Headlines

கிராம சேவகரின் கொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு சிவபுரத்தில்  கிராமசேவை உத்தியோகத்தர் கொல்லப்பட்டமையை கண்டித்தும் இதற்கு காரணமான சூத்திரதாரிகளை  சட்டத்தின்முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரியும் இன்று புதன்கிழமை (20) கவன ஈர்ப்புப் போராட்டம் ஒன்று அமைதியன முறையில், முன்னெடுக்கப் பட்டிருந்தது.

Read More

கொழும்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் காலமானார்

கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் தலைவரும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் செயலாளரும் மற்றும் பல சமூக அமைப்புக்களின் முன்னிலை உறுப்பினருமாகிய முத்தையா கதிர்காமநாதன் இன்று (2) காலை காலமானார். இறுதிச் சடங்கு வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது.  

Read More

1990க்கு அழையுங்கள்

முழுமையான வசதிகளுடன் அவசர அம்புலன்ஸ் சேவைக்கான தொடர்பை ஏற்படுத்துவதற்காக, 1990 என்ற தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்துவதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது. இந்தச் சேவையை, இலவசமாகவே முன்னெடுக்கப்பதற்கு அரசாங்கம்  கலந்துரையாடி வருவதாக அறியமுடிகின்றது. அந்த அம்புலன்ஸ் சேவையை சுகாதார அமைச்சுடன் இணைந்து, இந்தியாவின்  Vk.Emri  என்ற நிறுவனம் முன்னெடுக்கவுள்ளதாக அறியமுடிகின்றது.

Read More

நிஷாந்தவின் விண்ணப்பம் விசாரணைக்கு எடுக்கப்பட்டது

முன்னாள் சி.எஸ்.என். பணிப்பாளர் நிஷாந்த ரணதுங்க சார்பில் தாக்கல் செய்யப்பட்ட திருத்திய பிணை விண்ணப்பத்தை மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி என் ரணவக்க விசாரணைக்காக இன்று (19) எடுத்துக்கொண்டார். திருத்தப்பட்ட பிணை மனுவில் ரணதுங்கவின் வழக்கறிஞர் சளினிவட்டுவஹெட்டடி, சட்டமா அதிபரையும் நிதிக்குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகள் இருவரையும் பிரதிவாதிகளாக குறிப்பிட்டிருந்தார். பிரதிவாதிகளை எதிர்வரும் 29ஆம் திகதி நீதிமன்றத்துக்கு வருமாறு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read More

349 மதுபான விற்பனை நிலையங்களை மூடிவிட உத்தரவு…ஜனாதிபதி அதிரடி

நாடு பூராவும் உள்ள 349 மதுபான விற்பனை நிலையங்களை மூடிவிட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். பாடசாலைகள் மத ஸ்தானங்கள் போன்றவற்றுக்கு ஐநூறு மீட்டர் தூரத்துக்கு உற்பட எல்லைக்குள் இருக்கும் அனைத்து மதுபான சாலைகளையும் நாளை அமுலுக்கு வரும் வகையில் தடை செய்யும் படி போதை தடுப்பு பிரிவிற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Read More

தேவையில்லாதவற்றை பேசி நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் நீதிபதி குமாரசாமி

ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் மேல்முறையீட்டு வழக்கு விவாதத்தில் தேவையில்லாதவற்றை பேசி, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று, ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டவர்களின் சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு விசாரணை பெங்களூரு உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு முன்னிலையில் நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நாகேஷ் ராவ் தரப்பு வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டு விட்ட நிலையில், அவரது உதவியாளர் ஆனந்த் இன்னும் கொஞ்சம் வாதத்தை எடுத்து வைக்க வேண்டியுள்ளது…

Read More

அரச காணிகள் பற்றிய தகவல்களை திரட்ட பணிப்புரை

வடகொழும்பு, மத்திய கொழும்பு தொகுதிகள் உள்வரும் கொழும்பு பிரதேச பகுதியில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி சபை, தேசிய வீடமைப்பு அதிகாரசபை, துறைமுக அதிகாரசபை, கொழும்பு மாநகரசபை மற்றும் மாவட்ட செயலகம் ஆகிய அரச அமைப்புகளுக்கு சொந்தமான மற்றும் பயன்படுத்தபடாத தனியார் காணிகள் தொடர்பான விபரங்களை திரட்டும்படி கொழும்பு பிரதேச செயலக பிரதேச செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார். கொழும்பு மாநகரத்தில் வாடகை வீடுகளில் வசிக்கும் மத்திய தர…

