Headlines

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு எதிராக, அமுலுக்கு வரும் சட்டம்

` போக்குவரத்து விதிமுறைகளை மீறிப் பயணிக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு எதிராக, எதிர்வரும் 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2015 ஆண்டு மே மாதம் வரையில் மட்டும் 29 இலட்சம் மோட்டார் சைக்கிள்கள் நாட்டில் பாவனையில் உள்ளன. இவற்றில் 53 சதவீதமானவை தினமும் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படுகின்றன. இதனால், மோட்டார் சைக்கிள்களினால் ஏற்படும்…

Read More

பிரதி அமைச்சர் அமீர் அலி படகு மூலம் முகத்துவாரத்தை அன்டிய பகுதிகளுக்கு விஜயம்

நேற்று 01.02.2017ஆம் திகதி வாழைச்சேனை மீனவ சங்கத்தினரின் அழைப்பின் பேரில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி படகு மூலம் முகத்துவாரத்தை அன்டிய பகுதிகளுக்கு விஜயம் செய்தார். வாழைச்சேனை முகத்துவாரத்தை அன்டிய பகுதியில் காணப்படும் கற்பாறைகள் காரணமாக மீனவ படகுகள் சேதம் அடைக்கின்றது இது தொடர்பாக கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர கடந்த 28.01.2017 வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்திற்கு வருகை தந்தபோது இது தொடர்பாக மீனவர்கள் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அடிப்படையாக கொண்டு…

Read More

இலங்கை வந்துள்ள இந்திய முதலீட்டாளர்களை சந்தித்த அமைச்சர் றிஷாட் பதியுதீன்

இந்திய நாட்டு முதலீட்டாளர்களுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்குமிடையிலான சந்திப்பு திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் இரு நாட்டு வர்த்தக உறவுகள் மற்றும் முதலீட்டு நடவடிக்கை தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

Read More

மீளக்குடியேறியுள்ள யாழ்.முஸ்லிம்களின் பரிதாபகரமான நிலைமை (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் தற்போது மீளக் குடியேறி எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி காணப்படும் முஸ்லிம் மக்களின் நிலைமையை இப்புகைப்படங்கள் சுட்டிக்காட்டுகின்றன. 1990 ஆண்டு இப்பகுதியில் வசதியாக வாழ்ந்த அம்மக்கள் விடுதலை புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டிருந்தனர். ஆனால் இவ்வெளியேற்றத்தை முன்வைத்து சில தரப்பினர் வாதப்பிரதிவாதங்களை சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ற ஏற்படுத்தி வருவதை பல்வேறு ஊடகங்கள் வாயிலாக அறிகின்றோம். ஏன் அம்மக்களை மீண்டும் மீளக்குடியேற்றம் செய்ய முடியாது.சில தரப்பினர் இதனை தங்களது இலாப நட்டங்களிற்காக இச்செயலை செய்வதை  பின்னிற்கின்றனர் என்பதே உண்மை. அம்மக்கள்…

Read More

அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி தலைமையில் கிண்ணியா தள வைத்தியசாலை விஸ்தரிப்பு தொடர்பான கலந்துரையாடல்!

கிண்ணியா தள வைத்தியசாலையின் விஸ்தரிப்பு மற்றும் ஜெய்கா (JICA) திட்டத்தினூடாக வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் கிண்ணியா தள வைத்தியசாலையில் அண்மையில் இடம்பெற்றது.  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், வைத்தியசாலையின் அபிவிருத்திச் சங்கத்தின் உறுப்பினர்கள்  மற்றும் வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர். அதனையடுத்து, கிண்ணியா தள வைத்தியசாலையின் விஸ்தரிப்புக்காக, வைத்தியசாலையினைச் சூழவுள்ள காணிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில், காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது….

Read More

அமெரிக்க கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

அமெரிக்க கடற்படையின் 7 ஆவது கப்பல் படையணியின் கட்டளைக் கப்பலான யுஎஸ்எஸ் ப்ளு ரிட்ஜ் (USS Blue Ridge) நல்லெண்ண அடிப்படையில் நேற்று முந்தினம் (26) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. வருகை தந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படைச் சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர். இதேவேளை, இக்கப்பலின் சிரேஷ்ட அதிகாரி, அமெரிக்க கடற்படையின் 7 ஆவது கப்பல் படையணியின் கட்டளைத்தளபதி வைஸ் அட்மிரல் அவுகொயின்  கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தனவை கடற்படைக் கட்டளை தலைமையகத்தில் வைத்து…

