Headlines

க.பொ. த. சாதரண தர பரிட்சை மாணவர்களுக்கான கருத்தரங்குகளுக்கு தடை

க.பொ.த. சாதரண தரப் பரிட்சை மாணவர்களுக்கான கருத்தரங்குகள் மற்றும் வகுப்புக்களுக்கு நாளை மறுதினம் நள்ளிரவுடன் தடை விதிக்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் ஜயந்த புஸ்பகுமார தெரிவித்துள்ளார். எதிர்வரும் 10 ஆம் திகதி க.பொ.த. சாதரண தரப் பரிட்சை ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Read More

ரணில் விக்ரமசிங்கவினால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்ட முடியாது – சோபித தேரர்

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்ட முடியாது என நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் தலைவர் மாதுலுவே சோபித தேரர் தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் கோட்டே ஸ்ரீ நாக விஹாரையில் வைத்து நேற்று சோபித தேரரரை சந்தித்தனர். இதன் போது அவர் பொது வேட்பாளர் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். பொது வேட்பாளர் யார் என்பது மிக விரைவில் அறிவிக்கப்படும்.  ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி உரிய வேட்பாளர் ஒருவரை களமிறக்க…

Read More

கட்டார் – இலங்கைக்கிடையிலான வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து

கொழும்பில் நேற்றுக் காலை (30) ஆரம்பமான கட்டார் – இலங்கை பொருளாதார ஆணைக்குழுவின் இன்றைய (31) அமர்வில் இரண்டு நாடுகளுக்குமிடையிலான வரத்தக மற்றும் பொருளாதார மேம்பாட்டுத்துறைகளுடன் சம்பந்தப்பட்ட பரஸ்பர ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது. இலங்கை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கும் கட்டார் நாட்டின் பொருளாதார மற்றும் வரத்தக அமைச்சர் ஷேக் அஹமட் பின்; ஜாஷிம் பின்; முஹம்மட் அல் தானிக்குமிடையில் இந்த முக்கியத்துவம்வாய்ந்த ஒப்பநதம்; கைசாத்திடப்பட்டது. உல்லாசப் பயணத்துறை, சமையல் எரிவாயு, விமானப்போக்குவரத்து உள்ளடங்கிய இன்னோரன்ன…

Read More

ரிஷாட் பதியுதீன் மகா வித்தியாலய மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்ட பார்வையாளர் அரங்கை திறந்து வைக்கும் நிகழ்வு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் புத்தளம் அல் காசிமி ரிஷாட் பதியுதீன் மகா வித்தியாலய மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்ட பார்வையாளர் அரங்கை திறந்து வைத்த போது…

Read More

துருக்கியில் ராணுவ புரட்சிக்கு உதவிய 9 ஆயிரம் அரசு ஊழியர்கள் வேலை நீக்கம்

துருக்கியில் இராணுவ புரட்சிக்கு உதவிய 9 ஆயிரம் அரசு அதிகாரிகள பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது துருக்கியில் அதிபர் எர்டோகன் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க நேற்று முன்தினம் இரவு இராணுவ புரட்சி நடத்தப் பட்டது. ஆனால் பொதுமக்கள் உதவியுடன் அப்புரட்சி முறியடிக்கப் பட்டது. அதையொட்டி நடந்த துப்பாக்கி சண்டை மற்றும் மோதலில் 290 பேர் உயிரிழந்தனர். 1500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அதை தொடர்ந்து இராணுவ புரட்சிக்கு உதவியவர்கள் மற்றும்…

Read More

கிழக்கு முதலமைச்சர் மக்கள் விருப்பப்படியே – றிஷாத் பதியுதீன்

ஏ.எச்.எம்.பூமுதீன் -நியாயமான தீர்வுக்கு தமிழ் தலைமைகளை அழைக்கிறேன். -100 நாட்களுக்குள் கைத்தொழில் புரட்சி – அமைச்சர் ரிசாத் பதியுதீன் கிழக்கு மக்கள் எந்த முதலமைச்சரை விரும்புகின்றார்களோ அவருக்கு நாம் ஆதரவளிப்போம். யார் முதலமைச்சர் என்பதை கட்சித் தலைவர்கள் கூடி 20 ஆம் திகதிக்கு முன்னர் தீர்மானிக்கப்படும் என அ.இ.ம.கா தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். தமிழ் தேசிய நாளிதழ்களின் ஊடகவியலாளர்களை நேற்று சந்தித்து உரையாடும் போதே மேற்படி கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஊடகவியாலாளர்களுக்கும் அமைச்சருக்குமான சந்திப்பு…

