Headlines

வெள்ளிக்கிழமை 2 இலட்சம் கையெழுத்து வேட்டை

 – வடக்கு முஸ்லீம்களுக்கான முன்னணி – வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட  முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த கோரி இலங்கையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையினை தொடர்ந்து இரண்டு இலட்சம் கையெழுத்துக்களை பெறுகின்ற வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது . வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் இந்த கையெழுத்து வேட்டை சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களிளும் அந்தந்த பிரதேச மஹல்லாக்களை மையப்படுத்தியும் இடம்பெறவுள்ளது. வடமாகான உலமா சபை, அல்ஜாசீம் ஆராய்ச்சி நிறுவனம், உடனடி தீர்வுக்கான குழு, (RRT),  அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள்…

Read More

தம்பலகாமம் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தாலிப் அலி தெரிவு!

திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளராக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் எச்.தாலிப் அலி ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டார். கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன் தலைமையில், இன்று (20) தம்பலகாமம் பிரதேச சபையின் சபா  மண்டபத்தில் இடம்பெற்ற தவிசாளர் தெரிவின் போது, சக உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் ஏகமானதாக தாலிப் அலி தெரிவானார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உப தவிசாளர் ஏ.ஜீ.சம்பிக்க பண்டார முன்மொழிய, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்…

Read More

மஹிந்த கூட்டத்தால் நாடு பாதாளத்தில் – சந்திரிகா

போரை வெற்றி கொண்டதாகத் தம்பட்டமடித்த முன்னைய அரசு அதன் பலாபயனை மக்களுக்குப் பெற்றுத்தரவில்லை. நாட்டை பெரும் கடனில் மூழ்கடித்துச் சென்றுள்ளது இவ்வாறு குற்றஞ்சாட்டினார்  முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க. “போர் நிறைவுபெற்று ஆறு ஆண்டுகளின் பின்னர் தேர்தல் தோல்வியையடுத்து வீடு சென்ற முன்னைய ஆட்சியாளர்கள் திறைசேரியை வங்குரோத்து நிலையில் விட்டுச்சென்றுள்ளனர். அத்துடன் நாட்டைப் பத்தாயிரம் கோடி அமெரிக்க டொலர் கடனாளியாக்கிச் சென்றுள்ளனர். அதுமட்டுமன்றி ஒப்பந்தகாரர்களுக்கு மேலும் பத்தாயிரம் கோடி அமெரிக்க டொலரைப் பாக்கியாக கடந்த அரசு…

Read More

ஆற்றில் மூழ்கிய காரிலிருந்து 14 மணி நேரம் கழித்து மீண்ட கைக்குழந்தை : இறந்த தாயின் குரல் கேட்டதால் போலீசார் பீதி

சில தினங்களுக்கு முன் ஆற்றில் முழ்கிய காரிலிருந்து கைக்குழந்தை மீட்கப்பட்ட சம்பவத்தில் நீரில் மூழ்கி இறந்து போன தாயின் குரலைக் கேட்டதால் போலீசார் பீதியடைந்துள்ளனர். அமெரிக்காவின் உத்தா கவுண்டியில் உள்ள ஸ்பிரிங்வில்லி அருகே கடந்த வெள்ளி இரவு சுமார் 10.30 மணியளவில் திடீரென அலறல் சத்தம் கேட்டது. அதைக் கேட்டு ஒருவர் சத்தம் வந்த திசையில் சென்று பார்த்தார். எதுவும் தென்படாத நிலையில் தனது வீட்டிற்கு வந்து விட்டார். மறு நாள் மதியம் அதே பகுதியில் உள்ள…

Read More

முஸ்­லிம்கள் உண்மையை உணர்வார்கள் – மஹிந்த

– A.R.A.பாரீல் – இஸ்ரேல் பலஸ்­தீன் மக்கள் மீது மேற்­கொள்ளும் அட்­டூ­ழி­யங்­க­ளையும் அல் அக்ஸா பள்­ளி­வாசல் முற்­று­கை­யையும் வன்­மை­யாக  கண்­டிப்­ப­தாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்தார். இலங்கை இஸ்ரேல் இரா­ஜ­தந்­திர உற­வுகள் முஸ்­லிம்­களின் மனதைப் புண்­ப­டுத்­து­மாயின் அதனை தான் விரும்­ப­வில்லை எனவும் அவர் கூறினார். பலஸ்தீன் மீதான இஸ்­ரேலின் ஆக்­கி­ர­மிப்பு மற்றும் இலங்கை இஸ்ரேல் உறவு தொடர்பில் வின­வி­ய­ போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரி­விக்­கையில், முஸ்லிம் நாடுகள் எப்­போதும் இலங்­கை­யுடன்…