Read More

மன்னார் நகரை அழகுபடுத்துவதில் தடைகள் ஏற்பட்ட போதும் அவற்றையும் தாண்டி நிர்மாணப் பணிகளை முன்னெடுத்துள்ளோம். மன்னாரில் அமைச்சர் ரிஷாட்

மன்னார் நகரத்தை அழகுபடுத்த நவீனமயமாக்கும் எமது முயற்சிகளில் பல்வேறு தடைகளும், சவால்களும் இருந்தபோதும் அதனையும் தாண்டி, அந்த நகரத்தை நவீனமயப்படுத்துவதற்கான அடிக்கல்லை அண்மையில் நாட்டியிருப்பதாகவும், விரைவில் இந்தப் பணிகளை பூரணப்படுத்தி மக்களுக்கு கையளிக்கவுள்ளோம் என்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் அல் – அஸ்ஹர் பாடசாலையில் அதிபர் மாஹிர் தலைமையில் (30) இடம்பெற்ற நிகழ்வுகளின் பின்னரான கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். புதிய ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கான வகுப்பறையை திறந்து வைத்தல், புதிய கேட்போர்…

Read More

உள்ளூராட்சி தேர்தல்; மக்கள் காங்கிரஸ் 13 மாவட்டங்களில் வேட்புமனு தாக்கல்!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, 13 மாவட்டங்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை வியாழக்கிழமை (20) அந்தந்த மாவட்ட செயலகங்களில் தாக்கல் செய்தது. அந்தவகையில், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, புத்தளம், குருநாகல், அனுராதபுரம், கண்டி, மாத்தளை, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, களுத்துறை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தனது மயில் சின்னத்தில் தனித்தும், ஐக்கிய மக்கள் சக்தியுடன்…

Read More

கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கான ஊதியம் அதிகரிப்பு

அமைதியாக தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுவரும் கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கு அவர்களின் சேவைக்குரிய பிரதிபலனாக சம்பள அதிகரிப்பு தொடர்பான “சம்பள மீளாய்வு வழிகாட்டி நூல்” வெளிவருவது இவர்களுக்குக் கிடைக்கின்ற வரப்பிரசாதமாகும் என்று கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இலங்கைமன்றக் கல்லூரியில் நேற்று காலை (20) இடம் பெற்ற “கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கான வழிகாட்டி நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில் கைத்தொழில் வர்த்தக அமைச்சின் செயலாளர்…

Read More

மஹிந்த தோற்கடிக்கப்பட்டமை தெற்காசியாவின் ஆச்சரியமாகவுள்ளது – அமெரிக்கா

இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டமை தெற்காசியாவின் ஆச்சரியமாகவுள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி செயலாளர் நிஷா பிஸ்வால் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். ஊழல் மோசடி, குடும்ப ஆட்சி, அச்சுறுத்தி பிளவுபடுத்தும் கொள்கை, உறுதியற்ற நிலையில் சிக்கி தவித்த இலங்கையில் இடம்பெற்ற தேர்தலின் போது நம்பிக்கையளிக்கும் வகையில் மக்கள் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி…

Read More

ஜித்தாவை மிரட்டிய மணல் புயல் (காணொளி இணைப்பு)

கடந்த செவ்வாய் மாலை சவூதி அரேபியா ஜித்தாவில் திடீரென ஏற்பட்ட மணல் புயலால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் சூரிய ஒளியால் வெளிச்சமாக காணப்பட்ட ஜித்தா நகரம் சில நொடிகளில் இரவுபோல் காட்சியளித்தது. இந்த மணல் புயல் காரணமாக ஜித்தாவிற்கு வந்த விமானங்கள் தரையிறங்காமல் வேறு ஊர்களுக்கு மாற்றி விடப்பட்டன.

Read More

சவூதி – ரஷ்யா அணுசக்தி ஒப்பந்தம் கைச்சாத்து

வரலாற்றில் முதல்முறையாக சவூதி அரேபியா மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே அணுசக்தி துறையில் கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சென்ற வாரம் செயின்ட்.பீட்டர்ஸ்பெர்க்கில் நடந்த சர்வதேச பொருளாதார வாரியத்தின் கூட்டத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி இருநாடுகளும் அணுசக்தி துறையில் பல்வேறு பிரிவுகளில் இணைந்து செயல்பட உள்ளது. குறிப்பாக, அணு உலைகளை உருவாக்குவது, அணுசக்தி எரிபொருளை மறுசுழற்சி செய்வது உள்ளிட்டவற்றில் இணைந்து செயல்பட உள்ளது. மேலும், கதிரியக்க ஆபத்துகள் நிறைந்த அணுக்கழிவுகளின் பிரச்சனைகளை சந்திப்பதிலும் இருநாடுகளும்…

Read More