Headlines

மஹிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது!

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்றாம் முறையாகவும் தேர்தலில் போட்டியிட முடியாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மக்களின் கருத்துக்களுக்கு உச்ச நீதிமன்றம் மதிப்பளிக்க வேண்டும். மூன்றாம் தவணைக்காக ஜனாதிபதி தேர்தலில் போட்யிடுவது குறித்து உச்ச நீதமன்றில் சட்ட விளக்கம் அளிக்கும் போது, மக்களின் கருத்து கவனத்திற்கொள்ளப்பட வேண்டும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்றாம் தவணைக்காக தேர்தலில் போட்டியிட முடியாது என்பதே தமது நிலைப்பாடு,ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது அரசியல் சாசனத்திற்கு புறம்பானது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்…

Read More

இலங்கை தொடர்பில் பான் கீ மூன் கவலை

2014 மார்ச் 27ம் திகதி இலங்கைக்கு அனுப்பப்பட்ட கூட்டு அறிக்கைக்கு இதுவரையில் இலங்கை உரிய பதிலை வழங்கவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் கவலை வெளியிட்டுள்ளார். மனித உரிமை பாதுகாவலர்களுக்கு எதிரான சித்திரவதைகள் தொடர்பிலேயே இந்த கூட்டு அறிக்கை அனுப்பிவைக்கப்பட்டது. எனினும் அதற்கு இலங்கை இன்னும் உரிய பதிலை அளிக்கவில்லை என்று பான் கீ மூன் ஐக்கிய நாடுகளின் 27வது மனித உரிமைகள் பேரவையின் அமர்வின் இன்றைய நிகழ்வின்போது குறிப்பிட்டார். ஐக்கிய…

Read More

ஐ.நா படையில் இலங்கை படையினர் இணைப்பு இன்னர் சிட்டிபிரஸ் கவலை

இலங்கைப் படையினரை ஐ.நா அமைதி காக்கும் படையில் இணைக்கப்பட்டுள்ளமைதொடர்பில் இன்னர் சிட்டிபிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு யுத்தம்  தொடர்பில் இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக போர்க்குற்ற விசாரணைகள் இடம்பெற்று வருகிறன. எனினும், ஐ.நாவின் அமைதிகாக்கும் படையில் இலங்கை இராணுவத்தினர் இணைக்கப்பட்டுள்ளதுடன், மத்திய கிழக்கு ஆபிரிக்காவில் அவசர ஹெலிக்கொப்டர் சேவையை நடத்தும் முக்கிய பொறுப்பும் படையினரிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர்களை ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையில் எவ்வாறு இணைத்துக் கொள்ள முடியும் என்று கேள்வி…

Read More

பிரதம செயலாளர் யாருக்கும் கட்டுப்படத் தேவையில்லை

வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி யாருடைய நிர்வாகத்தின் கீழும் கட்டுப்பட்டவர் அல்ல.என்று வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் செயலகத்தினால்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பிரதம செயலாளர்ஆளுநரை பின்பற்றுபவரா அல்லது முதலமைச்சரை பின்பற்றுபவரா? என்று ஆளுநரிடம் ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் பிரதம செயலாளர் யாருடைய நிர்வாகத்தின் கீழும் கட்டுப்பட்டவர் அல்ல.அவருக்கு மாகாணத்துக்குரிய நிதிப் பொறுப்பே வழங்கப்பட்டுள்ளது.நிதியமைச்சின் செயலாளரின் அதிகாரமே பிரதம செயலாளருக்கும் வழங்கப்பட்டுள்ளது.எனவே அவர் யாருக்கும் கட்டுப்பட்டு…

Read More

மலேசியாவில் ஐந்து இலங்கையர்கள் தடுத்து வைப்பு? சிங்கள ஊடகம்

மலேசியாவில் தொழில் வாய்ப்புப் பெற்றுச் சென்ற ஐந்து இலங்கையர்கள், குண்டர் குழுக் கூட்டங்களல்  தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என அவ் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ராகல மஹதுடுவ என்னும் இடத்தைச் சேர்ந்த எம்.விஜயசிறி என்பவரே இவ்வாறு, தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மனைவி மற்றும் தாய்க்கு தொலைபேசி மூலம் தகவல் வழங்கியுள்ளார். ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் ஊடாக ஒராண்டுக்கு முன்னதாக விஜயசிறி மலேசியாவிற்கு தொழில் வாய்ப்பு பெற்றுச்…

Read More

ஐஎஸ் அமைப்பில் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: அமெரிக்க உளவுத்துறை!

