Headlines

விவசாயப் பெண்கள் மாநாடு

விவசாயப் பெண்கள் மாநாடு நேற்று (13) முற்பகல் அனுராதபுரம் கல்னேவ மகாவலி விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நடைபெற்றது. விவசாய ஓய்வூதியம் வழங்குதல், விவசாய சங்கங்களுக்கு விவசாய காப்புறுதி சபையின் பிரதிநிதி பதவி வழங்குதல், ‘கெத்தட்ட அருண, (தோட்டத்துக்கு ஒளி) எனும் உர மானிய உதவி வழங்கல், விவசாயக் கிணறுகளை அமைத்தலுக்கான உதவி வழங்குதல் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் கலந்துகொண்டபோது.

Read More

சம்மாந்துறையில் O/L மாணவர்களுக்கான குழு முறை கணிதப் பாட விசேட பயிற்சிப் பட்டறை

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் சம்மாந்துறை அல் மர்ஜான் மகளிர் கல்லூரியில் 05.11.2014  ம் திகதி புதன் கிழமை சம்மாந்துறை IIFAS அமைப்பின் அனுசரனையிலும் 07.11.2014 ம் திகதி வெள்ளிக் கிழமை சம்மாந்துறை செப்கோ அமைப்பின் அனுசரனையிலும் குழு முறைப் பயிற்சிப்  பட்டறை மொறட்டுவை பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் அமைப்பு மாணவர்களின் பூரண வழிகாட்டல்களின் கீழ் நடாத்தப் பட்டது. இன் நிகழ்விற்கு சம்மாந்துறையைச் சேர்ந்த கணிதத்துறையில் பல்கலைக் கழகங்களுக்கு தேர்வான 2011,2012,2013 ம் ஆண்டு மாணவர்கள் வர…

Read More

நைஜீரியாவைத் தாக்கி வரும் மர்ம வியாதி!:18 பேர் பலி

தென்மேற்கு நைஜீரியாவில் அண்மைக் காலமாக ஓர் மர்ம வியாதி தாக்கி வருவதாகவும் இதனால் 18 பேர் கொல்லப் பட்டுள்ளதாகவும் இதன் காரணத்தை அறிய முடியாது சுகாதார அதிகாரிகள் திகைத்துப் போய் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த வியாதியில் சம்பந்தப் பட்டு இறந்தவர்கள் அனைவவும் ஏப்பிரல் 13 ஆம் திகதி முதல் நைஜீரியாவின் ஒன்டோ மாநிலத்திலேயே பாதிக்கப் பட்டவர்கள் என ஞாயிற்றுக்கிழமை சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர். எபோலா போன்று அதிகபட்ச அச்சுறுத்தலுடன் மிக வேகமாக இந்த நோய் பரவி…

Read More

மொபைல் தொலைபேசியில் மீட்கப்பட்ட புகைப்படங்கள், குறுந்தகவல்கள், வீடியோக்கள்

ரகர் வீரர் வசீம் தாஜூடினின் செல்லிடப்பேசி மெமரியின் உள்ளடக்கத் தகவல்கள் மீட்கப்பட்டுள்ளன. தாஜூடீனின் செல்லிடப்பேசி மீளப் பயன்படுத்த முடியாத வகையில் சேதமடைந்த போதிலும், செல்லிடப்பேசியின் நினைவகப் பகுதியில் சேமிக்கப்பட்ட புகைப்படங்கள், குறுந்தகவல்கள், வீடியோக்கள், மின்னஞ்சல்கள் போன்ற தகவல்கள் மீட்கப்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக கணனிப் பிரிவு ஆய்வு அறிக்கை ஒன்றை நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளது. செல்லிடப் பேசி நினைவகத்திலிருந்து மீட்கப்பட்ட தகவல்கள் இறுவட்டு ஒன்றில் பதியப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தாஜூடீன் வாகன விபத்தில் உயிரிழக்கவில்லை படுகொலை…

Read More

இளைஞர்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகளில் நவவி எம்.பி பிரதம அதிதியாகப் பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- முந்தல் பிரதேச செயலகத்துக்குட்பட்ட இளைஞர்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகள் மதுரங்குளி விளையாட்டு மைதானத்தில் அண்மையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித்தலைவரும்,  பாராளுமன்ற உறுப்பினருமான நவவி மற்றும் பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக் ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போது 5,00,000 ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் நவவி எம்.பியின் விசேட நிதியிலிருந்து இளைஞர்களின் விளையாட்டுத்திறமையினை ஊக்குவிக்கும் முகமாக வழங்கி வைக்கப்பட்டமையுடன், போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வெற்றிப்பெற்றவர்களுக்கான பரிசில்களும், பதக்கங்களும் வழங்கிவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.  …

