Headlines

தவ்ஹீத் ஜமாத்திற்க்கு எதிரான, மத நிந்தனை வழக்கு ஒத்திவைப்பு

ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்க்கு எதிராக பொது பல சேனாவினால் தாக்கல் செய்யப்பட்ட மத நிந்தனை வழக்கு இன்று (11) கொழும்பு, புதுக்கடை நீதி மன்றத்தில் நீதிபதி ஜிஹான் பிலபிட்டிய முன்னிலையில் விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் தலைமையிலான குழுவினர் தவ்ஹீத் ஜமாத் சார்பில் இன்று மன்றில் ஆஜராயினர். எதிர்வரும் 05.05.2016 ம் தேதிக்கு வழக்கு மீண்டும் ஒத்தி வைக்கப் பட்டது. அத்துடன் இனங்களுக்கு மத்தியில் பிரிவினையை உண்டாக்கும் விதமாக சிங்கள பாடலாசிரியர்…

Read More

கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கல்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் அவர்களினால் கிழக்கு மாகாணத்திலுள்ள 1119 பட்டதாரிகளுக்கு, ஆசிரியர் நியமனங்கள்  திருகோணமலையில் இன்று (25/11/2017) வழங்கி வைக்கப்பட்டன. கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய மக்கள் காங்கிரஸின் பா.உ  அப்துல்லா மஹ்ரூப், அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து, அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நேர்முகப் பரீட்சையில் தோற்றிய அனைத்து பட்டதாரிகளுக்கும் நியமனங்களை வழங்குமாறும், 35 தொடக்கம் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கி, அவர்களுக்கான நியமனங்களை…

Read More

வவுனியா புதிய சாளம்பைக்குளம் ஆயிஷா வித்தியாலயத்திற்கு அமைச்சர் றிஷாத்  விஜயம்

வவுனியா புதிய சாளம்பைக்குளம் ஆயிஷா வித்தியாலயத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் ரிஷாட் அங்கு அதிபர், ஆசிரியர் மற்றும் பாடாசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களை சந்தித்து பாடசாலையில் நிலவும் குறைபாடுகளைக் கேட்டறிந்தார். இந்தப் பாடசாலையில் முதலாம் தரத்தில் சேர்ந்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளைவிட அதிகரித்துவருவதால் பாடசாலைக்கு மேலதிக கட்டிட வசதியொன்றை அமைத்துத் தருமாறு ஊரின் முக்கியஸ்தர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட அமைச்சர். விரைவில் அதற்கான முன்னெடுப்பை மேற் கொள்வதாக உறுதியளித்தார். பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு மூன்று…

Read More

இஸ்ரேல் தூதரகம் அமைக்கப்படுவதனை எதிர்க்கின்றோம்: கூட்டு எதிர்க்கட்சி

இலங்கையில் இஸ்ரேல் தூதரகம் நிறுவப்படுவதனை எதிர்ப்பதாக கூட்டு எதிர்க்கட்சி, பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் சயிட் சாகீல் ஹுசெய்னிடம் தெரிவித்துள்ளது. அண்மையில் கூட்டு எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரை சந்தித்துள்ளனர். இலங்கையில் இஸ்ரேல் தூதரகம் திறக்கப்படுவதனை நம் எதிர்க்கின்றோம் என கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பு குறித்து நாம் வருத்தமடைகின்றோம். எமது அரசாங்க ஆட்சிக் காலத்தில் பாலஸ்தீனம் சுயாதீனமான நாடாக இயங்குவதனை விரும்பி செயற்பட்டோம். பலஸ்தீன மக்களின் கனவுகளை மெய்படச் செய்ய அப்போதைய ஜனாதிபதி மஹிந்த…

Read More

வவுனியா மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தகளுடனான முக்கிய சந்திப்பு பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்..

வவுனியா மாவட்ட சமூர்த்தி உத்தியோகத்தர்களுடனான முக்கிய சந்திப்பு இன்று (29) வவுனியா இந்திரன் ஹோட்டலில் இடம்பெற்ற போது பிரதம விருந்தினராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுத்தீன் கலந்து சிறப்பித்தார். வவுனியா மாவட்டத்தில் சமுர்த்தி பெரும் மக்களின் வாழ்வாதாரப்பிரச்சினைகள் தொடர்பிலும் இங்கு பேசப்பட்டது எதிர்காலத்தில் அந்த மக்களின் பிரச்சினைகளுக்கு உரியதிர்வு பெற்று தருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்… இந்த நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் ஜயதிலக்க அமைச்சரின் வவுனியான மாவட்ட இணைப்பாளர்களான முத்துமுகம்மட்,அப்துல் பாரி உட்பட…

Read More

இத்தாலியில் பாரிய பூமியதிர்ச்சி ; உயிரிழப்பு 159 பேராக அதிகரிப்பு

இத்தாலியில் நேற்று (24) இடம்பெற்ற பூமியதிர்ச்சியில் 159 பேர்உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மத்திய இத்தாலியில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் ஏற்பட்ட பூமியதிர்ச்சி 6.2 ரிச்டராக பதிவாகியுள்ளது. இந்நிலையில் குறித்த பூமியதிர்ச்சியினால் ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் சிக்கி 159 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100 பேரை காணவில்லையென அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் உயிரிழந்தவர்களின்எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அந்நாட்டு அதிகாரிகள்தெரிவிக்கின்றனர்.

