Headlines

தாஜூடின் கொலை: விசாரணை கோவையை மூடுமாறு அனுர சேனாநாயக்க உத்தரவிட்டார்

ரகர் வீரர் வசிம் தாஜூடின் கொலை குறித்த விசாரணை கோவையை மூடுமாறு சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க தமக்கு உத்தரவிட்டார் என ஓய்வு பெற்ற துணைப் பொலிஸ் அத்தியட்சகர் கமராலலாகே தர்மவர்தன விசாரணைகளின்போது கூறியதாக புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். நீதவான் மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸிடம் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளனர். தாஜூடின் கொலை குறித்து நேற்று (26) நடைபெற்ற வழக்கு விசாரணைகளின்போது இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி…

Read More

தையல் பயிற்சி நிலையம் மற்றும் சிறிய ஆடைத்தொழிற்சாலை பற்றிய அறிவூட்டல் நிகழ்வு.

அரசாங்கத்தின் 10 இலட்சம் தொழில்வாய்ப்பை ஏற்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் எமது வேண்டுகோளின் பேரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவர் ரிசாத் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் புத்தளத்தில் ஆரம்பிக்கப்பட உள்ள 10 தையல் பயிற்சி நிலையம் மற்றும் சிறிய ஆடைத்தொழிற்சாலை பற்றிய அறிவூட்டல் நிகழ்வு. ஒரு நிலையத்திற்கு 20 பயிற்சியாளர்கள் மற்றும் ஒரு ஆசிரியை, ஒரு காவலாளி மற்றும் மேற்பார்வையாளர் என சுமார் 230 குடும்பங்கள் இதில் நன்மை அடைய உள்ளனர். சுமார் 6…

Read More

யாழ். பல்கலை விடயம் தொடர்பில் அமைச்சர் குழு ஆராய்வு

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பான விடயங்களை அறிவதற்கும் பிரச்சனையை சுமூகமாக தீர்த்து வைக்கும் நோக்கிலும் மூன்று அமைச்சர்கள் கொண்ட குழு யாழ்.பல்கலைக்கழகத்திற்கு நேற்று (19) விஜயம் மேற்கொண்டது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா, மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கருணாரட்ண பரணவிதான ஆகியோரே இவ்வாறு விஜயத்தை மேற்கொண்டு பல்கலைகழக நிர்வாகத்தினர் மாணவ பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். யாழ் பல்கலை கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம்…

Read More

மங்கள சமரவீர – ஜேர்மனி அமைச்சர் சந்திப்பு

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர, ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு நேற்று பேர்லினில் இடம்பெற்றுள்ளது. இதன்போது ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சர் பிராங்-வோல்டர் ஸ்டென்மியர், இலங்கையில் மாற்றத்துக்கான காரணவாதி என்று மங்கள சமரவீரவை புகழ்ந்தார். இலங்கையில் மேற்கொள்ளப்படும் அரசியல் தீர்வு மற்றும் நல்லிணக்கத்துக்கு ஜேர்மன் அரசாங்கம் உதவும் என்றும் அவர் உறுதியளித்தார்.இதேவேளை தமது விஜயத்தின் போது மங்கள சமரவீர, ஜேர்மனின் புத்திஜீவிகள் சபையில் உரையாற்றவுள்ளார்.

Read More

நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மூலம் வேலைத்திட்டங்கள்.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் சமுர்த்தி வங்கி வலையமைப்பு ஆகியன இணைந்து நாடுபூராகவும் 1074 புதுவருட கொண்டாட்டங்கள். அநுராதபுரம் மாவட்டம் ஹொரவபொதான பிரதேச செயலகத்தின் கபுகொல்லாவா சமுர்த்தி வங்கிக் கிளையின் புதுவருட கொண்டாட்டங்கள் அ/ ஆணவிழுந்தாவ முஸ்லிம் வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. சமுகத்தின் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் இன் நிகழ்விற்கு அனுசரணை வழங்கிய அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்கள் கலந்துகொண்ட போது.

Read More

உலகின் முதன்முறையாக துபாயில் 5G இன்டெர்நெட்

ஐக்கிய அரபு அமீரகத்தில் உலகின் முதல் 5G நெட்வொர்க் சேவை தொடங்கப்பட உள்ளதாக எடிசலாட் ( Etisalat ) குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி அஹ்மத் ஜூல்ஃபர் தெரிவித்தார். எக்ஸ்போ 2020 தொடங்கும் நேரத்தில் இந்த 5G நெட்வொர்க் சேவை பயன்பாட்டுக்கு வரும் எனவும் அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் 5G நெட்வொர்க் சேவையில் அமீரகம் உலகின் முன்னோடியாக திகழ வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வெகு விரைவில் 5G நெட்வொர்க் சேவையை பயன்படுத்த அமீரக மக்கள்…

Read More

சூரியன் இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கும் தினங்கள்

க.சூரியகுமாரன், வளிமண்டல ஆராய்ச்சித் திணைக்களம்: வடஅரைக்கோளத்திலிருந்து அதன் அரைக்கோளம் நோக்கிய சூரியனின் நகர்வானது இலங்கைக்கு மேலாக இம்மாதம் ஓகஸ்ட் 28ம் திகதி முதல் செப்தெம்பர் 07ம் திகதி வரை காணப்படுகிறது. இந்தக் காலப்பகுதியில் சூரியன் இலங்கைக்கு மேலாக அதி உச்சம் கொடுக்கும். இதன்படி இலங்கையின் பின்வரும் நகரங்களை இணைக்கும் அகலக்கோட்டின் வழியே தரப்பட்டுள்ள நேரங்களில் சூரியன் அதிஉச்சம் கொடுக்கும்.