IS அமைப்பில் சேர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அமெரிக்க உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் படி கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 20 ஆயிரத்தில் இருந்து 37ஆயிரத்து 500 பேர் இந்த  அமைப்பில் இணைந்துள்ளதாகவும், நாளுக்கு நாள் ஐஎஸ் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் அமெரிக்க உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இந்த அதிகபட்ச நபர்கள் சமீபத்தில் பல்வேறு நாடுகளிலிருந்தும் இணைந்துள்ளனர் என்றும் அமெரிக்க உளவுத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. இந்நேரத்தில் அமெரிக்க அதிபர் ஐஎஸ் அமைப்புடனான வான்வழித் தாக்குதல் குறித்து உரை நிகழ்த்தியது…

Read More

பாப்பரசரின் இலங்கை விஜயம்: கத்தோலிக்க திருச்சபை உத்தியோகபூர்வமாக அறிவித்தது!

இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டு பாப் பிரான்சிஸ், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி வரவுள்ளதாக இலங்கை கத்தோலிக்க திருச்சபை உத்தியோகபூர்வமாக அறிவித்தது. கொழும்பு ஆயர் இல்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய கொழும்பு பேராயர் கர்தினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மேற்கண்ட விடயத்தை தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்யும் புனித பாப்பரசர், ஜனவரி 14ஆம் திகதி காலை 08.30 மணிக்கு கொழும்பு காலி முகத்திடலிலும், பிற்பகல் 02.00 மணிக்கு, மடுமாதா…

Read More

ஓசோன் ஓட்டை சுருங்க ஆரம்பம்

புற்றுநோய்க்கு காரணமான புற ஊதாக்கதிர்களிலிருந்து நாம் வாழும் பூமியை பாதுகாக்கும் ஓசோன் படலம் மீட்சி பெற்று வருவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக ஐ.நா. ஆய்வொன்று குறிப்பிடுகிறது. ஆண்டார்டிகாவில் மேலால் உள்ள ஓசோன் ஓட்டை ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்து பெரிதாகி வருவது நின்றுவிட்டது. ஒரு தசாப்தத்திற்கு பின்னரே இந்த ஓட்டை சுருங்க ஆரம்பித்திருப்பதாக அந்த ஆய்வு அறிக்கை குறிப்பிட்டுள்ளது. ஓசோனை பாதிக்கும் சி.எப்.சி. வாயுக்களை படிப்படியாக குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்ததே ஓசோன் படல மீட்சிக்கு முழுமையான காரணம் என்று விஞ்ஞானிகள்…

Read More

அல்கைதா இயக்கம் உலக பௌத்தர்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது – சிங்கள ராவய

அல்கைதா மத்திய நிலையமாக இலங்கை மாற்றமடைந்து வருவதாக சிங்கள ராவய அமைப்பு அறிவித்துள்ளது. நாட்டை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் அல்கைதா இயக்கத்திற்கு எதிராக அமெரிக்கா எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது என தெரிவித்துள்ளது. இலங்கையில் முஸ்லிம் கடும்போக்குவாதத்தை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்க ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும். இந்தியாவில் அல்கைதா காரியாலயம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கையிலும் விரைவில் இவ்வாறான ஓர் காரியாலயமொன்று அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. அல்கைதா இயக்கம் உலக பௌத்தர்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது….

Read More

அரசமைக்கும் சவாலை வெற்றிக்கொள்வேன் – ரணில் விக்கிரமசிங்க

ஐக்கிய தேசியக் கட்சி தலைவர்களை ஒரே மேடைக்கு கொண்டுவர முடியுமாவென அரசாங்கத் தரப்பினர் விடுத்த சவாலை வெற்றிகொண்டது போல் அரசமைக்கும் சவாலையும் வெற்றிகொள்வேனென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சூளுரைத்துள்ளார். பதுளை வியலுவ தேர்தல் தொகுதியில்அவர் நடத்திய மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More

இந்திய பெருங்கடலில் சுனாமி வர வாய்ப்பு – ஆய்வில் தகவல்

மியாமி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும், இலங்கையின் பெரடேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் இதுவரை இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் பற்றி ஆய்வு செய்தனர். இதில், இலங்கையின் தென்கிழக்கில் உள்ள லகோன் கடல்பகுதியில் 22 வகையான படிமங்கள் காணப்படுவதை கண்டுபிடித்துள்ளனர். இவை இந்திய- ஆஸ்திரேலிய நிலத்தட்டுகள் சந்திக்கும் சுமத்ரா-அந்தமான் பகுதியில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கங்களால் உருவானவை. அங்கு படிந்துள்ள மணலை ஆராய்ச்சி செய்த அவர்கள் 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி குறித்து வரலாற்று பதிவுகளை கொண்டு ஆராய்ச்சி…

Read More

சட்டத்தரணிகள் ஆஜராகக் கூடாது – காத்தான்குடியில் ஆர்ப்பாட்டம்

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் புதன்கிழமை சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து சிறுமியை கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபருக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் ஆஜராகக் கூடாது என தெரிவித்து மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு முன்னால் வியாழக்கிழமை (11) பிற்பகல் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பிரதேசத்திலுள்ள பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறுமியை துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த நபருக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் ஆஜராக கூடாது எனக் கேட்டு சுலோகங்களை…

Read More