தர்காநகர் வரியிறுப்பாளர் சங்கத்தினர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பு!
-ஊடகப்பிரிவு- தர்கா நகர் -வரியிறுப்பாளர் சங்கத்தினர், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை தவிசாளர்க்கிடையிலான சந்திப்பு பேருவளை நாதா கார்டனில் (17) நடைபெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஹஷீப் மரிக்கார் உட்பட சக உறுப்பினர்கள் பலரும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். இந்த சந்திப்பில் தர்கா நகர் பிரதேசத்தில் நிலவும் வரி அறவிடுதலில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள், குப்பை கூழங்களை அகற்றுவதில் உள்ள குறைபாடுகள், வாசிகசாலை குறைபாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள்…
இலங்கை வரும் சுவிஸ் வெளிவிவகார அமைச்சர்
இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள சுவிட்ஸர்லாந்து நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மார்கோட் வொல்ட்ஸ்ரோம் யாழ். குடாநாட்டிற்கும் செல்லவுள்ளார்.சுவிட்ஸர்லாந்து வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரையும் சந்தித்து சுவிஸ் அமைச்சர் பேச்சுக்களை நடத்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேஷினி கொலன்னே தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மறவன்புலோவில் சுவிஸ் நாட்டின் நிதியுடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடமைப்பு திட்டத்தை பார்வையிடுவதற்காக சுவிஸ் அமைச்சர் எதிர்வரும் 26ஆம் திகதி…
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில், நோன்பு பிடிக்கத் தடை
சீனாவில் சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் ஜின்ஜியாங் மாகாணத்தில் ரம்ஜான் நோன்புக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு சீனாவில் அமைந்துள்ள தன்னாட்சி பிரதேசம் ஜின்ஜியாங். இந்த பகுதியில் 10 மில்லியனுக்கு அதிகமான உய்குர் முஸ்லீம் சிறுபான்மையினர் வசிக்கிறார்கள். சீனாவில் ஆட்சியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி நாத்திக கொள்கைகளை பின்பற்றுவதால். இன்று முதல் சீனாவில் நோன்பு கடைப்பிடிக்கப்படும் நிலையில், ஜின்ஜியாங் மாகாணத்தில் ரம்ஜான் நோன்புக்கு கடைப்பிடிப்பதற்கு புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இது குறித்து அரசாங்கம் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்…
வாள்வெட்டாக மாறியது: இலங்கையின் தோல்வி
இலங்கை அணியின் தோல்வியை அடுத்து கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். நேற்றுப் இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது, உலகக்கிண்ண காலிறுதிப் போட்டியில் நேற்று நடைபெற்ற இலங்கை, தென்னாபிரிக்கா ஆட்டத்தில் இலங்கை அணி தோல்வி அடைந்தது. இதையடுத்து தென்னாபிரிக்க ரசிகர்கள் இலங்கை அணி ரசிகர்களை கிண்ணடல் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து இரு அணிகளின் ரசிகர்களுக்கும் இடையே…
புத்தளம் – அறுவக்காடு கழிவகற்றல் திட்டத்துக்கு மக்கள் எதிர்ப்பு! புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்!
கொழும்பிலுள்ள குப்பைகளை புத்தளம், அறுவக்காட்டுப் பகுதியில் கொண்டுவந்து கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தளம் பிரதேச மக்கள் இன்று (19) இலவன்குளம் பகுதியில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொழும்புக் கழிவுகளை புத்தளம் அறுவாக்காட்டிற்கு கொண்டு சென்று முகாமை செய்வதற்கான பாரிய வேலைத் திட்டத்தை 105 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டுடன் பாரிய நகர அபிவிருத்தி அமைச்சு மேற்கொண்டு வருகிறது. ஒருநாளைக்கு கொழும்பிலிருந்து சுமார் 1200 மெற்றிக் டொன் கழிவுகளை புகையிரதம் மூலம் அங்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டு…
பிரசன்னவுக்கு வேட்புமனு கிடைக்காவிட்டால்; தனியாக கேட்பேன் – மஹிந்த
-அஸ்ரப் ஏ சமத்- கம்பஹா மாவட்டத்தில் பாரளுமன்றத் தோ்தலில் போட்டியிருந்த மேல் மாகாண முதலமைசசா் பிரசன்ன ரனதுங்கவின் பெயரை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க நீக்கியமைக்கு எனது எதிா்ப்பைத் தெரிவிக்கின்றேன். மீண்டும் பிரசன்ன ரனதுங்கவின் பெயா் உள் வாங்கப்படல் வேண்டும். இல்லாவிட்டால் எனது அணியிடன் வேறாக கேட்பேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளாா். பிரசன்ன ரணதுங்கவின் 2 சகோதரா்கள் ஏற்கனவே கம்பஹாவில் தோ்தல் குதிக்கின்றனா் பிரசன்ன ஏற்கனவே முதலமைச்சா்ராக இருப்பதால் சந்திரிக்கா அவரின்…
இறக்காமத்தில் இடம்பெற்ற மக்கள் காங்கிரஸின் மகளிருக்கான கூட்டம்!
