில அரசியல் விடயங்களை ஆராய்ந்து தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதன் பொருட்டு ஜாதிக்க ஹெல உறுமயவின்  விசேட மத்திய செயற்குழு கூட்டம் நேற்று இடம்பெற்றது. இந்த நிலையிலேயே, ஜாதிக்க ஹெல உறுமய இன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சந்திக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

கலக்கமா மயக்கமா ? தெளிவு பெறுங்கள் என்று….

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்  தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் வாவா அவர்கள் உங்களை விளிக்கிறார் . உங்களைப் பார்த்து கூறிகிறேன் : STAND UP AND BE COUNTED சில நாட்களாக கிழக்கில் முஸ்லிம்கள் யாருக்கு ? என்ற சொல்லை வைத்துக் கொண்டு கையில் பொல்லு ஓன்று மட்டும் இல்லாத குறையாக அறிவியல் ஜானத்தில் பூச்சியம் என்று மக்களால் முத்திரை குத்தப் பட்ட சில அரசியல் வாதிகளின் அம்புலி மாமா கதை…

Read More