Headlines

நாடாளுமன்றத்தில் திஸ்ஸவுக்கு ஆசனம் இல்லை!

நாடாளுமன்றத்தில் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு ஆசனம் இல்லை! அவருக்கான ஆசனம் சபை முதல்வரின் பட்டியல்படியே ஒதுக்கப்பட்டதாக நாடாளுமன்ற செயலாளர் அறிவித்திருந்தார். எனினும், அத்தநாயக்கவுக்கு ஆசனம் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. இதனையடுத்து அத்தநாயக்க அமர்வில் இருந்து வெளிநடப்பு செய்தார். பின்னர் சபாநாயகரிடம் இது முறையில் முறையிட்டுள்ளார்.. சபாநாயகரும் மீண்டும் நாடாளுமன்ற செயலாளருக்கே அதனை பாரப்படுத்தினார். இந்தநிலையில் ஆசன பிரச்சினை தீர்க்கப்பட்ட பின்னரே அவர் மீண்டும் நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்றார்.

Read More

மொனராகலையில் 2.1 ரிச்டர் நிலநடுக்கம்

மொனராகலை மாவட்டத்தில்  2.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளதாக புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.   மொனராகலை மாவட்டத்தில் சியம்பலாண்டுவ எனுமிடத்திலேயே இன்று அதிகாலை 5.10 க்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்த பணியகம் அறிவித்துள்ளது.

Read More

முகம்மட் பஹாத் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் அமைச்சான கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சிற்குள் அத்துமீறி நுழைந்துகுந்தகம் விளைவித்தமை தொடர்பில் சர்ச்சைக்குரிய இனவாத அமைப்பான பொதுபல சேனா அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் ஆறுபேருக்குகோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (26) பிடியாணை பிறப்பித்தது. கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சிற்குள் அத்துமீறி நுழைந்து குந்தகம் விளைவித்தமைதொடர்பில் பொதுபல சேனாஅமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யுமாறு கோட்டை நீதவான் கடந்த ஜனவரி 22ஆம் திகதி பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read More

பேதங்களை கைவிட்டு நாட்டை கட்டியெழுப்ப வழிகாட்டுங்கள்!- ஜனாதிபதி

வெளிநாட்டு கடன் சுமையில் நாடு மூழ்கியிருக்கும் நிலையில், இந்த சவாலான சந்தர்ப்பத்தில், வாத பேதங்களை கைவிட்டு, நாட்டை கட்டியெழுப்ப அறிவூட்டலையும் வழிக்காட்டலையும் வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சட்டத்தரணிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதிக்கும் சட்டத்தரணிகளுக்கும் இடையில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், கடந்த ஒன்றரை வருடங்களில் இலங்கை இழந்திருந்த பல வெற்றிகளை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாகவும் கூறியுள்ளார். நாடு பெற்றுள்ள முன்னேற்றம்…

Read More

22 ஆயிரம் கோடி ரூபா செலவில் இந்தியா – இலங்கை இடையே பாலம்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் வகையில் இராமேஸ்வரத்திலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு பாதை அமைக்கும் திட்டத்தை இந்திய  மத்திய அரசு  ஆரம்பிக்கவுள்ளது. 22 ஆயிரம் கோடி ரூபா செலவில் அமையும் இந்த திட்டத்தின் கீழ், கடலுக்கு அடியில் சுரங்கப்பாதையும் கடலுக்கு மேல் பாலமும் அமைக்கப்படவுள்ளது. டில்லியில் நேற்று இடம்பெற்ற வீதி, போக்குவரத்து தொடர்பான  மாநாட்டு இடம்பெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட மத்திய கப்பல் மற்றும் வீதி போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி கருத்துத் தெரிவிக்கையிலேயே…

Read More

காதலனை தேடும் சீ.சீ.டி.

புறக்கோட்டை, பெஸ்­டியன் மாவத்தை தனியார் பஸ் நிலை­யத்­தி­லி­ருந்து சட­ல­மாக மீட்­கப்­பட்ட யாழ்.வட்­டுக்­கோட்டை பிர­தே­சத்தைச் சேர்ந்த கார்த்­திகா என்ற 34 வய­து­டைய பெண்ணின் மர்ம மரணம் குறித்து நேற்று வரை எவரும் கைது செய்­யப்­ப­டவில்லை. இந்நிலையில் அப்­பெண்ணின் இர­க­சிய காத­லனை கொழும்பு குற்றத் தடுப்புப் பொலிஸார் (சீ.சீ.டி) தேடி வரு­கின்­றனர். குறித்த பெண்­ணுடன் கடந்த மூன்று வரு­டங்­க­ளாக ஒன்­றாக இருந்­த­தாக கூறப்­படும் யாழ்.பிர­தே­சத்தைச் சேர்ந்த ஒரு­வ­ரையே பொலிஸார் இவ்­வாறு தேடு­வ­தா­கவும், அவர் குறித்த பெண்ணை கொலை செய்­தி­ருப்­ப­தாக நம்­பு­வ­தாகவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ்…

Read More

அராஜக நாடுகளுக்கு – அல்லாஹ்வின் தீர்ப்பு தாமதமா..?

