யாழ் முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஆராய்ந்த அமைச்சர் றிஷாத்
– பாரூக் ஷிஹான் – யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை நேற்றையை (25) யாழ் விஜயத்தின்போது ஆராய்துள்ளார் அமைச்சர் றிஷாத் பதியுதீன். நேற்று திங்கட்கிழமை சுபஹ் தொழுகையின் பின்னர் மோட்டார் சைக்கிள் ஒன்றினை பெற்று யாழ் முஸ்லிம்கள் வாழும் பகுதிக்கு சென்று பார்வையிட்ட அவர்; தொடர்ந்து அங்கு சென்று மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக நேரில் கேட்டறிந்து கொண்டார். மக்களை சந்திக்க சென்ற அமைச்சர் தலைக்கவசத்துடன் இருந்தமையினால் அநேகமானவர்கள் அவரை அடையாளம் காணவில்லை. இந்நிலையில் தலைக்கவசத்தை கழற்றியவுடன்…
அரசியல் சித்து விளையாட்டில், மாமனை வீழ்த்திய மருமகன்!
நிறைவேற்று அதிகாரத்தின் தொடுவாயிலிருந்து சில சந்தர்ப்பங்களை மீட்டிப்பார்க்கும் நிர்ப்பந்தங்களை இரண்டு மாத அரசியல் இழுபறி எனக்குள் ஏற்படுத்திற்று. இதனால் ஒப்பீட்டு ஆய்வுக்குள் நான் திணிக்கப்பட்டுள்ளேன். 1978 பெப்ரவரி 04 இல் நடைமுறைக்கு வந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை யாரைப் பாதுகாக்கும்? எவரைப் பாதுகாத்தது? ஏன் தேவைப்பட்டது? சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு வியாக்கியானம் வழங்கும் சட்டாம்பிள்ளைகளுக்கு சத்திய வாக்காகப் பதிலுரைக்க இதற்குத் தெளிவு தேவை. ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், புத்திஜீவிகளும் நிறைவேற்று அதிகாரத்தின் நிஜம் என்ன, நிழல்…
கஃபாவுக்கு நேராக சூரியன் உச்சம்
– எம்.ஐ.அப்துல் நஸார் -விடிவெள்ளி புனித கஃபாவுக்கு நேராக நாளை வெள்ளிக்கிழமை சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக அரப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இவ்வாண்டின் இரண்டாவதும் இறுதியானதுமான சந்தர்ப்பமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று புனித கஃபாவுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக ஜித்தாவிலுள்ள வானியல் சங்கம் தெரிவித்தள்ளது. இது லுஹர் தொழுகைக்கான அதான் இடம் பெற்றதன் பின்னர் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 12.27 இற்கு நிகழவுள்ளதாக அச் சங்கத்தின் தலைவர் மஜீட் அபூ ஸாஹிர்…
டெங்கினால் காத்தான்குடியில் இருவர் பலி
காத்தான்குடி நகர சபை பிரிவில் டெங்கு காய்ச்சலினால் கடந்த இரண்டு தினங்களில் சிறுமி உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை காலை காத்தான்குடி ஆறாம் குறிச்சி அப்துல் ஜவாத் ஆலிம் வீதியைச் சேர்ந்த 7 வயதுடைய ஏ.ஸாயிதா ஸித்னா எனும் சிறுமியே காய்ச்சலினால் திடீரென உயிரிழந்துள்ளார். சில தினங்கள் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்த மேற்படி சிறுமி சனிக்கிழமை மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப்பட்ட போது காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்த நிலையில் குறித்த சிறுமி அங்கு…
பணத்திற்காக சோரம் போன ஹூனைஸ்! முசலித் தவிசாளர் எஹ்யா குற்றச்சாட்டு
வடமாகாண முஸ்லிம்களின் கௌரவமான குடியேற்றத்தையும் அந்த மக்களுக்கு தலைமை தாங்கும் அமைச்சர் ரிசாத் பதியுதீனையும் அற்ப சொற்ப சலுகைகளுக்காக ஹூனைஸ் எம்பி காட்டிக் கொடுத்து விட்டதாக முசலி பிரதேச சபைத் தவிசாளர் எஹ்யாபாய் குற்றம் சுமத்தியுள்ளார். வன்னி மாவட்ட அ.இ.ம.கா நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறுக் இன்று ஐ.தே.க வில் இணைந்து கொண்டமை தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே தவிசாளர் எஹ்யா பாய் மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். வடக்கு முஸ்லிம்களுக்கும் அந்த மக்களின் தலைவரான அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கும்,…
கொழும்புவாழ் அனைத்து மக்களுக்கும் எங்கள் பணி தொடரும்