-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்குமுகமாக, நேற்று (13) இறக்காமத்தில் இடம்பெற்ற மகளிருக்கான கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித் தலைவி டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் கூறியதாவது, மயில் சின்னத்துக்கு வாக்களிப்பதன் மூலம் எமது பெண்களின் அனைத்து விதமான தேவைகளையும் வேண்டுகோள்களையும் மக்கள் காங்கிரஸ் நிறைவேற்றித் தரும். கிழக்கு மாகாணத்திலே நாங்கள் அனைத்து இடங்களுக்கும் சென்று வருகிறோம். அந்தவகையில், உண்ண…
1 கோடிக்கு விலை போன தாய்
உலகத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் விலை கொடுத்து வாங்கி விடலாம். ஆனால் தாயை விலைக்கு வாங்க முடியாது என்பார்கள். அவ்வளவு விலை மதிப்புடையது தாய்ப்பாசம். ஆனால் சீனாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் தாயை விலைகொடுத்து தத்தெடுக்க முடிவு செய்துள்ளார். அதாவது குயாங்கானை சேர்ந்த 30 வயது நபர் ஒருவர் இணையதளத்தில் ஒரு விளம்பரம் கொடுத்துள்ளார். அதில் தான் ஒரு பெண்ணை தாயாக தத்தெடுக்க விரும்புவதாக கூறியுள்ளார். அந்த பெண் 57 வயது இருக்க வேண்டும். அவருக்கு நல்ல…
புதியசாளம்பைக்ககுளத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஜும்ஆ பள்ளிவாசல் வக்பு செய்யும் நிகழ்வு!
வவுனியா புதியசாளம்பைக்குளத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள, அல் அக்ஷா ஜும்ஆ பள்ளிவாசலை வக்பு செய்யும் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இன்று (21) நண்பகல் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் மஸ்தான் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர். (ன)
வரவு செலவுத்திட்டத்தை தயாரிக்கும் பணிகள் தீவிரம்
எதிர்வரும் 2017 ஆம் ஆண்டுக்கான நல்லாட்சி அரசாங்கத்தின் வரவு, செலவுத்திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி அளவில் முன்வைக்கப்படவுள்ள நிலையில் வரவு செலவுத்திட்டத்தை தயாரிப்பதற்கான தீவிரமான முயற்சிகளில் நிதி அமைச்சும் திறைசேரியும் ஈடுபட்டுள்ளன. புதிய வரவு, செலவுத் திட்டத்தை தயாரிப்பது தொடர்பில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்ச்சியாக பல்வேறு ஆலோசனைகளை நடத்தி வருகிறார். நிதி அமைச்சின் உயர் அதிகாரிகள் நிதித்துறை சார்ந்த நிபுணர்கள், அமைச்சுக்களின்…
வெளிவிவகார அமைச்சின் பிராந்திய தூதரகப் பணியகம் யாழில்!!!
பாறுக் ஷிஹான்– இலங்கை வெளிவிவகார அமைச்சின் பிராந்திய தூதரக சேவைகளுக்கான பணியகம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று முற்பகல் 10.30 மணியளவில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினால் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், வர்த்தக வாணிப அமைச்சர் ரிசாட் பதியுதீன், சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாதுகாப்பு செயலாளர் கருனாரட்ன ஹெட்டிஆராச்சி, வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா ,…
