Headlines

மன்னார் சவூத்பார் விளையாட்டு கழகத்திற்கு நிதியினை ஒதுக்கிய அமைச்சர் றிஷாட்

மன்னார் மாவட்டத்தில் நகர பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சவூத்பார் கிராம விளையாட்டு கழகத்தின் வேண்டுகோளின் பேரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,கைத்தொழில் மற்றும் வர்த்தக  அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் ஊடாக 250000/- இரண்டு லச்சத்தி ஐம்பதாயிரம் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்கான முதல் கட்ட வேலைத்திட்டத்தினை மன்னார் நகர பிரதேச செயலாளர் பரமதாஸ்,வன்னி பிராந்திய இளைஞர் கழக பணிப்பாளர் முனவ்வர்,மீள்குடியேற்ற செயலணியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் முஜீப் …

Read More

பிரதியமைச்சர் அமீர் அலி தலைமையில் வீதிப் புனரமைப்பு பணிகள்.

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நாசீவந்தீவு மற்றும் சுங்கான்கேணி கிராமங்களில் வீதி புனரமைக்கும் ஆரம்ப நிகழ்வு நிகழ்வு இன்று புதன்கிழமை நடைபெற்றது. இணைப்பாளர் எஸ்.உதயக்குமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியா கலந்து கொண்டதுடன், அதிதிகளாக வாழைச்சேனை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.நிரூபா பிருந்தன், கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் சிஹாப்தீன், பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.சிவநேசராஜா, நாசிவந்தீவு கிராம அபிவிருத்திச்…

Read More

தலைமைத்துவக் கட்டுப்பாடும் , தியாக சிந்தனையும்.    ஜனாப் றிப்கான் பதியுதீனின் இராஜினாமாவும்; அ.இ.ம.காங்கிரஸின் வழி காட்டலும்.  

வட மாகாண சபையின் உறுப்பினரும் அ.இ.ம.காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியுமான கெளரவ றிப்கான் பதியுதீன் அவர்கள், கட்சியின் தலைவர், அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களின் வேண்டுகோளுக்கி ணங்க தன்னுடைய மாகாண சபை உறுப்பினர் பதவியை 06/10/2017 திகதி , இராஜினாமாச் செய்துள்ளார். இதன் மூலம் ஒரு முக்கிய செய்தியை சமூகத்திற்கும் நாட்டிற்கும் வழங்கியுள்ளார். தான் சார்ந்த சமூகத்தின் நலனுக்கும்- கட்சியின் நலனுக்கும் சேவைகள் செய்வதற்கு பதவிகளும் அதிகாரங்களும் அணிகலன்கல்ல; என்பதைச் செயலில் காட்டியுள்ளார். தன்னுடைய கட்சி அரசாங்கத்தில் பங்காளியாகவுள்ள…

Read More

வாக்குகளுக்காக வாக்குறுதியளித்தவர்கள், இரண்டு ஊர்களையும் பிரித்தாண்டதன் விளைவே இன்றைய நிலை, கட்டார் வாழ் இலங்கையருடனான சந்திப்பில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

சாய்ந்தமருது பிரதேச சபையை பெற்றுத்தருவதாக பிரதமரை கல்முனைக்கு அழைத்து வந்து வாக்குறுதி அளித்தவர்கள், இரண்டு தரப்பினரையும் ஒன்றாக இருத்தி, அவர்களின் பிரச்சினைகளை கேட்டறியாமல் தனித்தனியாக சந்தித்து பேசியமையினாலேதான் சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபை பிரச்சினை தற்போது இழுபறி நிலைக்கு உள்ளாகி, விஷ்வரூபம் எடுத்திருப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். டோஹா நகரில் உள்ள கொர்னிச் அல்பனார் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில், கட்டார் வாழ் இலங்கையர்களை சந்தித்துக் கலந்துரையாடும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அரசியலமைப்பு மாற்றம், தேர்தல் முறை…

Read More

கட்டாருடன் வலுவான பொருளாதார வர்த்தக உறவை மேம்படுத்த இலங்கை நாட்டம். கட்டாரில் அமைச்சர் றிஷாட்

“கட்டாருடன் வலுவான வர்த்தக மற்றும் பொருளாதார தொடர்புகளை மேம்படுத்த   இலங்கை நாட்டங்கொண்டுள்ளதாகவும் இரண்டு நாடுகளும் நீண்ட கால பொருளாதார வர்த்தக உறவுகளை கொண்டிருப்பதால் அதனை நீடிக்க பரஸ்பர செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. “   கட்டார் டோஹாவில் நடைபெற்ற “ கட்டார் – இலங்கை வர்த்தக சம்மேளன கூட்டத்தில்”  கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உரையாற்றுகையில்   இவ்வாறு தெரிவித்தார்.   கட்டார் வர்த்தக சம்மேளனம் டோஹாவிலுள்ள இலங்கை தூதரகத்துடன் இணைந்து   ஏற்பாடு…

Read More

நாம் போதையற்ற இளைஞர்கள்’ என்ற தொனிப்பொருளில் கருத்தரங்கு பிரதம அதிதியாக அமீர் அலி

கிழக்கு மாகாணத்தில் இருக்க வேண்டிய மொத்த மதுபான நிலையங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் அமைக்கப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் இன்னும் எத்தனை வரப்போகின்றது என்ற அச்சம் எனக்கு உள்ளது என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் ‘நாம் போதையற்ற இளைஞர்கள்’ என்ற தொனிப்பொருளில் கருத்தரங்கு கிரான் மகா வித்தியாலய மண்டபத்தில் நேற்று திங்கள்கிழமை இடம்பெற்ற போது உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர்…

Read More

கொழும்பு-12 பாத்திமா முஸ்லிம் மகளிர் வித்தியாளய கட்டிட அடிக்கல் நாட்டும் நிகழ்வில் மேல் மாகாண சபை உறுப்பினர் மொஹமட் பாயிஸ்.