Read More

அதிவேக பாதை போக்குவரத்து பாதிப்பு.!

தெற்கு அதிவேக பாதையின் கொடகம நுழைவுச் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தின்போது, அதி சக்தி வாய்ந்த மின் கம்பம் ஒன்று பாதை நடுவில் உடைந்து விழுந்துள்ளது. அதிக வேகத்துடன் வந்த மோட்டார் வண்டி மின் கம்பத்தில் மோதியதனால் கம்பம் இரண்டாக உடைந்து பாதையில் விழுந்துள்ளது. இதனால், பாதையின் போக்குவரத்து நடவடிக்கைகள் ஒரு பக்கமாக மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் இப்பிரதேசத்தின் மின்சாரமும் தடைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Read More

மூதூர் நீதவான் நீதிமன்றம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

35 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மூதூர் நீதவான் நீதிமன்றம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் (29) திறந்து வைக்கப்பட்டது. மூதூரிற்கு வருகை தந்தமை மகிழ்ச்சியளிப்பதாகவும் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மூதூர் தேர்தல் தொகுதி மக்கள் தமக்கு பெருமளவு ஆதரவு வழங்கியதாகவும் சட்டம் மற்றும் நீதித்துறையின் சுயாதீனத்தை பாதூத்து அவற்றை பலப்படுத்துவதற்கு தேவையான வசதி வாய்ப்பக்கள் ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என்றும் மக்கள் தம்மை ஜனாதிபதியாக்க பல காரணங்கள் இருந்ததாகவும் அவற்றுள் சட்டம் மற்றும் நீதித்துறையின் சுயாதீனத்தை பாதுகாத்து பலப்படுத்துவது…

Read More

அப்துல் கலாம் காலமானார்

மேகாலய மாநில தலைநகர் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்.) இன்று நடைபெற்ற கருத்தரங்கில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிக் கொண்டிருந்த அப்துல் கலாமுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மயங்கி சரிந்த அவரை அங்குள்ள பெத்தானி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து ராணுவ மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் குழு…

Read More

மஹிந்தவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய கனேடிய அமைச்சர் பதவி விலகல்

எதிர்வரும் ஒக்டோபரில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கனேடிய கொன்சவேட்டிவ் அரசாங்கத்தில் இருந்து அவர் விலகியமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்தலில் கொன்சவேட்டிவ் கட்சி, லிபரல் கட்சியுடன் பாரிய சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ரொயட்டர் தெரிவித்துள்ளது. ரஷ்யா தொடர்பான கொள்கையில் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பருடன் ஏற்பட்ட முறுகலே இந்த பதவி விலகலுக்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் வர்த்தகங்கள் மீது தடைகளை விதிக்குமாறு பெய்ர்ட் வலியுறுத்தி வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read More

177 தேர்தல் சட்ட மீறல்கள் தேர்தல்கள் செயலகம் தகவல்

தேர்தல் சட்ட மீறல் சம்­ப­வங்கள் 177 ஆக அதி­க­ரித்­துள்­ள­தாக தேர்­தல்கள் செய­லகம் அறி­வித்­துள்­ளது. தேர்தல் தினம் அறி­விக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து நேற்று செவ்­வாய்க்­கி­ழமை வரை­யான காலப்­ப­கு­தியில் இந்த முறைப்­பா­டுகள் பதி­வா­கி­யுள்­ள­தாக அறி­வித்­துள்­ளது. சட்ட விரோ­த­மான முறையில் பொருட்கள் விநி­யோ­கித்தல் தொடர்பில் 87 முறைப்­பா­டு­க­ளும், பதா­கைகள் மற்றும் கட்­அ­வுட்­களை ஒட்­டுதல் தொடர்பில் 24 முறைப்­பா­டு­க­ளும், அரச சொத்­துக்­களை பயன்­ப­டுத்­துதல் தொடர்பில் 20 முறைப்­பா­டு­க­ளும், மற்றும் அரச ஊழி­யர்­களை தேர்தல் செயற்­பா­டு­களில் ஈடு­ப­டுத்­துதல் தொடர்பில் 06 முறைப்­பா­டு­களும் கிடைக்­கப்­பெற்­றுள்­ள­தா­கவும் தேர்­தல்கள் செய­லகம் குறிப்­பிட்­டுள்­ளது….

Read More