Headlines

பாராளுமன்ற பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்துக்கு தடை

பாராளுமன்றம் அமைந்துள்ள பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு கடுவெல மஜிஸ்திரேட் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. வேலையில்லா பட்டதாரிகள் இன்று பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளவிருந்த நிலையில் பொலிஸாரின் வேண்டுகோளுக்கு அமைய இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read More

தலைகீழாக நின்று ஆர்பாட்டம்

உள்ளூராட்சி மன்றதேர்தலை உடனடியாக நடத்தக்கோறி தலைகீழாக நின்று ஆர்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது. நுவரெலியா மாவட்ட அம்பகமுவ பிரதேச சபைக்கு முன்னால் இன்று காலை 10 மணியளவில் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர்களினால் இவ் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Read More

தாதியர் பரீட்சையில் சிறப்பு சித்தியடைந்த சம்மாந்துறை மாணவிகள்

மக்கள் நண்பன் – சம்மாந்துறை அன்சார் யாழ்ப்பாணம் தாதியர் பயிற்சிக் கல்லுாரியில் 2011 ஏ தொகுதி இறுதிப் பரீட்சையில் சம்மாந்துறையைச் சேர்ந்த மாணவிகள் சிறப்புச் சித்தியடைந்திருக்கின்றார்கள். இலங்கையின் முண்ணனி தாதியர் பயிற்சிக் கல்லுாரிகளில் ஒன்றான யாழ்ப்பாண தாதியர் பயிற்சிக் கல்லுாரியில் மூன்று வருட கால தாதிய பயிற்ச்சியினை வெற்றிகரமாக முடித்து இறுதிப் பரீட்சையிலேயே இவர்கள் சித்தியடைந்திருக்கின்றார்கள். இறுதிப் பரீட்சையில் சிறந்த சித்தியினை அடைந்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான தரம் 3 தாதியர் நியமனங்களை பெற்று சம்மாந்துறைக்கும்,…

Read More

யுத்தமில்லா சமூகத்தை கட்டியெழுப்ப உங்களது எழுத்துக்களை பயன்படுத்துங்கள்

மீண்டும் ஒரு யுத்தம் இல்லாத ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவதற்காக உங்களது எழுத்துக்களை பயன்படுத்துங்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலை இலக்கியத்துறையை சேர்ந்தவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். யுத்தம் எப்போதும் உண்மையை அழித்துவிடும் என்றும் யுத்தம் எப்போதும் மனிதர்களை அழித்துவிடும் என்றும் இப்பூமியில் எப்போதும் இரத்தம் சிந்தப்படுவதே யுத்தத்தின் அடிப்படை என்றும் யுத்தத்தினால் பௌதீக வளங்கள் மட்டுமன்றி நீதி, நேர்மை, ஒழுக்கம், பண்பாடு ஆகிய நல்ல விடயங்களும் அழிந்து போவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். நேற்று முந்தினம் (20)…

Read More

சீனி, உப்பு, ‘சீஸ்’ வரிகள் அதிகரிக்கப்படும்: அமைச்சர் ராஜித

தொற்றாநோய்களைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளும் நடவடிக்கையின் ஒரு அம்சமாக சீனி, உப்பு மற்றும் கொழுப்பு உணவுகளுக்கான வரிகளை அதிகரிப்பதற்கு உத்தேசித்திருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இதேவேளை ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் இனிப்பு பானங்களின் வகைகளை கட்டுப்படுத்துவதற்காக விசேட ஒழுங்கு விதிமுறைகள் நடைமுறைக்கு கொண்டு வரப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார். இதன்படி உணவிலுள்ள சீனியின் அளவை மக்கள் அறிந்து கொள்வதற்காக வர்ண அடையாளங்கள் அதில் குறிப்பிடப்படுமென்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 10 கிராமிலும் கூடுதல் சீனி பயன்படுத்தப்படுமாயின் சிவப்பு…

Read More

அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் சிறு தையல் தொழில்சாலை பயிற்சி நிலையம் ஆரம்பம்

கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிசாட் பதீயுதீன் அவர்களால் திருகோணமலை மாவட்ட யுவதிகளின் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்தி மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் சுய தொழிலை உருவாக்கிகொடுக்கும் நோக்கில், சிறு தையல் தொழிட்சாலை பயிற்சி நிலையங்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூப் அவர்களினால் கந்தலாய் பிரதேசத்துக்கான பயிற்சி நிலையம் ஆரம்பித்து வைக்கபட்டது. இந் நிகழ்வில் சட்டத்தரணி மதார் , இணைப்பாளர் ரியாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read More

“புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள முஸ்லிம் கூட்டமைப்பால் கிழக்கில் பாரிய மாற்றம் ஏற்படும்” பிரதி அமைச்சர் அமீர் அலி!

