Headlines

மத்திய கிழக்கு நாடுகளில் புதுவகை தொற்று நோய்

மத்திய கிழக்கு நாடுகளில் அடையாளங்காணப்படாத நோயொன்று பரவி வருவதாகவும் அந்நோய் சிறிய வகை கொசுக்களினால் பரவுகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் உள்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தள்ளன. இந்நோய் முதற்தடவையாக சிரியாவில் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அந்நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்துள்ள மில்லியன் கணக்கான மக்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் இத்தஞ்சம் கோருவோர் மத்திய கிழக்கு வலயத்திலிருந்து ஐரோப்பா வரையில் புலம்பெயர்வதனால் இந்நோய் லெபனான், துருக்கி, ஜோர்தான் மற்றும் ஏனைய மத்திய கிழக்கு நாடுகளிலும் பரவி வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பிரச்சினை…

Read More

ஜனாதிபதிக்கும் முன்னணி கட்சி தலைவர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்சி தலைவர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய இன்று காலை  இக் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைத்து கட்சி தலைவர்களுக்குக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச நேற்று குறிப்பிட்டிருந்தார். இக் கலந்துரையாடலில் தேசிய சுதந்திர முன்னணி கலந்துகொள்ளவுள்ள நிலையில் தங்கள் கருத்தை நேரடியாக ஜனாதிபதியிடம் முன்வைக்க எதிர்பார்ப்பதாக விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய…

Read More

மங்கள வீட்டுக்குச் சென்ற மஹிந்த- நாமல்

ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவுக்கும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கும் இடையில் நான்கு தடவைகள் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, சிங்கபூருக்கு பயணிப்பதற்கு முன்னர், அவரை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகிய இருவரும், கொழும்பிலுள்ள மங்களவின் வீட்டில் வைத்து சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இது மங்களவை ஆளும் கட்சிக்குள் இழுப்பதற்கான பேச்சாக…

Read More

நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு தாஹிர் எம்.பி விஜயம்!

பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் மற்றும் நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எல்.அப்துல் லதீப் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று, இன்று (09) நிந்தவூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, அனர்த்த நிவாரணம், அஸ்வெசும கொடுப்பணவு, பள்ளி நிர்வாக சர்ச்சை மற்றும் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி விவகாரம் உள்ளிட்ட இன்னோரான்ன விடயங்கள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. குறிப்பாக, எந்தவொரு அரசியல் தலையீடுகளுமின்றி நிந்தவூர் பெரிய பள்ளிவாயல் மற்றும் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி நிர்வாகத் தெரிவுகளை நடாத்துமாறு, பிரதேச செயலாளர் மற்றும்…

Read More

முஸ்லிம்களிடையே தெளிவு ஏற்பட்டுள்ளது – ஒபாமா

இஸ்ஸாமிய தேச (ஐ.எஸ்.) இயக்கத்தின் செயல்களைக் கண்ட பிறகு, இதுபோன்ற பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டுமென்ற தெளிவு முஸ்லிம்களிடையே ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார். வாஷிங்டனில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றில் ஒபாமா பேசியதாவது: கிழக்கு ஆசிய நாடுகளில் தற்போது ஐ.எஸ். அமைப்பு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இராக், சிரியா ஆகிய நாடுகளில் சில பகுதிகள் ஐ.எஸ். கட்டுப்பாட்டில் உள்ளன. அவர்களது முரட்டுத்தனமான நடவடிக்கைகள், வழக்கத்துக்கு மாறானதாக உள்ளது. மத்திய…

Read More

மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் அமைச்சர் றிஷாத்

மன்னார் கூலாங்குளம் அரசினர் கனிஷ்ட வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப்பெற்ற மாணவ மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வில் அமைச்சர் றிஷாத் கலந்துகொண்டபோது.

Read More

‘எஞ்சியுள்ள வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு உள்ள வழி என்ன? – ஜெனீவாவில் இணங்கியதை நிறைவேற்றவும்’ – VIDEO

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்! வடக்கிலிருந்து புலம்பெயர நேரிட்ட முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வுகாண முறையான வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை (10) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது, “வடக்கிலிருந்து புலம்பெயரச் செய்யப்பட்ட முஸ்லிம்களின் சவால்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை. 33 வருடங்கள் கடந்தும் முறையான வேலைத்திட்டங்கள் வகுக்கப்படவும் இல்லை. மீளக்குடியேறும் இம்மக்களின் முயற்சிகளை அங்குள்ள அரச அதிகாரிகளும் ஒரு…