Read More

வாஸ் குணவர்தனவிற்கு மரண தண்டனை! BREAKING NEWS

கொழும்பு, பம்பலப்பிட்டி பிரபல வர்த்தகர் மொஹம்மட் சியாம் கொலை வழக்கின் தீர்ப்பு இன்று கொழும்பு விசேட மேல் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ளர்த்து. இதன் படி முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, அவருடைய மகன் மற்றும் ஏனைய நால்வரையும் குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்து இருந்த அதேவேளை சற்று முன்னர் அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதாக…

Read More

எனது மகனை தாக்கியது மகிந்தவின் மகன் யோஷிதவே ; மேர்வின் சில்வா

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷத ராஜபக்சவே எனது மகனைத் தாக்கியுள்ளதாக மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், கொழும்பில் உள்ள பிரபல ஆடை விற்பனை நிலையம் மற்றும் இரவு நேர களியாட்ட விடுதி ஆகியவற்றில் தனது மகன் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. மாலக்க சில்வா யோஷிதவின் பாதுகாப்பாளர் ஒருவரை எச்சரித்திருந்தார். அதனை அடிப்படையாக வைத்தே எனது மகன் தாக்கப்பட்டார். எனினும் முன்னாள் ஜனாதிபதிக்கு குறித்த தாக்குதல்…

Read More

அமைச்சர் றிஷாத் அன்று தடுத்தார் பைசால் காசீம் இன்று நன்றி மறந்தார்

-ஏ.எச்.எம்.பூமுதீன் – 2012ம் ஆண்டு ஜூன் மாதம் 19ம் திகதி பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் முஸ்லிம் எம்பிக்களுக்கும் – அமைச்சர் பசில் ராஜபக்சவுக்குமிடையிலான முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது. முஸ்லிம் எம்பிக்களின் மாவட்ட தொகுதிப் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றிற்கு தீர்வு வழங்கும் அடிப்படையில் தான் இச்சந்திப்பு இடம்பெற்றது. முஸ்லிம் எம்பிக்கள் தத்தமது பிரச்சினைகளை முன்வைத்த போது அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் தொகுதிக்கு பொறுப்பான எம்பியான தற்போதைய சுகாதார பிரதியமைச்சரான iபாசல் காசீம், தமது பொத்துவில் சுற்றுலா பிரச்சினை குறித்து…

Read More

கப்பலொன்றில் பெருமளவு போதைப்பொருள் மீட்பு

தெற்குக் கடற்பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 101 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக  இலங்கை கடற்படையினர்  தெரிவித்துள்ளனர்.

Read More

முஸ்லிம் சமுகத்திற்கு அநீதி இழைக்கப்படும் ஒவ்வொரு சர்ந்தர்ப்பத்திலும் குரல் கொடுப்பவர் அமைச்சர் ரிசாத்-மீள்குடியேற்ற அமைச்சர் வீரக்கோண்

வடக்கு முஸ்லீம்களது மீள்குடியேற்றம் பற்றி அண்மைக்காலமாக பலதரப்பட்ட கருத்துக்கள் நிலவி வருவதைத் தொடர்ந்து அவற்றை நேரடியாகக் காணவேண்டுமென்பதற்காகவே இங்கு நான் விஜயம் செய்தேன்.  மீள்குடியேற்ற அபிவிருத்தி அமைச்சர் குணரத்தின வீரக்கோண் நேற்று முசலிப் பிரதேசத்தில் விஜயம்செய்து அங்கு நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சருடன் அமைச்சர் றிசாத்பதியுத்தீன் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்கும் கலந்து கொண்டார். இல்லறமின்றி, காடுகளுக்குள் முடங்கிக்கிடக்கும் உங்கள் துயரத்தைக் கண்டு நான் மேன்மையடைகின்றேன். இப்படிப்பட்ட உங்களுக்காக குரல் கொடுக்கவும்  ஓர் அமைச்சராகவும்…

Read More