  -முர்ஷித்- புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள முஸ்லிம் கூட்டமைப்பு கிழக்கிலும், ஏனைய பிரதேசங்களிலும் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும், பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சி, மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதி அமைச்சர அமீர் அலி தலைமையிலான குழுவினர் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் கோறளைப்பற்று பிரதேசசபைக்கான கட்டுப்பணத்தினை திங்கட்கிழமை (11) செலுத்தினர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கோறளைப்பற்று பிரதேச சபையில் போட்டியிடுகின்றது….

Read More

” பேஸ்புக்கில் குழந்தைகளின், புகைப்படங்களை பதியாதீர்கள்”

பெண் குழந்தைகளின் புகைப்படங்களை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவு வேண்டாம் என பெற்றோர்களை பொலிசார் வலியுறுத்தியுள்ளனர். பொலிசார் நேற்று பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில், பெண் குழந்தைகள் குறிப்பாக கடற்கரையில் அரை நிர்வாணமாக விளையாடும் பெண் குழந்தைகளின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும். குழந்தைகளாக உள்ளபோது புகைப்படங்களை இணையத்தில் பதிவது ஒரு வித உற்சாகமான விடயமாக இருக்கும். ஆனால், குழந்தைகள் வளரும்போது அவர்களின் எதிர்காலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. மேலும்,…

Read More

சிங்க லே அமைப்புக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

சிங்க லே அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகன ஊர்வலம் மற்றும் கூட்டம் என்பனவற்றுக்கு நீதிமன்றத்தில் பொலிஸார் இடைக்காலத் தடை உத்தரவொன்றைப் பெற்றுள்ளனர். இந்த தடை உத்தரவை பதுளை நீதிமன்ற மேலதிக நீதவான் ஆர்.எம்.பி.சீ. ரத்நாயக்க பிறப்பித்துள்ளார். பண்டாரவளையிலிருந்து பதுளை நோக்கி வாகனப் பேரணியில் வந்து நேற்று (7) மாலை முதியங்கன ரஜமகா விகாரையில் கூட்டமொன்றை நடாத்த சிங்க லே அமைப்பு தயாராகி வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை வைத்து பொலிஸார் தடை உத்தரவைப் பெற்றுள்ளதாகவும்…

Read More

முஸ்லிம் அரசியல் தளத்தினை சிதைப்பதே இனவாதிகளின் நோக்கம் – ஓட்டமாவடியில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் 

முஸ்லிம் வாக்குகளை சிதைப்பதன் மூலம் முஸ்லிம் அரசியல் தளத்தினை இல்லாமல் செய்வதே இனவாத மொட்டு கட்சியின் நோக்கம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்குடா தொகுதி இளைஞர் அமைப்பினர் வருடாந்தம் நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (25.10.2019) இரவு ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்…

Read More

சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவி இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு

சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியை புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்க, முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். இந்த தீர்மானத்தை இன்று கூடவுள்ள சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் வைத்து அறிவிக்கவிருப்பதாக, முன்னாள் ஜனாதிபதியின் பேச்சாளர் விஜயாநந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.சிறிலங்கா சுதந்திர கட்சி பிளவடைவதை தடுக்கும் நோக்கில் அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார். அத்துடன், இலங்கை மக்களின் நலன்கள் மற்றும் நாட்டின் நிலையான தன்மையை பாதுகாக்கவும் இந்த தீர்மானம்…

Read More

பிரதியமைச்சர் அமீர் அலி கடமைகளை இன்று பெறுப்பேற்பு

நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜக்கிய தேசிய முன்னணயின் பட்டியலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு முதன்மையாக தெரிவாகிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலிக்கு கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பதவி கிடைக்கப் பெற்றதையடுத்து அவர் நாளை திங்கட்கிழமை தமது கடமையினை ஆரம்பிக்கவுள்ளார். இன்று பிற்பகல் 1.00 மணிக்கு இந்த நிகழ்வு புன்சி பொரள்ளையில் அமைந்துள்ள அமைச்சில் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More