Read More

மீறாவோடை ஆற்றுக் கட்டுக்கான ஆரம்ப அடிக்கல் நடும் விழா நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மீறாவோடை ஆற்றுக் கட்டுக்கான ஆரம்ப அடிக்கல் நடும் விழா இடம்பெற்றது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டார். மேலும் அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, ஓட்டமாவடி பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், ஐக்கிய தேசிய கட்சி கல்குடாத் தொகுதி அமைப்பாளர் எஸ்.புர்கான், ஓட்டமாவடி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.றுவைத் உட்பட…

Read More

ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைப் பொலிசாரால் கலைக்க முடியுமாயின் ஏன் இந்த கலகக்காரர்களை கலைத்திருக்க முடியாது? இஷாக் எம்.பி!

-ஊடகப்பிரிவு- அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்கள் இடம்பெற்று ஒரு வாரத்திலேயே கண்டியில் மோசமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன எனவும், இதற்கான நியாயங்கள் கேள்விக்குறியாகியுள்ளன என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாராண சூழ்நிலை தொடர்பில் பாராளுமன்றத்தில் (06) இடம்பெற்ற விஷேட ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போதே, இஷாக் எம்.பி இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தனது உரையில், நாம் ஜனாதிபதி மற்றும் பொலிஸ்மா அதிபருடனும் பேசியபோது பொலிஸ்மா அதிபர்…

Read More

மைத்திரிக்கு வெற்றி நிச்சயம்; சந்திரிகா

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன நிச்சயம் வெற்றி பெறுவார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். சுனாமிப் பேரலையின் தாக்கத்தினால் 2004 ஆம் ஆண்டு அனைத்துக் கட்சிகளும் பேதமின்றி இணைந்து செயலாற்றின. இதனால் குறுகிய காலத்திலேயே நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடிந்தது. இதைப்போன்றே இப்போதும் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்துள்ளன. எனவே அடுத்த மாதம் ஜனவரி 8 ஆம் திகதி நடக்கும் தேர்தலில் வெற்றிபெறுவோம். ‘ஹெல்பிங் அம்பாந்தோட்டை’ நிதி முறைகேடு சம்பந்தமான வழக்கில்…

Read More

முஸ்லிம்களின் ஜனாஸா தகனம் தொடர்பான மனு செப்டெம்பரில் விசாரணைக்கு!

கொவிட் – 19 தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்வதன் மூலம், அவர்களின் அடிப்படை உரிமை மீறப்படுகின்றது என்ற தீர்ப்பை வழங்குமாறு கோரி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியூதீன் உள்ளிட்ட 12 முஸ்லிம் அமைப்புக்களினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, யசந்த கோதாகொட ஆகியோர் உள்ளடங்கிய நீதியரசர்கள்…

Read More

அடிப்படை சம்பளத்தை 40ஆயிரமாக உயர்த்த திட்டம்!

தொழிலாளர்களின் ஆகக்குறைந்த அடிப்படைச் சம்பளம் 40 ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் இன்று நடைபெற்ற தேசிய தொழிலாளர் சங்கத்தின் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், தொழிலாளர்களின் ஆரம்ப அடிப்படைச் சம்பளத்தை 40 ஆயிரம் ரூபாவாக உயர்த்துவது தொடர்பில் அரசாங்கம் தொழில் கொள்வோருடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி வருகின்றது. இதற்கு அனைவரும் தமது ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும்…

Read More

முக்கிய கட்சிகளின் உறுப்பினர்கள் மக்கள் காங்கிரஸில் இணைவு!

குருநாகல் மாவட்டத்தின் கடுகம்பொல தேர்தல் தொகுதியின் எலபடகம பிரதேசத்தின் ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளின் முக்கிய உறுப்பினர்கள் இன்று (03), மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான நஸீர் முன்னிலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டனர். ஐக்கிய தேசிய கட்சியின் பம்மன்ன கிளைச் சங்க தலைவர் நஸ்மிர் மற்றும் எலபடகம ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய உறுப்பினர் சிராஸ்…

Read More