Read More

இலங்கையின் அரசியல் நடைமுறை குறித்து இந்தியா மகிழ்ச்சி

இலங்கையின் நடைமுறை அரசியல் நிலை குறித்து இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இலங்கையின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, புதுடில்லி விஜயத்தின் போது பிரணாப் முகர்ஜியை சந்தித்துள்ளார். இதன்போது தாம் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய உத்தேசித்துள்ளதாக முகர்ஜி குறிப்பிட்டுள்ளார். இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரம் குறித்தும் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. பிராந்தியத்தில் பலமிக்க நாடு என்ற வகையில் இந்தியா தமது அனுபவங்களை இலங்கையுடன் பகிர்ந்துக்கொள்ள தயாராக உள்ளதாகவும் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார். புதுடில்லியில் மார்ச் 11…

Read More

மலேஷியா செல்கிறார் மஹிந்த

ஆசிய பசுபிக் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் அனைத்துலக மாநாட்டில் பங்கேற்பதற்கு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மலேசியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த மாநாடு வரும் செப்ரெம்பர் 1ஆம் நாள் ஆரம்பமாகி, 4ஆம் நாள் வரை இடம்பெறவுள்ளது. மகிந்த ராஜபக்சவுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தினேஸ் குணவர்த்தன, லொகான் ரத்வத்தை, ஜோன்ஸ்டன் பெர்னான்டோ ஆகியோரும், மலேசியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாடு வரும் செப்ரெம்பர் 4ஆம் நாள் நடைபெறவுள்ள நிலையிலும், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ…

Read More

நாமல் நிதி குற்றப்புலனாய்வு பிரிவில்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ 70 மில்லியன் மோசடி தொடர்பில் இன்று (11) நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமல் ராஜபக்க்ஷ,இலங்கையின் முதன்மையான விளையாட்டு கழகத்தின் ரக்பி விளையாட்டு வளர்ச்சிக்காக கிரிஷ் குழுவிடம் இருந்து நன்கொடை கேட்டுள்ளார். இருப்பினும் இந்த பணம் தனிப்பட்ட வங்கி கணக்குகளின் ஊடாக அனுப்பப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றை வழங்குவதற்காகவே நாமல் இன்று நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராக இருக்கின்றார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை,இந்த…

Read More

இன்று மட்டுமே மின்வெட்டு?

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் மின்னுற்பத்தி நடவடிக்கைகள் இன்று (16) மாலை மீண்டும் ஆரம்பிக்கக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கூறினார். இவ்வாறு நுரைச்சோலை அனல் மின்நிலையம் மீண்டும் இன்று இயங்கத் தொடங்குமாயின், இன்றைய தினம் மாத்திரமே மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார். மின்சாரத் தடை தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் ஆலோசனைகளுக்கு அமைய, எதிர்வரும் காலங்களில் இவ்வாறான பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்றும் இப்பிரச்சினைகளைச் சமாளிக்கக்கூடிய முன்கூட்டிய நடவடிக்கைகளை…

Read More

யார் இந்த கரு ஜயசூரிய?

இலங்கையின் 8வது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று இடம்பெறுகிறது. இலங்கையின் 20வது சபாநாயகராக கரு ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் மூன்றாவது குடிமகனாகவும் 20வது சபாநாயகராகவும் தெரிவாகியுள்ள கரு ஜயசூரிய பற்றிய குறிப்பு. கரு ஜயசூரிய, கம்பஹா மாவட்டத்தின் ஹாப்பிட்டிகம கோரளையில் மீரிகம பிரதேசத்தில் புகழ்பெற்ற வர்த்தக சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜயசூரிய குடும்பத்தின் மூத்த புதல்வராக பிறந்தார். தாய் வழியானது அத்தனகல்லை பண்டாரநாயக்கர்களுடன் போட்டியிட்ட செனவிரத்ன குடும்பத்தை சேர்ந்த பலமான அரசியல் உரிமையும் கரு ஜயசூரியவுக்கு கிடைத்தது. ஆரம்ப…

Read More

கிராமிய  பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் அமீர் அலியின் முயற்சியால் போரதீவுப்பற்றில் வாழ்வாதார உதவிகள்.

கிராமிய  பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சரின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயதொழிலை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறுபட்ட வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. இதனடிப்படையில் போரதீவுப்பற்று செயலகப் பிரிவிலுள்ள வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பெரியபோரதீவு கலாசார மண்டபத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.சசிகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்….

Read More