Headlines

யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்ற பிரச்சினையையும் தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் ஒன்றுக்கொன்று முடிச்சுப் போட வேண்டாம். யாழ் கச்சேரியில் அமைச்சர் ரிஷாட் உருக்கமான வேண்டுகோள்

-சுஐப் எம்.காசிம் யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகளையும், மீள்குடியேறத் துடிக்கும் யாழ்ப்பாண மாவட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் ஒன்றுக்கொன்று முடிச்சுப்போட்டுக்கொண்டிருப்பதை விடுத்து, முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு  இந்த மாவட்டத்தைச் சேர்ந்த சகல கட்சிகளையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும், அரசியல் முக்கியஸ்தர்களும் உதவ வேண்டுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்தார். யாழ் கச்சேரியில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைகள் தொடர்பாக இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் அமைச்சர்…

Read More

அநுராதபுர முஸ்லிம்களை சந்திக்கிறார் றிஷாத் பதியுதீன்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் அநுராதபுர மாவட்ட முஸ்லிம்களுடனான சந்திப்பொன்றினை மேற்கொள்ளவுள்ளார். இளம் சட்டத்தரணி றுஸ்தி ஹபீபின் ஏற்பாட்டிலான இந்த சந்திப்பு நாளை சனிக்கிழமை 10 மணிக்கு அனுராதபுரம் சீ.டி.சி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. அநுராதபுர மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்கள் அனைவரையும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பட்டாளரான சட்டத்தரணி றுஸ்தி ஹபீப் அழைப்புவிடுத்துள்ளார்.

Read More

கல்பிட்டி கல்வி வளர்ச்சி சம்பந்தமாக இடம்பெற்ற கலந்துரையாடல்

கல்பிட்டி மக்களின் கல்வியில் அக்கறை கொண்ட “கல்பிட்டி கல்வி வட்டம்” என்ற அமைப்பினர் நேற்று 2017.02.19 கல்பிட்டியில் வைத்து புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்களை சந்தித்தனர். இச்சந்திப்பில், கல்பிட்டி மக்களின் கல்வி மட்டம், கல்பிட்டி பாடசாலைகள் மற்றும் மாணவர்கள் எதிநோக்கும் கல்வி பிரச்சினைகள் தொடர்பாகவும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பாகவும் சில கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டன.

Read More

அமைதியானதும் நிம்மதியானதுமான தேசத்தைக் கட்டியெழுப்ப பெண்களின் பங்களிப்பு அவசியம் -மகளிர் தின வொழ்த்துச் செய்தியில் ,இராஜாங்க அமைச்சர் அமீர் அலி.

பெண்கள் உலகின் கண்கள் என்பார்கள்.அத்தகைய பெண்களின் முழுமையான பங்களிப்பினூடாகவே ஒருபிரதேசத்தினதும் ழுமுநாட்டினதும் அமைதியும் நிம்மதியுமான சூழல் தங்கியுள்ளது. இவ்வாறு சர்வதேச மகளிர் தினத்தையெபாட்டி கிராமிய பொருளதார விவாசாய நீர்பாசன ,இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அச்செய்தியில்–ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்பது அன்று முதல் இன்று வரை யதார்த்தபூர்வமாக உளவாங்கிக் கொள்ளும தத்துவமாகும். ,இன்றைய சவால்கள் நிறைந்த நவீன யுகத்தில் உலக ,யந்திரம் சமாதானமாக சுழல் பெண்களின் செயலாற்றுகைகள் அவசியமாகின்றன.பெண்கள் எல்லாவகையான…

Read More

சிரியாவில் மீண்டும் இராசயன ஆயுதப் பிரயோகம்: மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தகவல்!

சிரியாவின் வடமேற்குப் பகுதியில் அரச படைகளால் மறுபடி இரசாயன ஆயுதம் அதாவது நச்சு வாயுப் பிரயோகம் செய்யப் பட்டதில் 6 பேர் கொல்லப் பட்டுள்ளதுடன் சிறுவர்கள் உட்பட பலர் பாதிக்கப் பட்டிருப்பதாகவும் இன்று செவ்வாய்க்கிழமை சிரிய உள்நாட்டுப் போரைக் கண்காணித்து வரும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், மூச்சுத் திணறலால் பாதிக்கப் பட்ட சிறுவர்கள் தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன. எனினும், இத்தகவலை முற்றாக மறுத்துள்ள சிரிய இராணுவத் தரப்பு இட்லிப் மாகாணத்திலுள்ள…

Read More

மடாட்டுகமையில் லங்கா சதொச கிளை திறந்து வைப்பு!