Read More

நேபாள நாட்டவருக்கு, இலங்கையில் மரண தண்டனை

நேபாள நாட்டுப் பிரஜை ஒருவருக்கு கண்டி நீதிமன்றம் இன்று 12-03-2015 மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஹெரொயின் போதைப் போருள் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 63 வயதுடைய நபருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் நோபாளம் – லலித்புர பட்டான் பிரதேசத்தைச் சேர்ந்தவர். கடந்த 2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி குறித்த நபர் தனது உடம்பினுள் சுமார் 80 கிராம் அளவு ஹெரோயின் வைத்திருந்த நிலையில் கண்டியில் வைத்து கைது…

Read More

அமைச்சர் ரிஷாட்டின் முயற்சியில் குருணாகலில் மினி ஆடைத்தொழிற்சாலை

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியில் குருணாகல் வாரியப்பொல, துத்திரிவௌ கிராமத்தில் மினி ஆடைத்தொழிற்சாலை  அமைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான தொழில்வாய்ப்பை மேம்படுத்தும் வகையில், அமைக்கப்பட்டுள்ள இந்த மினி ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டு, தையல் இயங்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன. ஆடைத்தொழிற்சாலையின் அங்குரார்ப்பன நிகழ்வு அண்மையில் இடம்பெற்ற  போது குருணாகல் மாவட்டத்தின் பல்வேறு அரசியல் பிரமுகர்களும் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருணாகல் மாவட்ட இணைப்பாளரும், லங்கா சதொச நிறுவனத்தின் முகாமைத்துவ…

Read More

எட்வர்ட் ஸ்னோடெனை மன்னிக்க முடியாது: வெள்ளை மாளிகை

அமெரிக்க புலனாய்வு அமைப்பு, பொது மக்கள் மற்றும் நட்பு நாடுகளின் போன்கள், இணைய தளங்களை உளவு பார்த்ததை உலகுக்கு அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடெனை மன்னிக்க முடியாது என அமெரிக்கா அறிவித்துள்ளது. அந்நாட்டின் தேசிய பாதுகாப்புப் பிரிவின் ஒப்பந்ததாரராகப் பணியாற்றிய எட்வர்ட் ஸ்னோடென் அமெரிக்கா பிற நாடுகளை வேவு பார்ப்பதை ஆதாரத்துடன் வெளியிட்டார். இதனால் அந்நாட்டிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. உளவு குற்றச்சாட்டுக்கு ஆளாகி தேடப்படும் குற்றவாளியானார். அமெரிக்காவிடமிருந்து தப்பிக்க வேண்டி ரஷ்யாவில் அடைக்கலம் புகுந்துள்ளார். கடந்த 2013…

Read More

ஜெயலலிதாவின் சிறுநீரகம் செயலிழப்பு: தமிழக அரசியலில் பரபரப்பு!

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறுநீரகம் செயலிழந்துள்ளதால் உடனடி அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா கொண்டு செல்லப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலமைச்சர் ஜெயலலிதா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் நிலையில் சிறு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இட்லி போன்ற உணவு வகைகளை எடுத்துக்கொள்வதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. இந்த நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாக அதிமுக வட்டாரத்தில் இருந்து தகவல்கள்…

Read More

கனேடிய தூதுவருடனான சந்திப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் நேற்று முன்தினம் (05) கொழும்பில் உள்ள கனேடியத் தூதுவரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தினார். நாட்டில் எதிர்நோக்க நேர்ந்துள்ள கொரோனா வைரஸின் புதிய அச்சுறுத்தல்கள், அரசாங்கம் ஏற்படுத்தவுள்ள புதிய அரசியல் கலாசாரம் மற்றும் சிறுபான்மைச் சமூகத்தின் அபிலாஷைகள் தொடர்பிலும் இச்சந்திப்பில் இருவரும் கலந்துரையாடினர்.

Read More

கல்வி அமைச்சின் செயலாளர் நியமனம்

கல்வி அமைச்சின் புதிய  செயலாளராக எஸ்.எஸ். ஹெட்டியாராச்சி தனது கடமைகளை இன்று (01) கல்வி அமைச்சின் தலைமைக்காரியாலயத்தில்  பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் இலங்கை நிர்வாக சேவையின் உறுப்பினராகவும், ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றியுள்ளதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மேலதிக செயலாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

Read More