தம்புள்ளை வெடிப்புச் சம்பவத்திற்கு அரசின் அசமந்தப்போக்கே காரணம்: முஜிபுர் ரஹ்மான்
தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசலின் மீது நேற்று அதிகாலை மேற்கொள்ளப்பட்டுள்ள கைக்குண்டு தாக்குதல், முஸ்லிம்கள் மீதான அரசின் அக்கரையின்மையின் வெளிப்பாட்டை காட்டுவதாக மேல்மாகாண சபை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். முஸ்லிம் சமூகம் நாள்தோரும் பல துயரங்களுக்கு ஆளாக வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுவரும் செய்திகளை கேட்கும்போது மிகுந்த கவலையளிப்பதாக தெரிவித்துள்ள அவர், அளுத்கம சம்பங்களுக்கு இதுவரையில் நீதி கிடைக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார். தம்புள்ளை பள்ளிவாசல் தாக்குதல் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு…
