Headlines

தபால் ஊழியர்களின் போராட்டம் நிறைவு

இலங்கையின் தபால் ஊழியர்கள் மேற்கொண்டு வந்த தொழிற்சங்க நடவடிக்கை நேற்று (16) நள்ளிரவு முதல் நிறைவுக்கு வந்ததாக கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணி கூறியுள்ளது. தமது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தருவதாக அதிகாரிகள் கூறியதையடுத்து தொழிற்சங்க நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வருவதாக அந்த சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எச்.கே. காரியவசம் கூறினார்.

Read More

ஹிருணிகாவுக்கு பிணை!

தெமட்டகொட பகுதியில் நபர் ஒருவரை கடத்திய சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த வருடம் டிசம்பர் 21 ஆம் திகதி ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு சொந்தமானதென கூறப்படும் டிபென்டர் வாகனத்தில் நபரொருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Read More

யுத்த வெற்றி விழா இனிமேல் கொண்டாடப்பட மாட்டாது!

யுத்த வெற்றி விழா கடந்த காலங்களில் இடம்பெற்றது போன்று இனிமேல் கொண்டாடப்பட மாட்டாது அதற்கு பதிலாக படைவீரர் ஞாபகார்த்த நிகழ்வு மற்றும் கலாச்சார வைபவம் மாத்திரமே இடம்பெறும் என்று பாதுகாப்புச் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். யுத்தத்திற்கு பின்னர் நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள நல்லிணக்கத்தை கருத்திற் கொண்டே தற்போதைய அரசாங்கம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டு அதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். நாளை நடைபெறவுள்ள படைவீரர் ஞாபகார்த்த நிகழ்வு மற்றும் கலாச்சார வைபவம்…

Read More

கோத்தபாயவிடம் மீண்டும் வாக்குமூலம்

ரக்னா லங்கா பாதுகாப்பு சேவை தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச இன்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். இன்று முற்பகல் 9 மணியளவில்  ஊழல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு, கோத்தபாய சென்றார் இதேவேளை நேற்றும் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியிருந்த கோத்தபாய, வாக்குமூலம் ஒன்றை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

சிக்கினார் லஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி

முச்சக்கர வண்டி சாரதி ஒருவரிடமிருந்து  7000 ரூபாவை லஞ்சம் பெற்றுக் கொண்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கந்தானை மோட்டார் போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குற்றச் செயல் ஒன்று தொடர்பில் வழக்குத் தொடராமல் இருப்பதற்காக இவ்வாறு லஞ்சமாக 7000 ரூபா பணத்தைப் பெற்றுக் கொண்டதாக அரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் லஞ்ச ஊழல் தவிர்ப்பு விசாரணைப் பிரிவினரும் பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Read More

தடைநீக்கத்தால் புலிகள் பலமடையக்கூடும் விழிப்பாகவே இருக்கிறது பாதுகாப்புத்துறை

புலிகள்மீதான தடையை ஐரோப் பிய ஒன்றிய நாடுகள் நீக்கு மானால், இதைப் பயன்படுத்தி தம்மை பலப்படுத் திக் கொள்வதற்கான முயற்சியில் இவ்வமைப்பு இறங்கக்கூடும் என்றும், எனவே, இது குறித்து பாதுகாப்பு அமைச்சு விழிப்புடனேயே இருக்கின் றது எனவும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாள ரும் இராணுவப் பேச்சாளருமான பிரி கேடியர் ருவான் வணிகசூரிய நேற்று தெரிவித்தார். பாதுகாப்பு மற்றும் நகர அபி விருத்தி அமைச்சில் நேற்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட் டில் கேள்வி…

Read More

யாழ். உஸ்மானியா கல்லூரி கட்டடம் அமைச்சர் றிஷாதினால் திறந்து வைப்பு (photos)

யாழ்ப்பாணத்தில் 1956ஆம் ஆண்டு ஒரு பாடசாலையின் தேவை உணரப்பட்டது அப்போது ஒன்று சேர்ந்த மக்கள் 1958 ஆம் கட்டட நிர்மாணப்பணிகளை ஆரம்பித்தனர். 1963 ஆம் ஆண்டு அப்போதைய கல்வி அமைச்சராக இருந்த பதியுதீன் மஹ்மூதினால் இந்த பாடசாலை திறந்து வைக்கப்பட்டது. 1990 அம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அசாதரன சூழலினால் மக்கள் இடம்பெயர்ந்ததனால் இங்குள்ள மாணவர்களின் தொகை குறைந்தது. 2002 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த பாடசாலை மீண்டும் இயங்க துவங்கியது.தற்போது இந்த பாடசாலை உயர் தர…

