Headlines

ஏறாவூர் பிரதேசத்தில் 1 கோடி ரூபா பெறுமதியான மீன்கள் சிக்கின!

ஏறாவூர் பிரதேச சவுக்கடி கடலில் கடந்த இரு தினங்களில் மீனவர் இருவரின் கரைவலைகளில் சுமார் இருபதாயிரம் கிலோ கிராம் எடைகொண்ட ஆயிரத்தைந்நூறு பாரை மீன்கள் சிக்கியுள்ளன. இந்த மீன்கள் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியானவை என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனை பார்வையிட பலர் கடற்கரையில் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஏறாவூரைச் சேர்ந்த என்.எம்.எம். ஷபீக் மற்றும் எஸ். சுதாகரன் ஆகியோரது  கரைவலைகளிலேயே இவ்வாறு அதிகளவான மீன்கள் பிடிக்கப்பட்டிருந்தது. அண்மைக்காலமாக கிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலையினால் கடல் மீன்கள் குறைவாகவே பிடிபட்டு வந்தமை…

Read More

சுதந்திரக் கட்சியின் எதிர்காலம் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது : மஹிந்த

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலம் பெரும் ஆபத்தினை எதிர்கொண்டுள்ளதாகவும், அது தொடர்பில் தாம் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன், சமல் ராஜபக்ஷவிற்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுவது தொடர்பில் வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென குறிப்பிட்ட அவர், அமைச்சுப் பதவி குறித்து சமலிடம் யாரும் தொடர்புகொண்டு பேசவில்லையெனவும், அது பொய்யான தகவலென்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், எதிரணியின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குமார வெல்கமவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளதாகவும்…

Read More

களனி கங்கையின் நீர்மட்டம் குறைகின்றது

சீரற்ற காலநிலை காரணமாக  அதிகரித்திருந்த  களனி கங்கையின் நீர் மட்டமானது, தற்போது குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாகலகம்வதிய மாபாங்கய பகுதியில் 7.5 அடிக்கு இருந்த நீர்மட்டமானது தற்போது 5.6 ஆக குறைவடைந்துள்ளதாக  நீர்ப்பாசன திணைக்களத்தின் செயலாளர் ஆர்.எம்.ரத்னாயக்க தெரிவித்தார். நீர்மட்டமானது 5 அடிக்கு குறைவடையும்போதே வெள்ள நீர் வடிந்தோடுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் ஆறுகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் வெள்ளநீர் முற்றாக வழிந்தோட ஒருவாரம் எடுக்குமெனவும் அவர் மேலும் கூறினார்.

Read More

பங்களாதேஷ் பேராசிரியர் யூனுஸ் சந்திப்பு

கிராமின்வங்கி திட்டத்தை அல்லது நுண்கடன் திட்டத்தை உலகத்துக்கு அறிமுகம் செய்தவரும், நுண்கடன் திட்டத்தின் ஸ்தாபகரும், நோபல் பரிசு பெற்றவருமான பங்களாதேஷைச் சேர்ந்த பேராசிரியர் யூனுஸ் அவர்களை, பங்களாதேஷில் சந்தித்துப் பேசிய கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் அவரை  இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் போதிய வளங்கள் இருப்பதால். அங்கு வந்து கிராமின்வங்கித் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வடக்கு, கிழக்கில் விதவைகள்,யுவதிகள், இளைஞர்கள் தொழில்வாய்ப்பு…

Read More

புதிய சூழ்ச்சியில் மஹிந்த: எச்சரிக்கும் புலனாய்வுப் பிரிவு

பௌத்த விகாரைகளை மையமாகக் கொண்ட நவபாசிச அமைப்பொன்றை உருவாக்குவதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் சிறப்பு புலனாய்வுப் பிரிவான எஸ்ஐஎஸ் பிரிவினர் இது தொடர்பான புலனாய்வு அறிக்கையொன்றையும் தயாரித்துள்ளனர். அதன் ஒரு பிரதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த ஜனாதிபதித் தேர்தல் தோல்வியின் பின்னர் மீண்டும் அதிகாரத்துக்கு வரும் நோக்கில் மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் நவபாசிச அமைப்பொன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளது….