Read More

சிங்கள ராவய அமைப்பின் முக்கியஸ்தர்கள் 24 பேருக்கு அழைப்பாணை

கூரகல பள்ளிவாசலை தகர்த்து அந்த இடத்தில் புத்தர் சிலை ஒன்றை நிறுவும் நோக்கோடு அத்துமீறிய சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்ட 24 பேருக்கு பலாங்கொடை நீதிவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. நீதிமன்ற கட்டளையை உதாசீனம் செய்து கூரகலயில் வன்முறையை தூண்டும் விதமாக செயற்பட்டமை தொடர்பில்  கல்தோட்டை பொலிஸார் பலாங்கொடை நீதிவான் நீதிமன்றின் மேலதிக நீதிவான்  சுனில் ஜயசேனவிடம் முன்வைத்த அறிக்கைக்கு அமைவாகவே எதிர்வரும் 28ஆம் திகதி மன்றில் ஆஜராக அக்மீமன தயாரத்ன…

Read More

‘பணத்திற்காக தங்களுடைய உரிமைகளை விற்பதாக இருந்தால் உலகத்தில் அதைவிட கேவலம் எதுவும் இல்லை’ பிரதியமைச்சர் அமீர் அலி!

-முர்ஷித் கல்குடா- பணத்திற்காக தங்களுடைய உரிமையை விற்பதாக இருந்தால் உலகத்தில் அதைவிட கேவலம் எதுவும் இல்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஓட்டமாவடி பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய முன்னனியில் போட்டியிடும் வேட்பாளர் ஐ.ரி.அஸ்மியின் காரியாலயத்தை ஓட்டமாவடி, 2ஆம்  வட்டாரத்திலுள்ள அவரது இல்லத்தில் அண்மையில் திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்-…

Read More

இந்தியாவில் தோன்றிய அரசியல் மாற்றத்தினால் இலங்கையுடனான வர்த்தக உறவு அதிகரிக்கும்

இந்தியாவில் புதிய பிரதமர் பதவியேற்றமை வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தியாவின் அரசியலில் மாற்றங்களை ஏற்ப டுத்துவதோடு இலங்கை, இந்திய வர்த்தக உறவுகள் எதிர்காலத்தில் முன்னேற்றமடையுமென கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்தார். கொழும்பு 03 இல் அமைந்துள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கும் இலங்கை வந்துள்ள இந்திய தொழில்துறை கூட்டமைப் பின் உயர்மட்ட பிரதிநிதி குழுவின ருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று அண்மையில் இடம்பெற்றது. இச் சந்திப்பில் உரையாற்றும் போதே…

Read More

மக்கள் காங்கிரசின் செயலாளர் நாயகமாக தொடர்ந்தும் சுபைதீன் அவர்கள் செயற்படலாம் – நீதிமன்றம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் எஸ் சுபைர்தீன், செயலாளர் நாயகமாக இயங்குவதற்கு தடையுத்தரவு கோரி முன்னாள் செயலாளர் நாயகத்தினால் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தடையுத்தரவை வழங்குவதில்லையென மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்று மக்கள் காங்கிரஸின் அரசியல் யாப்பு, மற்றும் சட்ட விவகார பணிப்பாளர் ருஷ்தி ஹபீப் தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் கூறியதாவது, நீதிமன்ற தீர்ப்புக்கமைய செயலாளர் நாயகம் தொடர்ந்தும் தமது கடமைகளை செய்ய எந்த…

Read More

இலங்கையுடன் வர்த்தக உறவுகளை புதுப்பிக்க ஆபிரிக்கா ஆவல்!

இலங்கையுடன் வர்த்தக உறவுகளை புதுப்பிக்க ஆபிரிக்கா ஆவலாக இருக்கின்றது. அத்துடன் வரலாற்று சிறப்புமிக்க சில வர்த்தக உடன்படிக்கைகளினையும் கைச்சாத்திடுவதற்கும் இணங்கியுள்ளது. மேலும் இலங்கையுடன் பல வர்த்தக தொடர்புகளை எதிர்பார்பார்கின்றோம். அடுத்த வருடம் அதிகாரபூர்வ அரச அதிகாரிகள் உட்பட வர்த்தக பிரதிநிதிகளை நைரோபிக்கு விஜயம் செய்ய அழைப்பு விடுவிக்கின்றோம். இவ்விஜயத்தினுடாக மூன்றிற்கும் மேற்பட்ட எமது வர்த்தக உடன்படிக்கைகளினையும் கைச்சாத்திடுவதற்கு சமீபத்திய ஆலோசனைகளினை தீர்மானிக்க முடியும். நேற்று (17) திங்கட்கிழமை ஏற்றுமதி அபிவிருத்தி சபையில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்…

Read More