-எம்.சுஐப்- சொந்த மண்ணிலே சுதந்திரமாக வாழ்ந்த நாம் தீய சக்திகளால் துரத்தப்பட்டோம். அதனால் சுகம் இழந்தோம், சுதந்திரம் இழந்தோம். வீடு வாசல்களையும், விளைச்சல் நிலங்ளையும் இழந்தோம், தொழிலையும் தொழில் சார்ந்த உபகரணங்களையும் இழந்தோம். நமது உயிராக அமைந்திருந்த கல்வியையும் இழந்தோம். அகதிகளானோம். பாதசாரிகளாய் நடையில் புத்தளம் வந்தோம். அங்கே எமக்கு ஆறுதல் கிடைத்தது. அத்தனை குடும்பங்களுக்கும் வாழ்விடம்போதாது மரநிழலில், மக்கள் இல்லாத வீடுகள், மண்டபங்கள் நமக்கு குடிமனையாகின. துன்பங்களும் துயரங்களும் தொடர்கதையாகின. 1994இல் ஆட்சி மாறியது. மர்கூம்…
‘அழுதுதொழுது அல்லாஹ்விடம் முறையிட்டேன்’
-சுஐப் எம் காசிம்- கேள்வி : மஹிந்த அரசிலே பிரபல அமைச்சராக இருந்த நீங்கள் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் திடீர் என விலகிய காரணம் என்ன? பதில் : நான் சிறுவயதில் இருந்தே செய்ய வேண்டும் என எண்ணும் காரியத்தை மிகவும் கரிசனையுடன் செய்து முடிக்கும் சுபாவம் உள்ளவன். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அவர்களின் அரசிலே அமைச்சராக இருந்து அந்த அரசின் கொள்கை களுக்கேற்ப நாட்டின் நன்மையைக் கருத்திற்கொண்டு அமைச்சுப் பணி செய்தேன். எனது பணியில் நேர்மையும்…
ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் மாயம்! வலைபோட்டுத் தேடும் மைத்திரி அரசு
கிழக்கு யுக்ரேனிலுள்ள பிரிவினைவாத கிளர்ச்சியாளரக்ளுக்கு ஆயுத விற்பனை செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு முன்னாள் இலங்கைத் தூதுவர் ஆயுதம் விநியோகித்துள்ளதாக யுக்ரேன் ஜனாதிபதி பெட்ரோ பொரொஷென்கோவின் அரசாங்கம் இலங்கை வெளியுறவு அமைச்சிடம் முறைப்பாடு செய்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார். அரசியல் நியமனமாக ரஷ்யாவுக்கான தூதுவராக பணியாற்றியிருந்த உதயங்க வீரதுங்க, அண்மையில் புதிய அரசாங்கத்தால் நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட்டிருந்ததாக இலங்கையின் துணை வெளியுறவு அமைச்சர் அஜித் பி. பெரேரா பிபிசிக்கு வழங்கிய செவ்வியின்…
நாளை வருகிறது இந்திய நிபுணர்குழு
இலங்கை – இந்திய பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டு ஒப்பந்தம் தொடர் பில் இரு நாட்டு அதிகாரிகள் மட்டப் பேச்சு வார்த்தைகளுக்காக இந்திய உயர் மட்ட குழு நாளை வியாழக்கிழமை இலங்கை வருகின்றது. இரு நாட்டு அதிகாரிகளின் பங்குப்பற்றலுடன் வெள்ளிக்கிழமை கொழும்பில் உத்தேசிக்கப்பட்டுள்ள இலங்கை, – இந்திய கூட்டு ஒப்பந்தம் தொடர்பான செயலமர்வு இடம்பெறவுள்ளது. இலங்கை, – இந்திய கூட்டு ஆணைக்குழுவின் ஊடாக கலந்தாலோசிக்கப்பட்ட இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரம் மற்றும் தொழில் நுட்பத்தை மையப்படுத்திய கூட்டு ஒப்பந்தத்திற்கு இணக்கம்…
தெரிவு செய்யப்பட்ட மதகுரு மார்களுக்கு நீர் இறைக்கும் பம்பி வழங்கிவைப்பு
வடமாகாண சபை உறுப்பினரும் மாகாண சபை பிரதம எதிர்க்கட்சி கொறடாவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் தேசமானிய றிப்கான் பதியுதீன் அவர்களின் வாழ்வாதார கொடுப்பனவாக வவுனியா மாவட்ட தெரிவு செய்யப்பட்ட மதகுரு மார்களுக்கான வாட்டர் பம்ப் மற்றும் விவசாயத்திற்கு தேவையான சில பொருட்களையும் வழங்கி வைத்தார் வவுனியா மாவட்ட இணைப்பாளரான பாரி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது மேலும் நிகழ்வில் உரையாற்றிய…
நேபாளத்துக்கு உதவ மற்றுமொரு விமானம் நாளை பயணம்
நேபாளத்தில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குவதற்காக இலங்கையில் இருந்து மற்றுமொரு விமானம் அந்த நாட்டுக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளது. நாளை காலை 09.00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து குறித்த விமானம் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. நேபாளத்திற்கு உதவிக் கரம் நீட்டும் நோக்கோடு இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்லும் நான்காவது விமானம் இதுவாகும். இதில் 18 டன் நிறையுடைய உதவிப் பொருட்கள் ஏற்றிச் செல்லப்படவுள்ளதுடன், இந்தப் பொருட்கள் இன்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்…
