முஸ்லிம்களின் வெறுப்பும், பொதுபல சேனாவால் தோற்ற மஹிந்தவும்.. காதர் ஹாஜியாரிடம் அஸ்கிரிய பீட மஹாநாயக்கர் கூறியவை
மஹா சங்கத்தினர் அரசியலில் தலையிடுவது சிறந்ததல்ல. அவர்கள் சிறந்த ஆலோசனைகளையும் அறிவுறைகளையும் பெற்றுக்கொள்வதற்கு முன்னுதாரணமாக திகழவேண்டும்’ என கண்டி அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்கர் கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரர் தெரிவித்தார். ‘கடந்த ஆட்சியின் போது பொதுபல சேனாவின் செயற்பாடுகள் காரணமாக அவ்வரசாங்கத்தின் மீது முஸ்லிம்கள் வெறுப்பு கொண்டிருந்தனர். அதன் காரணமாகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மக்கள் தேர்தலில் தோல்வியடைய செய்தனர்’ எனவும் அவர் தெரிவித்தார். கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதி அமைச்சருமான ஏ.ஆர்.எம்.ஏ.காதர்,…
