Headlines

புலமைப் பரிசில் பரீட்சையில், அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவர்கள் 32 தகுதி

– எம்.ஏ.றமீஸ் – இம்முறை வெளியான தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவர்கள் அதிகப்படியானனோர் சித்தியடைந்து அக்கரைப்பற்று கல்வி வலயத்தில்; முதன் நிலை பெற்று வரலாற்றுச் சாதமை படைத்துள்ளனர் என அதிபர் ஏ.எல்.அன்வர் தெரிவித்தார். இப்பரீட்சையில் தோற்றிய அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவர்கள் 32 பேர் புலமைப் பரிசில் பெறத் தகுதி பெற்றுள்ளனர். இதனடிப்படையில் முகம்மட் றஜாப் பாத்திமா ஹதானி 179 புள்ளிகளைப் பெற்று வலயத்தின் முதன் நிலை பெற்று பாடசாலையின் வரலாற்றுச்…

Read More

சாய்ந்தமருதில் ஆடை கைத்தொழில் பயிற்சி நிலையம் திறப்பு

எஸ்.அஸ்ரப்கான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் அமைச்சருமான றிஷாட் பதியுதீனின் வழிகாட்டலின் கீழ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீடின் அயராத முயற்சியினால் கொண்டுவரப்பட்ட ஆடை கைத்தொழில் பயிற்சி நிலைய திறப்பு விழா இன்று (04) திங்கட்கிழமை அம்பாரை மாவட்டத்தின் சாய்ந்தமருதில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் கலந்து கொண்டு இந்நிலையத்தினை திறந்து வைத்தார். கட்சியின் சாய்ந்தமருது மத்திய குழுவினரின் பங்குபற்றுதலுடன் சாய்ந்தமருது அமைப்பாளர்…

Read More

அமைச்சர் றிஷாத் பதியுதீன் சவுதியிலிருந்து நாடு திரும்பினார்

ஊடகப் பிரிவு சவுதி அரேபிய நாட்டின் மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஸீஸ் அவர்களின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள றியாத் பயணமான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்.கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் இன்று(26) அதிகாலை நாடுதிரும்பினார். வெள்ளிக்கிழமை இரவு றியாத் பயணமான அமைச்சர் அந்த நாட்டின் முக்கியஸ்தர்களையும் சந்தித்து இலங்கை அரசாங்கத்தினதும்.முஸ்லிம் மக்களினதும் கவலையினை தெரிவித்துள்ளார். அதே வேளை இன்று மாலை 4.00 மணிக்கு மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச மக்களினால்…

Read More

தொடர்பாடல் அதிகாரிகள் நியமனம்

கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பொது மக்கள் தொடர்பு அதிகாரிகளாக இருவர் நேற்று அமைச்சில் வைத்து தமது நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்டனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிஷாத்  பதியுதீன் இந்த நியமனக்கடிதங் களை வழங்கி வைத்தார். மன்னார் மாவட்ட பொது மக்கள் தொடர்பு அதிகாரியாக வாங்காளையினை சேர்ந்த மார்க்க அண்டனும்,முல்லைத்தீவு மாவட்ட பொது மக்கள் தொடர்பு அதிகாரியாக விஜின்தனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வில் முன்னாள் மன்னார்…

Read More

நான் அப்படி கூறவில்லை- சுப்பிரமணியன் சுவாமி தெரிவிப்பு

தமிழக மீனவர் படகுகளை விடுவிக்க வேண்டாம் என்று தாம் கூறவில்லை என  பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். சுப்பிரமணியன் சுவாமி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இலங்கைக்கு தான் சென்று மகிந்த ராஜபக்சவை சந்தித்த போது, ‘தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்தால் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துங்கள், அவர்கள் தொழிலாளர்கள் அதனால் அவர்களை விடுவித்துவிடுங்கள், ஆனால் அவர்களது படகுகளின் உரிமையாளர்கள் பணக்காரர்கள் என்பதால் அவற்றை விடுவிக்க வேண்டாம் என்று சொன்னேன்….

Read More

ஆண்மையுள்ள சிங்கத்தின் வீரமிகு கர்ஜனை!

-எஸ். ஹமீத்   (அல்லாஹ்வின் மீது ஆணையாக….இன்றுவரை அமைச்சர் ரிசாத்திடமிருந்து அல்லது அவர் சார்ந்தவர்களிடமிருந்து ஒரு கொந்தராத்து அல்லது  ஒரு சதமேனும் இலவசமாகவோ, இனாமாகவோ, எதற்குமான கூலியாகவோ  பெற்றிராதவன் நான். இனிமேலும் பெறுகின்ற எண்ணமும் இல்லாதவன். நமதிந்த எழுத்துக்கள் சமூகத்திற்கான நன்மை கருதியே அன்றி, எவ்வித சுய இலாபங்களுக்கானதும் அல்ல.-கட்டுரையாளர்.) நேற்றைய தினம் கேகாலை மாவட்டத்தில் வைத்து ஓர் அரியேறு உரத்த குரலில் கர்ஜனை செய்திருக்கிறது. முஸ்லிம் சமூகத்தை அடக்கியாள என்னும் ஆட்சியாளர்களுக்குப் பெரும் தொனியில் சவாலும் எச்சரிக்கையும்…

