Headlines

மருத்துவமனைகள் மழைவெள்ளத்தில் மூழ்கும் அபாயம்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக உருவாகியுள்ள வெள்ளப்பெருக்கில் மருத்துவமனைகள் பலவும் மூழ்கிப் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குருநாகல் போதனா மருத்துவமனையின் சுற்றுவட்டாரத்தில் வெள்ளநீரின் மட்டம் உயர்ந்து மருத்துவமனைக்குள் நீர்புகும் அபாயம் ஏற்பட்ட நிலையில் நேற்று காலை முதல் மண்மூட்டைகளை அடுக்கி இராணுவத்தினர் மருத்துவமனையை பாதுகாத்துள்ளனர். தம்புள்ளை ஆறு பெருக்கெடுத்து ஓடுவதன் காரணமாக தம்புள்ளை போதனா மருத்துவமனையின் ஒருபகுதி முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. ஏனைய கட்டிடங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அநுராதபுரம் மாவட்டத்தில் கலா-பளளுவாவி குளத்தின்…

Read More

நாட்டின் கடன்தொகை இரட்டிப்பாகியுள்ளது!- மஹிந்த

நாட்டின் கடன்தொகையானது இரட்டிப்பாகியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த கால அரசு பெற்ற கடன் தொடர்பில் பிரச்சாரங்கள் செய்வதற்குதற்போதைய அரசாங்கம் அதிக பணங்களை செலவு செய்வதாகவும், இதனை சேமித்தால்மக்களுக்காக உதவிகளையாவது செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று பண்டுவஸ்நுவர விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே மஹிந்தஇவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தமது 9 வருட அரசாங்கத்தில் பெற்ற கடனைவிட கடந்த ஒன்றரை வருடங்களிலநல்லாட்சி பெற்ற கடனானது இரட்டிப்பு என்றும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

Read More

சேயா செதவ்மியின் படுகொலைக்கு, எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம்கள் ஊர்வலம் (படங்கள்)

-முஸாதிக் முஜீப்- அக்கரங்க பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி சேயா செதவ்மி (5 வயது) என்ற சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குற்றவாளியை உடனடியாக கைது செய்து உரிய தண்டனை வழங்குமாறு வற்புறுத்தியும் நீர்கொழும்பு பெரியமுல்லையில் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின்னர் அமைதி ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது. நீர்கொழும்பு பெரியமுல்லை ஜும்மா பள்ளிவாசல் நிருவாக சபையின் ஆலோசனையுடன் நீர்கொழும்பு முஸ்லிம் இளைஞர் அமைப்பு இந்த எதிர்ப்பு நடவடிக்கையை ஏற்பாடு செய்திருந்தது. இந்த அமைதி…

Read More

அமைச்சரவையில் றிஷாத் கொந்தளிப்பு: அமைதிப்படுத்திய ஜனாதிபதி மைத்திரி

– ஏ.எச்.எம்.பூமுதீன் – வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், அவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பது தொடர்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது பெரும் கொந்தளிப்பான சூழ்நிலை தோன்றியுள்ளது. அ.இ.ம.கா தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் இந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் கடும் காரசாரமான கருத்துக்களை முன்வைத்துள்ளார். இதன்போதே, இந்த கொந்தளிப்பான நிலை அமைச்சரவையில் ஏற்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் இன்று (05) திகதி காலை ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது….

Read More

‘சிங்கப்பூரில் இனவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது போல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ இஷாக் எம்.பி! 

-ஊடகப்பிரிவு- சிங்கப்பூர் ஜனாதிபதி லீகுவான்யூ 48 மணிநேரத்தில் இனவாதத்தை தடுக்க நடவடிக்கை எடுத்தது போன்று இங்கும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார். நீதித்துறை திருத்த சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே, அவர் இதனை தெரிவித்தார். இதன் போது பிரதமரும் சபையில் பிரசன்னமாகியிருந்தார். மேலும், உரையாற்றிய அவர் குறிப்பிட்டதாவது, வழக்குகளை துரிதமாக விசாரணை செய்வதற்கு எடுக்கப்பட்டுள்ள முடிவை வரவேற்கிறோம். கடந்த ஆட்சியில் அன்றிருந்த ஜனாதிபதியோ, அமைச்சர்களோ, எம்.பிக்களோ…

Read More

உரிமைக்காக குரல் கொடுக்கும் றிஷாதுக்கு; புனித மாதத்தில் துஆ செய்யுங்கள்

– அபூஹஸ்மி – கண்ணியமிக்க ரமழான் மாதம் எம்மை வந்தடைந்துள்ளது. முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் இப்புனிதமிகு நோன்பு காலத்தை பயபக்தியோடும் இறை அச்சத்தோடும் எதிர்கொண்டு பூரண பலன் அடைய முயற்சிக்க வேண்டும். கடந்து சென்ற ரமளானில் நமது சமூகம் பெரியதொரு நெருக்கடியை சந்தித்தது. அதுதான் கிரிஸ் பூதம் என்றும் கொள்ளையர்கள் என்ற பெயரிலும் எமது சமூகத்தின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் விடப்பட்டது. நாட்டின் நாலா புறங்களிலும் காணப்பட்ட முஸ்லிம் கிராமங்களில் உள்ள பெண்கள் ஆண்கள் இரவு நேரங்களில்…

