Headlines

தேஸ்ரன் கல்லூரி நீச்சல் தடாகத்திலிருந்து சடலம் மீட்பு

கொழும்பு தேஸ்ரன் கல்லூரியின் நீச்சல் தடாகத்தில் இருந்து 50 வயது மதிக்கத்தக்க நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பாடசாலையின் பழைய மாணவரொருவரின் சடலமாக இருக்கலாமென தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

வெளிநாடு வாழ் தொழிலாளர் சகோதரர்களே !

– எம்.வை.அமீர் – இனி நமக்காக நாமே பேசுவோம். வெளிநாடுகளில் பணி புரியும் அப்பாவி இலங்கை ஏழைத் தொழிலாளர்களின் நலன்களைப் பற்றி சிந்தித்தவர் எவருமில்லை. மத்திய கிழக்கில் மாத்திரம் சுமார் ஏறத்தாள 15 லட்சம் இலங்கை தொழிலாளர்கள் இருக்கின்றனர். மாறி மாறி எத்தனை ஆட்சிகள் தோன்றினாலும் எந்தவொரு அரசாங்கமும் எமது விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்ததுமில்லை . எனவே நாம் வாக்களிக்கும் வசதியைப் பெற்றுக்கொண்டால் மட்டுமே , அரசாங்கமோ அல்லது அரசியல் கட்சிகளோ, இந்த புலம்பெயர் தொழிலாளர்களின் வாக்குகளை மையமாகக்கொண்டு,…

Read More

“பிரதேச, ஊர்வாதங்களால் சமூகக் கட்டுக்கோப்பு சீர்குலைகின்றது” எருக்கலம்பிட்டியில் அமைச்சர் ரிஷாட்

பிரதேசவாதம், ஊர்வாதம் மற்றும் வட்டார வாதங்களால் முஸ்லிம் சமூக ஒற்றுமை பாழ்பட்டு ஒருவரை ஒருவர் எதிரிகளாகப் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.  மன்னார், எருக்கலம்பிட்டியில் அமைச்சரின் முயற்சியினால் சவூதி அரசின் நிதியுதவியில் நிர்மாணித்து வழங்கப்பட்டிருக்கும் 50 வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வு இன்று மாலை (17/ 11/ 2017) இடம்பெற்ற போது, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். எருக்கலம்பிட்டி EPIO நிறுவனம் ஏற்பாடு…

Read More

இது தந்தையின் தாலாட்டு..! (video)

அமெரிக்காவில் பிறந்து மூன்று நாளே ஆன குழந்தை இறந்தது. அது இறக்கும் தருவாயில் அதற்கு தந்தை பாடிய பாடல் அடங்கிய வீடியோ பார்ப்பவர்கள் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்தவர் கிறிஸ் பிக்கோ. கர்ப்பமாக இருந்த அவரது மனைவி ஆஷ்லிக்கு குறைமாதத்தில் ஆண் குழந்தை பிறந்தது. லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள லோமா லிண்டா பல்கலைக்கழக மருத்துவமனையில் நடந்த பிரசவத்தின்போது ஆஷ்லி மரணம் அடைந்தார். தாயின் வயிற்றில் 24…

Read More

அமைச்சர் றிஷாத் சதொச நிறுவனத்திற்கு விஜயம்!

வவுனியாவுக்கு நேற்று (13) விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன், வவுனியா லங்கா சதொச நிறுவனத்திற்கும் திடீர் விஜயம் செய்திருந்தார்.   வாடிக்கையாளர்களுக்கு எந்தத் தட்டுப்பாடுமின்றி அரிசியையும் மற்றும் ஏனைய பொருட்களையும் விநியோகிப்பது தொடர்பில் அங்குள்ள ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார். அரசாங்கம் அரிசிக்கு நிர்ணயித்த விலையை விட அதிகமாக விற்பனை செய்யும்  வியாபாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.  

Read More

நவவி எம் பி யின் முயற்சியால் புத்தளம் மாவட்டத்தில் அபிவிருத்தி பணிகள்.