Read More

தூங்கிக் கிடந்தவர்களை தட்டியெழுப்பி ஓடித்திரியவைத்துள்ளோம் – அமைச்சர் றிஷாத்

– சுஐப் எம் காசிம் – முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப்பின் மறைவிற்குப் பின்னர் அம்பாறை முஸ்லிம் பிரதேசங்களை கணக்கிலெடுக்காது அரசியல் செய்தவர்கள் இப்போது ஓடித்திரிகிறார்கள். மக்கள் காங்கிரஸின் வரவு அவர்களை கொழும்பில் இருக்கவிடாமல் அம்பாறை பிரதேசங்களுக்கு அடிக்கடி வரும் நிலையை ஏற்படுத்தியுள்ளதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். சம்மாந்துறையில் நேற்று (04) மாலை இடம்பெற்ற மக்கள் காங்கிரஸின் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்…

Read More

தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

-ஊடகப் பிரிவு தவ்ஹீத் ஜமாத் (SLTJ) – தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக பொது பல சேனா தாக்கல் செய்துள்ள மத நிந்தனை வழக்கு டிசம்பர் மாதத்திற்கு ஒத்தி வைப்பு. ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கு (SLTJ) எதிராக பொது பல சேனா தாக்கல் செய்த மத நிந்தனை குற்றச்சாட்டு வழக்கு எதிர்வரும் டிசம்பர் 15ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பொது பல சேனா சார்பில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மத நிந்தனை…

Read More

உலக நாடுகளையே கதிகலங்க வைத்துள்ள “எபோலா”

சேவை அளிக்கும் தன்னார்வ மருத்துவர்களையும் இந்த நோய் விட்டு வைக்காத நிலை ஆபிரிக்க நாடுகள் மட்டுமன்றி உலக நாடுகளையே கதிகலங்க வைத்துள்ளது உயிர்கொல்லியான எபோலோ. இந்த வைரசின் தாக்குதலால் இந்த ஆண்டில் மட்டும் கினியா, லைபீரியா மற்றும் சியர்ராலியோன் ஆகிய நாடுகளை சேர்ந்த 1232 பேர் பலியாகிவிட்டனர். மிகவேகமாக ஆபிரிக்க நாடுகளில் பரவி வரும் எபோலா வைரஸ் உலகப் பேரழிவு நோயாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனீவா நகரில் உலக சுகாதார அமைப்பின் இரு…

Read More

தங்கச் சட்டை தொழிலதிபர் அடித்துக்கொலை

தங்கத்தால் செய்யப்பட்ட சட்டையை அணிந்து பரபரப்பை ஏற்படுத்திய இந்தியாவின் பூனே தொழிலதிபர் தத்தா புகே, மர்ம நபர்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். பூனே அருகே உள்ள பிம்ப்ரியைச் சேர்ந்தவர் தத்தா புகே. சிட்பண்ட் தொழில் செய்து வந்துள்ளார். இவரது மனைவி சீமா, பூனே மாநகராட்சி கவுன்சிலராக கடமையாற்றிய வந்தார். 5 கிலோகிராம் நிறையில், கழுத்து, கை மற்றும் இடுப்பில் தங்க நகைகளை அணிந்து வந்துகொண்டிருந்தார் தத்தா புகே. கடந்த 2013ஆம் ஆண்டில், 3.25 கிலோகிராம் தங்கத்தில் சட்டையொன்றை உருவாக்கி…

Read More

தென் கொரியாவை கைப்பற்றுவோம்: வட கொரியா மிரட்டல்

வடகொரியா நாடு தனது பக்கத்து நாடான தென் கொரியாவை தொடர்ந்து மிரட்டி வருகிறது. இதற்காக சமீபத்தில் அணுகுண்டு சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை போன்றவற்றை நடத்தியது. தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக இருந்து வருகிறது. வடகொரியாவை எச்சரிக்கும் வகையில் தென்கொரியாவும், அமெரிக்காவும் கூட்டு போர் ஒத்திகையில் ஈடுபடுகின்றன. இதற்காக இரு நாட்டு படைகளும் கொரிய கடற்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளன. நாளை போர் ஒத்திகை முழு வீச்சில் தொடங்குகிறது. இந்த நிலையில் வட கொரியா ராணுவம்…

Read More