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஆலோசனையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர் ஏ.ஆர்.எம்.தாரிக்கின் வேண்டுகோளுக்கிணங்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  இஷாக் ரஹுமானினால் கெக்கிராவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட மடாட்டுகமையில் நேற்று 2018.09.20 புதிய லங்கா சதொச நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித்தலைவரும், அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இஷாக் ரஹுமான், பாராளுமன்ற உறுப்பினர் சந்திம கமகே, மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரான ஏ.ஆர்.எம்.தாரிக்  மற்றும்…

Read More

மதங்களுக்கிடையிலான ஐக்கிய ஒன்றிணைவு நிகழ்ச்சித் திட்டத்தின் ஒன்று கூடல்

– பழுலுல்லாஹ் பர்ஹான் – எமது இலங்கை நாட்டில் மக்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்கும் நோக்கில் சர்வோதய நிறுவனத்தில் சாந்திசேனா அமைப்பு நடைமுறைப்படுத்தி வரும் மதங்களுக்கிடையிலான ஐக்கிய ஒன்றிணைவு நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கைக்கான இரண்டாவது ஒன்று கூடல் இம்மாதம் 03 மற்றும் 04ம் திகதிகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சத்துருக்கொண்டானில் அமைந்துள்ள சர்வோதய வளாகத்தில் நடைபெற்றது. சர்வோதய நிறுவனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஈ.எல்.ஏ. கரீம் தலைமையின் கீழ் இடம்பெற்ற இந் நிகழ்வில் கௌரவ அதிதிகளாக கிறிஸ்தவ, பௌத்த, இந்து மற்றும்…

Read More

சம்மந்தன் அதிரடி!

நாடாளுமன்ற தேர்தலில் 16 ஆசனங்களை பெற்றுக்கொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்க சுதந்திர கட்சியில் மஹிந்த தரப்பினர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பிரதிநிதிகள் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகியுள்ள தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், எம்.சரவனபவன், மற்றும் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் ஆகியோரை…

Read More

ஜனாதிபதி இன்று சீனா விஜயம்!

நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (25) சீனா செல்லவுள்ளார். இவ்விஜயத்தின் போது சீன ஜனாதிபதி ஜி ஜிங் பிங் உட்பட பல சீன அரச பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. சீன அரசினால் இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் இரு அரச தலைவர்களும் கவனம் செலுத்தவுள்ளனர்.

Read More

புறக்கோட்டை பகுதியில் கடும் வாகன நெரிசல்

கான் கடிகார கோபுர சுற்றுவட்டப்பகுதியில் துறைமுக பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காரணத்தால் கொழும்பு புறக்கோட்டையை சுற்றியுள்ள பாதைகளில் கடும் வாகன நெரிசல்  ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த போராட்டம் காரணமாக மோதரையில் இருந்து மட்டக்குளி திசைக்கு செல்லும் ரெக்லமேசன் பாதை  முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமது மேலதிக கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி  இப்போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளோம் என்று இலங்கை பொது துறைமுக ஊழியர் சங்கம் பொதுச் செயலாளர் சந்திரசிறி  மகாகமகே கூறினார்.

Read More

டெல்லி சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை: ஆம் ஆத்மி -57. பா.ஜ.க- 12 தோல்வி. காங். ‘முட்டை’!! படுதோல்வி

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 57 இடங்களில் முன்னிலை வகித்து அபார வெற்றி பெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சியோ 12 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. 3 தொகுதிகளையாவது வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சிக்கு “முட்டை”தான் கிடைத்துள்ளது. டெல்லியில் கடந்த 2013 இறுதியில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் 28 இடங்களை கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி 8 இடங்களை பிடித்த காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. ஜன்லோக்பால் மசோதாவை…

Read More

நபிமார்கள் கேட்ட துஆக்கள்!

01. துஆக்கள் ஏற்கப்பட நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ ( رَبَّنَا تَقَبَّلْ مِنَّاإِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ وَتُبْ عَلَيْنَاإِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ ) “எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக்கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.” (அல்குர்ஆன் 2: 127-128) 02. ஈருலக நன்மை பெற நபி ஸல்லல்லாஹு…

Read More