Read More

பலியெடுத்தது இராவணன் வெட்டு : இரு குழந்தைகள் சாவு

திருகோணமலை கோணேஸ்வரம் கோவிலுக்கு அருகில் உள்ள கடலில் தாய் ஒருவர் தனது இரு பிள்ளைகளுடன் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.இன்று மதியம் 01.00 மணியளவில் குழந்தைகளுடன் கடலில் குதித்தவேளை மூவரும் கடற்படையினரால் மீட்க்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட போது 12 வயதான சிறுமி மற்றும் 09 வயதான சிறுவனும் உயிரிழந்துள்ள நிலையில் தாய் அவசர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.கற்பாறைகளின் மேலிருந்து கடலை பார்த்து கொண்டிருந்த போது மகன் தவறி விழுந்து விட்டதாகவும்…

Read More

அடாவடித்தனத்தின் மூலம் எதையும் பெற முடியாது -அமைச்சர் ரிஷாத் பதியுதீன் காட்டம்

வன்னி மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் மக்களின் விருப்பத்தின் படியே தெரிவு செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் அவர்களை புரந்தள்ளி எந்த தீர்மானங்களையும் எடுக்க முடியாது என்றும் கூறினார். வன்னி வசந்தம் என்னும் தொனிப் பொருளில் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று(2012.12.16) இடம் பெற்ற அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.   வவுனியா அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர,…

Read More

அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவராக ஹுசைன் பைலா நியமனம்!

அரச வர்தகக் கூட்டுத்தாபனத்தின் (STC) தலைவராக முன்னாள் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் பைலா நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான  ரிஷாட் பதியுதீன் வழங்கி வைத்தார். (ன)

Read More

பொத்துவில் வைத்தியசாலையின் அனைத்து குறைபாடுகளையும் நிவர்த்தி செய்வேன் – அமைச்சர் றிஷாத்

– கபூர் நிப்றாஸ் – அம்பாறை மாவட்ட மக்களுடனான சந்திப்புக்களை  வர்த்தக வாணிப அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவருமான ரிசாத் பதியுதீன் கடந்த சில தினங்களாக மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையில் நேற்று (2016.04.04) அம்பாறை மாவட்டத்தில் கல்வியிலும் சுகாதாரத்திலும் தற்காலத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட ஊரான பொத்துவிலுக்கு தனது விஜயத்தை மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது பொத்துவிலின் பல இடங்களையும் பார்வையிட்டுவிட்டு வந்த அமைச்சர் உரையாற்றும்போது : பொத்துவிலில் பல்வேறு குறைபாடுகளை இன்று நான்…

Read More

எபோலா வைரஸ் பரவலை தடுக்குமுகமாக 100 மில்லியன் டொலர் செலவில் நிதியம்!

மேற்கு ஆபிரிக்கா உட்பட அனைத்து நாடுகளிலும் எதிர்வரும் காலத்தில் எபோலா நோய் பரவலைத் தடுக்கும் முகமாக  100 மில்லியன் டொலர்கள் செலவில் அவரச நிதியம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக  உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அவசர நிதியம் இனிவரும் காலங்களில் உடனடியாக எபோலா நோயை எதிர்த்து சமாளிப்பதற்கு உதவும் என  உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் மார்கரெட் சான் தெரிவித்துள்ளார்.உலக சுகாதார நிறுவனத்தின் வருடாந்த கூட்டமொன்று நேற்று (18) திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு…

Read More

அகத்திமுறிப்பு கிராம மக்களுடனான சந்திப்பு

அகத்திமுறிப்பு கிராம மக்களுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துரையாடிய போது…

Read More

5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில்  மன்னார் மூர்வீதி கிராமத்திற்கு பாரிய அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்  

கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிசாட் பதியுத்தீன் அவர்களின்   நிதி ஒதுக்கீட்டில்  மன்னார் நகர சபை எல்லைக்குற்பட்ட மூர்வீதி கிராமத்திற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மன்னார் நகர சபை உறுப்பினர் உவைஸுல் கர்னி அவர்களது தலைமையில் இடம்பெற்றது 5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட்ட பாலர் பாடசாலை கட்டடம் , மையவாடிக்கான உள்ளக பாதை மற்றும் மின்…

Read More