Headlines

மீள்குடியேற்ற செயலணி ஊடாக இடம்பெயர்ந்தோர்,பாதிக்கப்பட்டோர் தகவல் திரட்டல்

மீள்குடியேற்ற செயலணி ஊடாக நீண்டகால உள்ளக இடம்பெயர்ந்தவர்களை மீண்டும் வடமாகாணத்தில் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளும் முகமாக தகவல் திரட்டும் விண்ணப்ப படிவத்தை மீள்குடியேற்ற செயலணி வெளியீட்டு உள்ளது. குறிப்பாக மோதல் காரணமாக 1990ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு நிண்டகாலமாக உள்ளக இடப்பெயர்வால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான மக்கள் தொகை கணிப்பில் பங்குபற்றுவோர் தொடர்பாக பதிவு செய்யப்பட உள்ளது. எனவே நிங்களும் இடம்பெயர்ந்தோர் என்றால் கீழ் உள்ள விண்ணப்படிவங்களை பூர்த்தி உரிய…

Read More

பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றமடையும் தெஹிவளை மிருகக்காட்சி சாலை

தெஹிவளை மிருகக்காட்சி சாலையானது அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியவாறு சிறந்த பொழுது போக்கு பூங்காவாக மாற்றப்படவுள்ளதாக நிலையான வளர்ச்சி மற்றும் வனவிலங்குகள் அமைச்சு காமின ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்துள்ளார். இதற்கமைய இதற்கான ஆரம்பக்கட்ட பகுப்பாய்வுகளை சரியான முறையில் மேற்கொள்ள விசேட குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்றைய தினம் (2) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Read More

வடகிழக்கு இணைவதை முஸ்லிம்கள் விரும்பவில்லை – அமைச்சர் சரத் அமு­னு­கம

முஸ்லிம் ஒரு­போதும் வடக்கும் கிழக்கும் இணை­வதை விரும்­ப­வில்லை. கிழக்கு பிரிந்­தி­ருக்க வேண்டும் என்­பதே அவர்­க­ளது அபி­லா­சை­யாகும். இன்று பல்­லின மக்கள் வாழும் எமது நாட்டில் நாம் பேதங்­களை மறந்து எமது சமய அடை­யா­ளங்­களை பேணிக்­கொண்டு இலங்­கையர் என்ற பொது­வான அடை­யா­ளத்­துடன் வாழ வேண்டும் என விசேட திட்­டங்­க­ளுக்­கன அமைச்சர் சரத் அமு­னு­கம தெரி­வித்தார். நேற்­று­முன்­தினம் மாலை கொழும்­பி­லுள்ள லக்ஷ்மன் கதிர்­காமர் நிலை­யத்தில் நடை­பெற்ற, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் பாரா­ளு­மன்ற உரை உள்­ள­டங்­கிய ‘முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களை…

Read More

கிராமம் , நகரம் என்ற பேதமின்றி வளங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் ; வவுனியா தரணிக்குளத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

கிராமம் , நகரம் என்ற பாகுபாடின்றி பாடசாலைகளுக்கு தேவையான சகல வளங்களும் சமமாக பங்கிடப்பட வேண்டுமென தெரிவித்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் , பல குறைபாடுகளுக்கு மத்தியிலும் கிராமப்புற மாணவர்கள் கல்வியில் முன்னேறி வருகின்றமை மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். வவுனியா தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் (08) கலந்து கொண்டார். பாடசாலையின் அதிபர் ஆர் லிங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா வடக்கு…

Read More

யோஷிதவுக்கு மீண்டும் விளக்கமறியல்

யோஷித ராஜபக்ஷவை எதிர்வரும் 25 ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கடுவல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினரை இன்று மீண்டும் கடுவல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது. சீ.எஸ்.என் தொலைக்காட்சியில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் யோஷித்த உள்ளிட்ட நால்வர்  இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

மஹிந்த, ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாரிய ஊழல் மோசடி விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே இங்கு ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

எனது ஆட்சியில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இடம்பெற்ற அநீதிகளுக்கு நான் பொறுப்பல்ல: மஹிந்த ராஜபக்ஷ

எனது ஆட்சியில் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் சில அநீதிகள் நடந்தன. என்னை மீறி இடம்பெற்ற இந்த விடயங்களுக்கு நான் பொறுப்பல்ல என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆரம்பம் முதலே தான் முஸ்லிம்களின் நண்பன் என்று கூறியுள்ள அவர், பொய் பிரசாரங்களினாலே முஸ்லிம்கள் தன்னைவிட்டு தூரமானதாகவும் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை மாலை கொழும்பு நாரஹேன்பிட்டி அபயாராம விகாரையில் நடைபெற்றது. இதன்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

Read More

வைத்தியசாலையில் பணியில் இருந்த மருத்துவர் மரணம்!