Read More

‘மத்திய அரசும், மாகாண சபையும் இணைந்து பணியாற்றினாலேயே கூட்டுறவுத்துறையை வினைத்திறனுடையதாக மாற்றலாம்’ அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

-சுஐப் எம்.காசிம்- மத்திய அரசும், மாகாண சபையும் இணைந்து பணியாற்றுவதன் மூலமே, கூட்டுறவுத்துறையை வினைத்திறன் உள்ளதாக மாற்ற முடியுமெனவும், இந்தத் துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், தமது அமைச்சு இந்தத் துறையை மேம்படுத்த அனைத்து விதமான பங்களிப்புக்களையும் நல்கும் எனவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கூட்டுறவுத் துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகள் மற்றும் அதனைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை ஆராயும் கலந்துரையாடல், கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் எஸ்.எல்.நஸீர் தலைமையில், கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு…

Read More

களனி பல்­க­லை மாணவர்கள் ஐவர் கைது

நீண்ட காற்­சட்டை அணியக் கூடாது என தெரி­வித்து புதி­தாக களனி பல்­க­லைக் ­க­ழ­கத்­துக்கு அனு­மதி பெற்றுச் சென்ற மாண­விக்கு பகிடிவதை செய்த அப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் சிரேஷ்ட மாணவர்கள் ஐவர் கிரி­பத்­கொடை பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்பட்­டுள்­ளனர். கிரி­பத்கொடை பொலிஸ் நிலை­யத்தில் மாணவி ஒருவர் செய்த முறைப்­பாடு ஒன்­றுக்கு அமை­வான விசா­ர­ணை­க­ளி­லேயே இந்த ஐவ­ரையும் கைது செய்­த­தாக களனி பொலிஸ் வல­யத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் தேச­பந்து தென்­னகோன் தெரி­வித்தார். இது தொடர்பில் மேலும் அறிய முடி­வ­தா­வது, தற்­போது…

Read More

இந்திய பிரதமர் தலைமன்னார் புகையிரத சேவையினை ஆரம்பித்து வைப்பார் – றிஷாத் பதியுதீன்

இர்ஷாத் றஹ்மத்துல்லா இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொள்ளும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 14 ஆம் திகதி மன்னார் மாவட்டத்தின் “தலைமன்னார் பியர்” கிராமத்துக்கு வருகைத்தரவுள்ளதாக வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில் வணிகத் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் அரசாங்க அதிபர் பணிமனையில் (2015.03.08) இடம் பெற்ற இந்திய பிரதமரின் மன்னார் விஜயம் தொடர்பான நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து கூட்டத்தின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். மாவட்ட அரசாங்க அதிபர், மன்னார் பிரதேச…

Read More

வடக்கு கிழக்கு வைத்தியசாலைகளின் அபிவிருத்தி….. அமைச்சர் ரிஷாட், ராஜிதவிடம் அவசர வேண்டுகோள்!

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டில் வடக்கிலுள்ள சிலாவத்துறை வைத்தியசாலை, கிழக்கில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை, கிண்ணியா தள வைத்தியசாலை மற்றும் வடமேல் மாகாணத்திலுள்ள புத்தளம் தள  வைத்தியசாலை ஆகியவற்றிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்வதற்கான நிதியை ஒதுக்கி தருமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ணவிடம்,  கைத்தொழில் மற்றும் வர்த்தக  அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். வடக்கு கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தினால் மிகவும் மோசமாக  பாதிக்கப்பட்ட வைத்தியசாலைகளில் மேற்கூறப்பட்ட வைத்தியசாலைகளும் உள்ளடங்குவதாகவும், இதுவரையும் இந்த வைத்தியசாலைகள்…

Read More

சர்க்கரை நோயாளிகள் ஏன் வெந்தயத்தை சாப்பிட வேண்டும்?

சர்க்கரை நோய் வந்துவிட்டால், உண்ணும் உணவில் கவனமாக இருக்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. அதேப்போன்று சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஒருசில சமையல் பொருட்கள் மிகவும் நல்லது. அதில் ஒன்று தான் வெந்தயம். வெந்தயமானது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட ஏற்றது. மேலும் வெந்தயம் நீரிழிவை கட்டுப்பாட்டுன் வைப்பதோடு, உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும். அதே சமயம் வெந்தயம் உடலில் பல பிரச்சனைகளுக்கு காரணமாக விளக்கும் கொலஸ்ட்ராலுக்கும் நல்லது. வெந்தயம் எப்படி…

Read More

வீடொன்று மீது துப்பாக்கிச் சூடு

மாதம்பை, ஊரலிய பகுதியொன்றில் இனந்தெரியாத நபர்களால் வீடொன்று மீது நேற்றிரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இத்துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படாத போதிலும் வீட்டிற்கு முன்பக்கமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது.  இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,நேற்றிரவு 11.00 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்ட போது பட்டாசு சத்தம் என்று எண்ணி அது தொடர்பில் தாம் பொருட்படுத்தவில்லை என்று வீட்டின் உரிமையாளர் கூறியுள்ளார். சம்பவம் இடம்பெறும் போது வீட்டில்  மூன்று…

Read More