Headlines

“இலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் பெரிதும் பங்களிக்கின்றது” அமைச்சர் ரிஷாட்!

-ஊடகப்பிரிவு- பல்கலைக்கழகம் செல்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்காத மாணவர்களின் அறிவுத் தாகத்தை தீர்த்து வைத்து அவர்களை கல்விச்சமூக அந்தஸ்துக்குக் கொண்டுவர தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் பெரிதும் துணைபுரிகின்றது என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமேசன் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் (30) பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றியபோது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, இலங்கையின் கல்வித்துறை முறைமையின் காரணமாக வருடம் தோறும் சுமார் 5 தொடக்கம் 6 சதவீதமான…

Read More

துமிந்தவிடம் சீ.ஐ.டி 6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் இன்று வாக்குமூலம் வழங்கியுள்ளார். சட்டத்தரணிகள் இருவருடன் சென்ற அவரிடம் சுமார் ஆறு மணித்தியாலயங்கள் விசாரணைகள் இடம்பெற்றன.  பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகள்  பலவற்றிலிருந்து ஹெரோயின் போதைப்பொருட்களை கடத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள வெலே சுதாவினால் வழங்கப்பட்டுள்ள வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

Read More

யுவதிகளின் தொழில் முயற்சிக்கு கரம் கொடுத்த ACMC தலைவர் றிஷாட் பதியுதீன் அவர்கள்

மன்னார் நகர சபை எல்லைக்கு உட்பட்ட. பணங்கட்டுக்கொட்டு கிராம யுவதிகளுக்கான தையல் பயிற்சி வகுப்பு இன்றைய தினம் ரெஜீவன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரத்தியோக செயலாளர் றிப்கான் பதியுதீன் அவர்களும் சிறப்பு விருந்தினராக மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர் மற்றும் மன்னார் நகர சபை உறுப்பினர்களான நஹுசீன், உவைசுல் ஹர்ணி, வடிவுக்கரசி, டிலானி…

Read More

பந்துலவிடம் 1 பில்லியன் ரூபா நட்ட ஈடு கோரும் லிட்ரோ நிறுவனம்

லிட்ரோ நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன வௌியிட்டிருந்த பொறுப்பற்ற அறிக்கையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்காக ஒரு பில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி லிட்ரோ நிறுவனத்தினால் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஆதாரமற்ற அறிக்கை காரணமாக லிட்ரோ நிறுவனம் மற்றும் அதன் உயர்மட்ட அதிகாரிகள் உட்பட தனக்கும் அவமதிப்பு ஏற்பட்டுள்ளதாக நிறுவனத்தின் நிறைவேற்றுத் தலைவர் சலில முணசிங்க தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் 22 ம் திகதி அல்லது…

Read More

நான் இஸ்லாமியன் என்ற போதும், எனது பணி சகல சமூகத்திற்குமுரியது – அமைச்சர் றிஷாத்

– அபூ அஸ்ஜத் – “தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள பற்றினை விட நான் அம்மக்கள் மீது கொண்டுள்ள பற்று பன்மடங்கானது. மார்க்கத்தால் இஸ்லாமியனாக இருந்த போதும், எனது பதவியினை கொண்டு சகல மக்களுக்கும் பணியாற்றிவருகின்றேன்”. என்று தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன், இந்த சபையில் சில தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இனவாத கருத்துக்களை கூறிவருகின்றனர். அதனை பேசுவதற்கு முன்னர் புத்திசாதுாரியமாக அவர்கள் சிந்திக்க வேண்டும் என்றும் கேட்டுக்…

Read More

நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகின்றோம் – அமைச்சர் றிஷாத்

தேர்தல் காலங்களில் மட்டும் வந்து மர்ஹூம் அஷ்ரப் எழுதிய எழுச்சிப் பாடல்களை தெருக்களிலும் மேடைகளிலும் ஒலிபரப்பி உணர்வுகளைத் தூண்டி முஸ்லிம் மக்களிடம் வாக்குக் கேட்கும் தந்திரோபாயங்களுக்கு இனியும் அவர்கள் ஏமாறத் தயாரில்லையென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும். அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். புல்மோட்டையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொதுக் கூட்டம் இடம்பெற்ற போது அவர் உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் கட்சியின் முக்கியஸ்தர்களான பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, மஹ்ரூப் எம்.பி, இஷாக் எம்.பி உட்பட…