Read More

இலங்கையில் அடுத்த வருடம் நியூசிலாந்தின் உயர்ஸ்தானிகராலயம்

இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் நியூசிலாந்தின் உயர்ஸ்தானிகராலயம் அடுத்த வருடம் இலங்கையில் அமைக்கப்பட உள்ளதாக நியூசிலாந்தின் பிரதமர் தெரிவித்துள்ளார். நியூசிலாந்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ரணிலை சந்தித்த நியூசிலாந்தின் பிரதமர் ஜோன் கீ இதனை தெரிவித்துள்ளார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஸ்டீவன் ஜொய்ஸ், வர்த்தக அமைச்சர் டோட் மெக்லே மற்றும் முதன்மை தொழிற்துறை அமைச்சர் நாதன் கய் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக கல்வித்துறை அதாவது…

Read More

ராஜித + கயந்த அமைச்சரவை, பேச்சாளர்களாக நியமனம்

சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக ஆகிய இருவரும் அமைச்சரவை பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது (17) நடைபெற்றுக் கொண்டிருக்கும் அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

உண்மையில் நான் வெட்கப்பட்டேன் – முன்னாள் பிரதம நீதியரசர்

கடந்தகால செயற்பாடுகளை நினைத்து வெட்கப்பபடுவதாக நாட்டின் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் சில்வா தெரிவித்துள்ளார்.கண்டியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜே.வி.பி கட்சியினால் இந்த கரத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. சாதாரண குடிமகனாக அன்றாட தேவைகளுக்கான பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நான் நரஹேன்பிட்டி பொது சந்தைக்கே செல்வேன். பிரதம நீதியரசராக கடமையாற்றிய காலத்திலும் பையை எடுத்துச் சென்று பொருட்களை கொள்வனவு செய்வது எனது வழக்கமாகும். அனுரகுமார திஸாநாயக்க அவர்களே, இவ்வாறு அண்மையில் நான்…

Read More

தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தத்துக்கு இலங்கை அடித்தளம் செயலமர்வில் அமைச்சர் றிஷாட் தெரிவிப்பு

உலக வரத்தக மையத்தின் உலகளாவிய தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தத்தில் இலங்கையும் இணைந்து கொள்வதற்கான அடித்தளம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதிதீயுன் தெரிவித்தார். இலங்கையின் தகவல் தொழில்நுட்ப கைத்தொழில்சார் ஆழமான பகுப்பாய்வு மற்றும் வர்த்தக சுங்கவரி; தொடர்பிலான இரண்டு நாள் செயலமர்வு கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்ற போது அமைச்சர் றிஷாட் பதியுதீன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு செயலமர்வை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். அமைச்சர் உரையாற்றியதாவது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தகவல்…

Read More

இன்று சர்வதேச தாதியர் தினம்!

உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் மே 12 ஆம் திகதியாகிய இன்று சர்வதேச தாதியர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. தாதியர்கள் சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பும் அவர்களின் சேவைத் தியாகங்களையும் சிறப்பாக நினைவுகூறும் பொருட்டு இத்தினம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இவ்வாண்டுக்கான தாதியர் தினம் “மாற்றத்திற்கான மாபொரும் சக்தி தாதியர்களே – அவர்கள் தமது விரிவான திறனினூடாக ஆரோக்கிய வாழ்வை மேம்படுத்துகிறார்கள்” என்ற தொனிப்பொருளின் கீழ் அனுஷ்டிக்கப்படுகின்றது. சர்வதேச தாதியர் அமைப்பு (International Council of Nurses) இத்தினத்தை 1965…

Read More

மக்கள் வெள்ளம், திரளுவதனை தடுக்க முடியாது – விமல்

தடையுத்தரவுகளின் மூலம் எம்மை தடுக்க முடியாது என ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். காவல்துறையினர் அஞ்சி நீதிமன்றிற்கு பிழையான தகவல்களை வழங்கி சாலிகா மைதானத்தை கூட்டு எதிர்க்கட்சியினர் பயன்படுத்த விடாமல் தடுத்த போதிலும், மே தினக் கூட்டத்திற்கு மக்கள் வெள்ளம் திரளுவதனை தடுக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். கூட்டு எதிர்க்கட்சியினர் சாலிகா மைதானத்திலிருந்து பேரணி நடாத்த திட்டமிட்டிருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். காவல்துறையினருடன் பேசி சில வீதிகளை பேரணிக்காக ஒதுக்கிக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Read More