Headlines

குமார வெல்கம நிதிக் குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவில்

முன்னாள் அமைச்சர் குமார வெல்கம பொலிஸ் நிதிக் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவில் இன்று (30) ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் அமைச்சராக பதவி வகித்த கடந்த ஆட்சியின்போது பஸ் வண்டிகளை கொள்வனவு செய்யும்போது இடம்பெற்றதாகக் கருதப்படும் மோசடி தொடர்பிலான விசாரணைகளுக்காகவே இன்று ஆஜராகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

ரணில் விக்ரமசிங்கவினால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்ட முடியாது – சோபித தேரர்

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்ட முடியாது என நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் தலைவர் மாதுலுவே சோபித தேரர் தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் கோட்டே ஸ்ரீ நாக விஹாரையில் வைத்து நேற்று சோபித தேரரரை சந்தித்தனர். இதன் போது அவர் பொது வேட்பாளர் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். பொது வேட்பாளர் யார் என்பது மிக விரைவில் அறிவிக்கப்படும்.  ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி உரிய வேட்பாளர் ஒருவரை களமிறக்க…

Read More

அரச உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கி வைக்கும் நிகழ்வு (photos)

ஏ.எச்.எம்.பூமுதீன் வாழ்வின் எழுச்சி திட்டத்தின் கீழ் அரச உத்தியோகத்தர்களுக்கு மாணிய அடிப்படையில் மோட்டார் சைக்கிள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (11) முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அமைச்சர் றிஷாத் பதியுதீன் அரச உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கி வைப்பதை படத்தில் காணலாம்.

Read More

பாராளுமன்ற பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்துக்கு தடை

பாராளுமன்றம் அமைந்துள்ள பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு கடுவெல மஜிஸ்திரேட் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. வேலையில்லா பட்டதாரிகள் இன்று பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளவிருந்த நிலையில் பொலிஸாரின் வேண்டுகோளுக்கு அமைய இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read More

Video- “பொத்துவிலில் மக்கள் பிரதிநிதித்துவத்தை வென்றெடுக்க எமது கட்சியே பாடுபட்டது” – தலைவர் ரிஷாட்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்கு துரோகம் செய்த எவரும் அரசியலில் நிலைக்கப்போவதில்லை, இம்முறை பொதுத் தேர்தல் முடிவுகள் இதனை உண்மைப்படுத்தும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பொத்துவிலில் புதன்கிழமை (23) நடந்த கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட வேட்பாளர் என்.எச்.முனாஸை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது, “பொத்துவில் பிரதேசத்தில் ஒரு பிரதிநிதித்துவம் அவசியம். இதற்காகவே, பல தடவைகள்…

Read More

ஒருபோதும் கருணை காட்டமாட்டேன்! ஜனாதிபதி திட்டவட்டம்

ஊழல், மோசடிக்காரர்கள் மற்றும் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் எவருக்கும் நான் கருணை காட்டமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாத்தளை மாவட்டம் “லக்கலை” பொலிஸ் மைதானத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நாட்டை கட்டியெழுப்புவதற்கு இன்று அனைவரும் இணைந்த அரசாங்கமாக முன்னோக்கிச் செல்கின்றோம். ஊழல் மோசடிகள், சட்டவிரோதமான செயற்பாடுகள் அனைத்தையும் இல்லாதொழிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுக்கும். எவரும் என்னை சந்தேகிக்க முடியும்….

Read More

“ஐ.தே.க வுக்கு பாடம் படிப்பிப்போம் என மு.கா தலைவர் அண்மைக்காலமாக வீறாப்பு பேசுவது அவரது வழமையான நடிப்பு” முபாரக் அப்துல் மஜீத்!

-முபாரக் அப்துல்  மஜீத்- ஐக்கிய தேசிய கட்சிக்கு பாடம் படிப்பிப்போம் என் ரஊப் ஹக்கீம் அண்மைக்காலமாக வீறாப்பு பேசுவது அவரது வழமையான நடிப்பு என்பதுடன் முஸ்லிம்களை தொடர்ந்தும் உசுப்பேற்றி சொந்த பிழைப்பு நடத்தும் நடவடிக்கையாகும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்ததாவது, ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரசின் வரலாற்றை பார்க்கும் போது அவர் எப்போதும் ஐ.தே.கவின் செல்லப்பிள்ளையாகவே இருந்து வருகிறார் என்பது சகலரும் அறிந்த விடயம்….

