சவூதியில் காணாமல்போன தமிழக பெண், இலங்கையரின் உதவியால் 16 வருடங்கனின் பின் கண்டுபிடிப்பு
சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக சென்ற தமிழக பெண் ஒருவர் 16 வருடங்களாக வீட்டாருடன் தொடர்பின்றி இருந்த நிலையில் நேற்று தமது குடும்பத்தாருடன் இணைந்துள்ளார். நயிமுன் என்ற இந்த பெண் 1998 ஆம் ஆண்டு சவூதிக்கு பணிக்காக சென்றார். அங்கு சென்றவுடன் வீட்டாருடன் தொடர்புகளை இழந்த அவர், சவூதி எஜமானரின் வீட்டில் 16 வருடங்களாக சம்பளம் எதுவும் இன்றி பணியாற்றி வந்துள்ளார். 2002 ஆம் ஆண்டில் இருந்து அவரின் குடும்பத்தினர் நயிமுனை தேடியபோதும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தநிலையில் சவூதியில்…
