பல்கலை மாணவர்கள் கொழும்பில் போராட்டம்
வெளிநாட்டு மாணவர்களுக்கு இலவசக் கல்வியை விற்கின்றமை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளைக் கண்டித்து நேற்று கொழும்பில் பல் கலைக்கழக மாணவர்களால் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தாமரைத்தடாக சுற்றுவட்டத்துக்கு அருகாமையிலுள்ள கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்துக்கு முன்னால் வீதி மறியல் போராட்டத்தை மாணவர்கள் முன்னெ டுத்தனர். இந்தச் சந்தர்ப்பத்தில் மாணவர்கள் அரசுக்கு எதிராக பல கோங்களை எழுப்பியிருந்தனர். அரசால் வெளிநாட்டு மாணவர்களுக்கு கல்வியை விற்பனை செய்வதற்கும், பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளைக் கையாள்வதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தும், மஹாபொல…