சிலாபம் வைத்தியசாலையில் சேவையாற்றி வந்த பெண் மருத்துவர் ஒருவர் திடீரென சுகவீனமுற்று அதே வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். கல்கிஸ்சை பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட 25 வயதான நக்ஷலா ரஷ்டீன் என்ற இளம் பெண் மருத்துவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரது பெற்றோர் சவூதி அரேபியாவில் வசித்து வருகின்றனர். இந்த மருத்துவர் சிலாபம் வைத்தியசாலையின் 8வது பிரிவில் கடமையில் ஈடுபட்டிருந்த போது நேற்று பிற்பகல் 3 மணியளவில் திடீரென சுகவீனமுற்றுள்ளார். இதனையடுத்து ஏனைய மருத்துவர்கள்…

Read More

அனுராதபுரத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பு!

கடந்த பாராளுமன்றத் தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக  அனுராதபுரத்தில் போட்டியிட்ட ஏ.ஆர்.எம்.தாரிக் ஹாஜியாருக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு, சனிக்கிழமை (07) இடம்பெற்றது. அனுராதபுரம், நாச்சியாதுவவில் உள்ள ஏ.ஆர்.எம்.தாரிக் ஹாஜியாரின் இல்லத்தில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில், கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

Read More

அநுராதபுர முஸ்லிம் வர்த்தகரின் கடை எரிந்து நாசம்

அநு­ரா­த­புரம் நகரில் அமைந்­துள்ள களுத்­துறை பிர­தே­சத்தைச் சேர்ந்த முஸ்லிம் வியா­பாரி ஒரு­வ­ருக்கு சொந்­த­மான தற்­கா­லிக வியா­பார கொட்­ட­கைக்கு (Sale Centre) நேற்று முன்­தினம் அதி­காலை இனந் தெரி­யாத நபர்­களால் தீ வைக்­கப்­பட்­டுள்­ள­தாக அநு­ரா­த­புரம் பொலிசார் தெரி­வித்­தனர். “லாஸ்ட் சான்ஸ் ” (Last Chance )என்று பெய­ரி­டப்­பட்ட இந்த வியா­பார நிலை­யத்தில் பெறு­மதி வாய்ந்த வர்ண விளக்­குகள் உள்­ளிட்ட பெறு­ம­தி­வாய்ந்த சமையல் உப­க­ர­ணங்கள் மற்றும் வீட்டுப் பாவனைப் பொருட்கள் விற்­ப­னைக்கு வைக்­கப்­பட்­டி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. தீயினால் முற்­றாக எரிந்து சாம்­ப­ரா­கி­யுள்ள…

Read More

ஜனாதிபதி ஆலோசகர்களாக முன்னாள் பிரதமர்கள் நியமிப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பிலான சிரேஷ்ட ஆலோசகர்களாக முன்னாள் பிரதமர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய, இன்று  (11) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் இந்நியமனங்களை முன்னாள் பிரதமர்களான ரட்னசிறி விக்ரமநாயக்க  மற்றும் டி.எம்.ஜயரட்ன ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இதற்கமைய, இன்று  காலை ஜனாதிபதி அலுவலகத்தில் இந்நியமனங்களை முன்னாள் பிரதமர்களான ரட்னசிறி விக்ரமநாயக்க  மற்றும் டி.எம்.ஜயரட்ன ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

Read More

யோஷித்த ராஜபக்சவை பார்வையிட கட்டுப்பாடுகள் விதிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித்த ராஜபக்சவை பார்வையிட வருபவர்களுக்கு கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித்த ராஜபக்சவை பார்த்து நலன் அறியும் நோக்கில் கடந்த சில தினங்களாக பெரும் எண்ணிக்கையிலானோர் சிறைச்சாலைக்கு விஜயம் செய்துள்ளனர். தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக யோஷித்த ராஜபக்ச ஒரு நாளில் மூன்று பேர் மாத்திரமே பார்வையிட முடியும் என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் துஷார உப்புல்தெனிய…

Read More