Read More

“தலைமைகளைக் கொல்வதால் மன வலிமைகளை வீழ்த்த முடியாது; இஸ்ரேல் இதைப் புரிவதாக இல்லை” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

பலஸ்தீன மக்களின் தலைமைகளை அழித்து, காஸாவை அடக்கியாளும் ஸியோனிஸவாதிகளின் வெறியாட்டம் ஒருபோதும் அமைதியைக் கொண்டுவராதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். ஹமாஸ் அமைப்பின் தலைவரான யஹ்யா சின்வார், இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டமையைக் கண்டித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஓராண்டு ஓடியும் காஸா மக்களின் மன வலிமைகள் உறுதியுடனே உள்ளன. அதிபயங்கரக் குண்டுகளை வீசி, அப்பாவிச் சிவிலியன்களை இஸ்ரேல் கொன்று குவிக்கிறது. மனு தர்மங்களை மீறி,…

Read More

பேராதனை பல்கலைகழக முதற்கலை வெளிவாரிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்

பேராதனை பல்கலைக்கழகத்தின் தொலைகல்வி நிலையத்தின் முதல்கலைத் வெளிவாரிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி இம்மாதம் 30ஆம் திகதியாகும். இப்பரீட்சைக்காக 2011ஆம் ஆண்டுக்குப் பின்னரும் செல்லுபடியான பதிவை மேற்கொண்டோர் பரீட்சைக்காக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப்படிவங்களையும் மேலதிக விபரங்களையும் www.pdn.ac.lk என்ற இணையதள முகவரியினூடாக பெற்றுக்கொள்ளலாம். அல்லது அலுவலக நேரங்களில் பேராதனை பல்கலைக்கழகத்தின் தொடர் தொலைக்கல்வி நிலையத்திற்கு நேரடியாக சமூகமளித்து விபரங்களையும் விண்ணப்பப்படிவங்களையும் பெற்றுக்கொள்ளலாம்.

Read More

நியூயார்க்கில் பேசவுள்ள மோடியின் உரையை நேரலையில் ஒளிப்பரப்பத் திட்டம்?

விரைவில் அமெரிக்கா செல்லவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நியூயார்க்கில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார். இந்த உரையை அந்த நகரமெங்கும் பெரிய திரை அமைத்து நேரலையில் ஒளிபரப்ப செய்ய தீவிரமான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகத் தெரிய வருகிறது. வருகிற 25ம் திகதி அமெரிக்கா செல்லவுள்ள நரேந்திர மோடி, அங்கு ஐநா சபையில் உரை நிகழ்த்த உள்ளார். அடுத்த நாள் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் நியூயார்க் டைம் சதுக்கத்தில் பேருரையாற்ற உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அங்கு நடைபெற்று வரும் நிலையில், மோடியின்…

Read More

டொனால்ட் டிரம்ப் கிறிஸ்துவரே அல்ல: போப் பிரான்சிஸ்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ஆதரவு திரட்டிவரும் டொனால்ட் டிரம்ப் ஒரு கிறிஸ்துவரே அல்ல என உலகம் முழுவதும் வாழும் 120 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை குருவான போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். அண்மையில் இஸ்லாமியர்களை அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதிக்க கூடாது என கூறி சர்ச்சையில் சிக்கினார் டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா-மெக்சிகோ இடையில் மதில் சுவர் கட்டவேண்டும் எனவும் யோசனை தெரிவித்தார். அந்த கருத்திற்காக அமெரிக்காவில் மட்டும் அல்ல உலக முழுவதும் அவருக்கு எதிர்ப்பு அதிகரித்துவரும் நிலையில்…

Read More

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு 320 ரூபாயில் இரயிலில் பயணிக்கலாம்..!

கொழும்பு – யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவைகளின் கட்டண விபரங்கள் வெளியாகியுள்ளன. குளிரூட்டப்பட்ட கடுகதி  ரயில் சேவையில் பதிவுசெய்து பயணிப்பதற்கு   1,500 ரூபாய்யும் முதலாம் வகுப்பில் பதிவுசெய்து பயணிப்பதற்கு 900 ரூபாயும் இரண்டாந்தர வகுப்பில் பதிவுசெய்து பயணிப்பதற்கு  800 ரூபாயும் மூன்றாந்தர வகுப்பில் பதிவுசெய்து பயணிப்பதற்கு  500 ரூபாய் மற்றும் மூன்றாந்தர வகுப்பில் சாதாரணமாகப் பயணிப்பதற்கு  320 ரூபாயும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More