Read More

100 நாள் வேலைத்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் ஆரம்பம்

புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் வேலைத்திட்டத்தின் முதலாவது அபிவிருத்தி திட்டம் மலையகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொத்மலையில் பாலத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இராஜங்க கல்வி அமைச்சருமான வீ.இராதாகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்றது. கொத்மலை ஆற்றுக்கு நீர் வழங்கும் டயகம கிழக்கு தோட்டத்தை கடந்து செல்லும் ஆற்றுக்கு மேலாக உள்ள பாலம் கடந்த காலங்களில் உடைந்திருந்தது. இந்நிலையில் அதனை நிர்மாணிப்பதற்காக 90 இலட்சம் ரூபாய் செலவில் இந்த பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

சோமவன்சவின் மறைவு நாட்டுக்கு பேரிழப்பாகும் – அமைச்சர் றிஷாத்

மக்கள் விடுதலை முன்னனியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் மறைவு இலங்கை வாழ் மக்களுக்கு பாரிய இழப்பாகுமென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் விடுத்துள்ள அனுதாபச்செய்தியில் தெரிவித்துள்ளார். காலஞ் சென்ற அமரசிங்க இடது சாரி சிந்தனை கொண்டவர். இடது சாரிக் கொள்கையில் பற்றுறுதியுடன் வாழ்ந்து மக்கள் நலனுக்காக அரும்பாடு பட்டவர். இன நல்லுறவுக்காகவும் உழைத்தவர். இந்நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் இனத்தவர்கள் சமாதானமாகவும் சரி நிகராகவும் வாழ வேண்டுமென்பதற்காக அனைத்து…

Read More

விருதோடை சேனைக்குடியிருப்பு சந்தியில் இடம் பெற்ற சுதந்திர தின விழா

ஏ.டீ.எப். கழகத்தின் ஏற்பாட்டில் இன்று (04) விருதோடை சேனைக்குடியிருப்பு சந்தியில் இடம் பெற்ற சுதந்திர (தேசிய) தின விழாவின் போது பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் விருதோடை வட்டார அமைப்பாளரும் பிரதேச உறுப்பினருமான ஆஷிக் அவர்கள் கலந்து தேசியக்கொடியினை ஏற்றி நிகழ்வினை ஆரம்பம் செய்து வைத்தார். இந்நிகழ்வில் ஊர் முக்கியஸ்த்தர்கள் பலர் கலந்துக்கொண்டனர்

Read More

சம்மாந்துறை விவசாயிகள் பாதிப்பு; சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முஷாரப் எம்.பி முஷ்தீபு!

சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட வளத்தாப்பிட்டி, கரங்கா வட்டையில் முஸ்லிம்கள் பூர்வீகமாக வேளாண்மை செய்து வருகின்றனர். உரிய சட்டப்பூர்வ ஆவணங்களும் அவர்களிடம் உள்ளன. இந்நிலையில், அவர்களது காணிகளுக்குள் அத்துமீறும் ஒரு சில பெரும்பான்மையினர், அவ்விவசாயிகளை அச்சுறுத்தி வருவதுடன், செய்கை பண்ணவிடாது பல இடைஞ்சல்களையும் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பாதிப்படையும் விவசாயிகள், தமது பொருளாதாரத்தையும் இழந்து வருகின்றனர். குறித்த வயல் காணிகளில் முஸ்லிம் விவசாயிகள் மகாபோக வேளாண்மை செய்கை செய்துள்ளனர். கடந்த 07 ஆம் திகதி அக்காணிகளுக்குள் அத்துமீறிய பெரும்பான்மை…

Read More

லலித் வீரதுங்க FCID முன்னிலையில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு சத்திர சிகிச்சை ஒன்றிற்காக ரூபா.2௦௦ மில்லியன் வழங்கியமை குறித்த விசாரனைக்காக முன்னாள் ஜானாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க நிதி மோசடி விசாரணைப்பிரிவில் சற்றுமுன்னர் ஆஜராகியுள்ளார்.

Read More