கொழும்பு-12 பாத்திமா முஸ்லிம் மகளிர் வித்தியாளயத்திற்கு புதிய கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டும் வைபவம் 2017/10/24 ஆம் திகதி பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேசப்பிரிய அவர்களும் இராஜாங்க அமைச்சர் எ.எச்.எம். பெளசி அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான மொஹமட் பாயிஸ் மற்றும் பாரளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.  

Read More

கட்டாரில் இடம்பெற்ற உயர்மட்ட கூட்டத்தில் அமைச்சர் றிஷாத்

கட்டார் டோஹாவில் இடம்பெற்ற கட்டார்-இலங்கை வர்த்தக முதலீட்டு சம்மேளன உயர்மட்ட கூட்டத்தில் அமைச்சர் றிஷாட் பதியுதீன்  சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர்கள் மற்றும் கட்டார் நாட்டின் முக்கிய அரச தலைவர்கள் பங்கேற்றனர்.  

Read More

அமைச்சர் றிஷாதினால் வவுனியா தமிழ்ப் பிரதேசங்களில் 8 சிறு ஆடைத்தொழிற்சாலைகள்

வவுனியா மாவட்ட தமிழ் பிரதேங்களில் இளைஞர் யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 8 சிறு ஆடைத்தொழிற்சாலைகளை அமைச்சர் றிஷாட் பதியுதீன் வழங்கியுள்ளார். இளைஞர் யுவதிகளின் பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் அமைச்சரின் வேலைத்திட்டத்திற்கமைய வவுனியா தெற்கு இலுப்பைக்குளம், கூமாங்குளம், நெளுக்குளம், சமயபுரம், மகிழங்குளம், அண்ணா நகர், புளியங்குளம் (வவுனியா வடக்கு) ஆகிய கிராமங்களிலுள்ள யுவதிகள் பயன்பெறும் வகையிலேயே முதற்கட்டமாக 5 நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டன. ஏனைய 3 நிலையங்களும் வெகுவிரையில் திறந்து வைகப்படவுள்ளது. தேர்தல் காலங்களில் அமைச்சரினால் வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் குறித்த சிறுஆடைத்தொழிற்சாலைகளுக்கான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்ட்டு ஆறு மாத கால இலவச…

Read More

மன்னார் உப்புக்குளம் அல் பதாஹ் விளையாட்டுக்கழகம்  நடாத்திய விளையாட்டு நிகழ்வில் பிரதம அத்தியாக அமைச்சர் றிஷாட் பதியுதீன்.

மன்னார் உப்புக்குளம் அல் பதாஹ் விளையாட்டுக்கழகம்  நடாத்திய ரிஷாட் பதியுதீன் வெற்றிக் கிண்ண கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதி நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். இந்தப் போட்டியில் முதலாம் இடத்தை அல் பதாஹ் விளையாட்டுக் கழகமும், இரண்டாம் இடத்தை அல் ஜின்னாஹ் விளையாட்டுக் கழகமும் பெற்றுக் கொண்டது. சம்பியனான அல் பதாஹ் விளையாட்டுக் கழகத்திற்கு அமைச்சர் ரிஷாட்பதியுதீன் வெற்றிக் கிண்ணத்தை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில்…

Read More

புத்தளம் மாவட்ட அ. இ. ம. காங்கிரஸ் அமைப்பாளர் அலி சப்ரியை சந்தித்த நாத்தாண்டிய – கொட்டராமுள்ள மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள்

நாத்தாண்டிய – கொட்டராமுள்ள பகுதியைச் சேர்ந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் இன்று புத்தளம் மாவட்ட பிரதான அமைப்பாளர் அலி சப்ரி ரஹீமை அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்… எதிர் வரப்போகும் உள்ளூராட்சி சபை தேர்தலில் கட்சியின் பங்களிப்பு, முகம் கொடுக்க கூடிய பிரச்சினைகள் போன்றவை இச்சந்திப்பில் ஆராயப்பட்டன… இம்முறை தேர்தலில் புதிய பலத்தோடு அ.இ.மக்கள் காங்கிரஸ் நாத்தாண்டிய பிரதேசத்தில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது…

Read More

பிரதியமைச்சர் அமீர் அலி மங்களகம விஜயம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பான்மையின மக்கள் வாழும் புளுக்கினாவெலி, கேவிலியாமடு, மங்கலகம, சின்னவத்தை ஆகிய கிராமத்தில் பல்வேறு வேலைத் திட்டங்கள் கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி மூலம் நேற்று மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டதுடன், மேலும் கேவிலியாமடு ஸ்ரீ சுகாத்தார விகாரதிபதி அரியமித்த, அமைச்சின் இணைப்பாளர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட புளுக்கினாவெலி கிராமத்தில்…

Read More