நமது பாராளுமன்ற உறுப்பினரின் முயற்சியால் மாண்புமிகு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் கீழான “தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார மேம்பாட்டு ” அமைச்சின் ஊடாக 15 திட்டங்களுக்கு இரண்டு கோடி (200,000,00/=) ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . இதன் பணிகள் உடனடியாக இம்மாதமே ஆரம்பம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. திட்டமும் ஒதுக்கீடுகளும் கீழே – 01). உடப்பு ஆண்டிமுனை பாதை – 01 மில்லியன் 02). விருதோடை அல்முபாரக் பாதை – 1.5 மில்லியன் 03). விருதோடை –…

Read More

பிரித்தானிய பாதுகாப்பு உத்தியோகத்தர் தென் பகுதியில் உயிரிழப்பு

காலி துறைமுகத்திற்கு வருகை தந்துள்ள கப்பலில் சேவையாற்றிய பிரித்தானிய நாட்டு பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் மர்மமான முறையில் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலி – உனவட்டுன சுற்றுலா விடுதியொன்றிலிருந்து நேற்றைய தினம் (09) அவரது சடலம்  கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். காலி துறைமுகத்திற்கு வருகை தந்துள்ள குறித்த கப்பல் மீண்டும் பயணத்தை  ஆரம்பிக்கும் வரை இந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் உனவட்டு சுற்றுலா விடுதியில்  தங்கியுள்ளார். இந்த நிலையிலேயே குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர் மர்மமான முறையில்  உயிரிழந்துள்ளதாக…

Read More

சுவிட்ஸர்லாந்தில் அடைக்கலம் கோரியவர்களில் இலங்கையர்களுக்கு மூன்றாம் இடம்

கடந்த வருடத்தில் சுவிட்ஸர்லாந்தில் அரசியல் அடைக்கலம் கோரியுள்ளவர்களில் இலங்கையர்கள் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளனர்.இதன்படி 1277 இலங்கையர்கள் அரசியல் அடைக்கல கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இது முன்னைய ஆண்டுக்களை காட்டிலும் 87 வீத அதிகரிப்பாகும். இந்தநிலையில் மொத்தமாக சுவிட்ஸர்லாந்தில் அடைக்கலம் கோரியவர்களின் எண்ணிக்கை கடந்த காலங்களை விட 11 வீதத்தால் அதிகரித்து 23,765ஆக இருந்தது.பல்வேறு நாடுகளிலும் இடம்பெற்று வரும் உள்நாட்டு பிரச்சினைகளே இதற்கான காரணங்களாகும்.இதன்படி எரிட்ரியாவில் இருந்து அதிகமான 6923 பேர் சுவிட்ஸர்லாந்தில் கடந்த வருடம் அடைக்கலம் கோரினர். 2014ஆம்…

Read More

நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பம் 20 அணுகுண்டு வெடித்ததற்கு சமம்: அதிர்ச்சி தகவல்

நேபாளத்தில் கடந்த 25–ஆம் திகதி (சனிக்கிழமை) 7.9 ரிக்டரில் பூகம்பம் ஏற்பட்டது. அதில் காத்மாண்டு, போக்ரா, தீர்த்திநகர் உள்ளிட்ட பெரும் பாலான இடங்களில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள், ஓட்டல்கள் இடிந்து தரை மட்டமாயின. இடிபாடுகளுக்குள் சிக்கி ஏராளமானவர்கள் பலியாகினர். இதுவரை 4,310 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இடிபாடுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. இடிபாடுகளுக்குள் இன்னும் பிணங்கள் கிடக்கின்றன. எனவே பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டும் என அஞ்சப்படுகிறது. மேலும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம்…

Read More

எமில் நகர் விளையாட்டுக் கழக வீரர்களுடன் தேசிய தலைவர்

மன்னார் எமில் நகர் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியிதீன் வழங்கி வைத்தார்.  

Read More

பம்பலப்பிட்டியில் ஏற்பட்ட அதிர்வு தொடர்பாக ஆராய்வு

கொழும்பு பம்பலபிட்டி பகுதியை அண்மித்த பகுதியில் ஏற்பட்ட அதிர்வு , நிலநடுக்கமா என்பது தொடர்பில் கண்டறிவதற்கான ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பம்பலபிட்டி பகுதியில் நேற்று மாலை நான்கு மணியளவில் மூன்று தடவைகள் அதிர்வுகள் ஏற்பட்டதை தாம் உணர்ந்ததாக அப் பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர். அதிர்வுகள் உணரப்பட்டதை அடுத்து பாதுகாப்பான இடத்திற்கு தாம் சென்றதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர். இந்த விடயம் தொடர்பில் புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ மத்திய…

Read More

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரக் களம் சூடு பிடிக்கிறது; எதிரணி 140 கூட்டங்களை நடத்துகிறது!

ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியின் சார்பில் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து எதிரணியின் பிரச்சாரக்குழு 140 பிரதான கூட்டங்களை நடத்தத் தீர்மானித்துள்ளது. இந்தக் கூட்டங்களில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர். அத்தோடு, கிராமிய மட்டங்களில் 12 ஆயிரம் சிறிய கூட்டங்களை நடத்துவதற்கும்…

Read More