– முஹம்மது மஸாஹிம் – பற்றியெறிகிறது மியன்மார், பதறுகின்றது இதயம், பிரார்த்திக்கின்றன கைகள், இன்னும் பார்த்துக் கொண்டா இருக்கின்றான் படைத்தவன்..? எங்கே அவனை நம்பி கலிமாச் சொன்ன மக்களைக் காப்பாற்ற, இன்னும் அவன் அழிவை ஆரம்பிக்கவில்லை..? கண்ணெதிரே இவர்களுக்கு காட்டவேண்டுமல்லவா..? இன்று அதிகமான மக்களின் உள்ளத்திலுள்ள கேள்விதான் இது. ஆம்.. எம்மைப் படைத்த இறைவனை அவ்வளவு சாதாரணமாக எடைபோட்டு விடாதீர்கள். அவனது சூப்பர் படைகளுக்கு முன்னாள், உங்கள் உலக கூட்டுப்படைகள் தூசிப் படைகளே.. உங்களிடம் தரைப்படை உள்ளதா..?…

Read More

பெற்ற குழந்தையை விற்க முயன்ற பெண்: மட்டக்களப்பில் சம்பவம்

பிறந்து 29 நாட்களேயான ஆண் சிசு ஒன்றை விற்பனை செய்ய முயன்ற சம்பவம் ஒன்று வாழைச்சேனை பளை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்தக் குற்றச்சாட்டில் இரு பெண்கள் கைதாகியுள்ளனர்.பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் கைதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் குறித்த சிசுவின் தாய், அதனை வாங்க முற்பட்ட பெண் மற்றும் தரகர் ஒருவருமே எனத் தெரியவந்துள்ளது. மேலும் இதன் நிமித்தம் சிசுவின் தாய்க்கு 20,000 ரூபாய் பணம் தரகர் மூலம் வழங்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு…

Read More

மட்டக்களப்பு மாவட்டத்தில் இனவாதம் மற்றும் இனத்துவேசத்தை பேசுவது ஒரு புற்றுநோயாக காணப்படுகின்றது என அமீர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இனவாதம் மற்றும் இனத்துவேசத்தை பேசுவது ஒரு புற்றுநோயாக காணப்படுகின்றது என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மண்டபத்தடி கிராமத்திலுள்ள வறிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு மண்டபத்தடி விக்னேஸ்வரா பாலர் பாடசாலையில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்- இனவாதம் மற்றும் இனத்துவேசத்தை பேசி எதையும் சாதித்து…

Read More

ஹிட்லரை விட படு தோல்வியை மஹிந்த சந்திப்பார்!

ஹிட்லரை விடவும் படுமோசமான தோல்வியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்முறை குருநாகலில் பெறுவார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கல்வி அறிவிலும், விழிப்புணர்விலும் சிறந்து விளங்கும் குருநாகல் மாவட்ட மக்களின் வாக்குகளை அபகரிப்பதென்பது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இயலாத காரியமென்றும் அவர் குறிப்பிட்டு்ள்ளார். அம்பாந்தோட்டையைச் சேர்ந்த மஹிந்த ராஜபக்ஷ, பரசூட் மூலம் குருநாகல் மாவட்டத்தில் வந்து குதித்தாலும், அவரது சாகசங்களைக் கண்டு குருநாகல் மாவட்ட…

Read More

கசினோ மட்டுமா சூது. ‘ருஜுனோ’ சூதாட்டம் இல்லையா?

– ஜே.ஜி.ஸ்டீபன், ப.பன்னீர்செல்வம் – கசினோவுக்கு வரியை அதிகரித்துள்ள அரசாங்கம் “ருஜுனோவு”க்கு வரியை நீக்கியுள்ளது. ஏன் கசினோ மட்டுமா சூது. ருஜுனோ சூதாட்டம் இல்லையா என ஜே.வி.பி. எம்.பி நளின்த ஜயதிஸ்ஸ நேற்று சபையில் கேள்வி எழுப்பினார். சர்வதேச பிச்சைக் காரர்களாக இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளிடம் பிச்சையெடுக்கும் பொருளாதார கொள்கை மாற்றப்பட வேண்டும் எனக் கூறியோர் இன்று வரவு செலவு திட்டம் மூலம் மீண்டும் சர்வதேச பிச்சைக்காரர்களாக மாறியுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

Read More

பொது வேட்பாளர் விடயத்தில் பாரிய மாற்றங்கள் – சோபித்த தேரர்

 எதிர்வரும் சில தினங்களில் பாரிய மாற்றங்கள் ஏற்படக் கூடும் என நீதியான சமூகத்திற்கான மக்கள் இயக்க இணைப்பாளர் மாதுலுவாவே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளர் தொடர்பில் கோட்டே நாக விகாரையில் இன்று 07-11-2014  இடம் பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த கலந்துரையாடலில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் அத்துரலிய ரத்தன தேரர், தேசிய அமைப்பாளர் நிஷாந்த…

Read More