Read More

இலங்கையுடன் உறவை மேம்படுத்த பிரான்ஸ் ஆர்வமாக உள்ளது: தூதுவர்

இலங்கையுடன் உறவை மேம்படுத்த பிரான்ஸ் ஆர்வமாக உள்ளது என இலங்கக்காளன பிரான்ஸ் தூதுவர் ஜீன் மாரின் சொச் தெரிவித்துள்ளார். குறிப்பாக வர்த்தகம், முதலீடுகள், சுற்றுலா, மீன்பிடி, நீர்சுத்திகரிப்பு, சுற்றாடல் மற்றும் போதைவஸ்து தடுப்பு ஆகிய விடயங்களில் இந்த ஆர்வம் வெளியிடப்பட்டுள்ளது. பிரான்ஸின் தூதுவர் ஜீன் மாரின் சொச் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போது இதனை தெரிவித்துள்ளார். இதனொரு கட்டமாக பிரான்ஸின் ஆசியாவுக்கான தலைமையகம் இலங்கைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பிரான்ஸ் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இந்த வருடத்தில் ஒரு லட்சத்தை…

Read More

புதிய அரசாங்கத்தில் மொத்தம் 30 அமைச்சர்கள் மட்டுமே

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை 30 ஆக மட்டுப்படுத்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது. இந்த எண்ணிக்கையை விட அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகளை அதிகரிப்பதாயின் அதற்கு பாராளுமன்றத்தில் அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகப் பேச்சாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். D c

Read More

மரதன் ஓட்டப்போட்டியில் பங்குப்பற்றிய, 15 வயது பாடசாலை மாணவன் மரணம்

அம்பலந்தோட்டை பகுதியில் இன்று முற்பகல் நடைபெற்ற விளையாட்டு போட்டியொன்றில் பங்குப்பற்றிய பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். பாடசாலை சந்தர்ப்பத்தில் திடீர் சுகயீனமுற்ற நிலையில், இந்த மாணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண குறிப்பிட்டார். 15 வயதான மாணவன் ஒவருனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Read More

அமெரிக்காவில் பெண்களுக்கான மஸ்ஜித்

அமெரிக்காவில் பெண்களுக்கான மஸ்ஜித் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் விரைவாக வளர்ந்து வரும் இஸ்லாமும் ஒன்றாகும். அமெரிக்காவில் உள்ள 1,200 பள்ளிவாசல்களில் பெரும்பாலானவை கடந்த 12 ஆண்டுகளில் கட்டப்பட்டவையாகும். இதில் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் பெண்களுக்கான பிரத்யேக பள்ளிவாசல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

துருக்கியும் கிறுக்கனும் (Poem)

-முகம்மட் நிரோஸ் – தெருக்களில் இறங்கி திரண்ட மக்கள் துருக்கியை மீட்டதன் துணிச்சலைப் புகழ்ந்து முறுக்கிறார் மீசையை முக நூலில் பலபேர் கிறுக்கர்கர்கள் சில பேர் கிண்டலும் செய்கிறார் பொறுக்குது இல்லையே போஸ்ட்களைக் கண்டால். திருக்குர் ஆனை திரும்பியும் பாராரும் சிர்க்கை பித் அத்தை செய்யும் மனிதரும் பர்ளான தொழுகையை பாழாக்குவோரும் இருக்கிற நாட்டுக்கு எதுவும் செய்யாரும் துருக்கி நாட்டுக்காய் துடிப்பதில் பயன் என்ன? புரட்சி வெல்லனும் புது ஆட்சி வரனும் பிரச்சினை தோன்றனும் பிறகு தங்களின்…

Read More

மன்னாரில் நீர்வெட்டு

மன்னார், முருங்கன் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நாளை மு.ப. 8.00 மணிமுதல் பி.ப. 4.00 மணி வரையான 8 மணி நேர நீர்வெட்டு அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. மன்னார் நீர்வழங்கல் திட்டத்தின் கீழ் மன்னார் மற்றும் முருங்கன் நீர்த்தாங்கிகளுக்கு நீர் பகிர்ந்தளிக்கப்படும் நீர் பாய்ச்சும் குழாயில் திருத்தப்பணிகளை முன்னிட்டு நீர்வெட்டு அமுல் படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்கூட்டியே நீரைச் சேமித்து சிக்கனமாகப் பயன்படுத்தும்படி மக்களிடம் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்…

Read More