Headlines

இலங்கை வருகிறார் மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்வார் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

தலைமைத்துவத்திற்கு தகுதியான சவூதி மன்னர் சல்மான் …!

உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவுக்கு அண்மையில் மொராக்கோ நாட்டு மன்னர் வருகை தந்தார். அவரை வரவேற்க மன்னர் சல்மான் விமான நிலையம் சென்றார். இருவரும் சந்தித்து கொண்டபோது பத்திரிக்கையாளர்கள் முந்திக்கொண்டு படம் பிடிக்க முயன்றனர். அந்த சந்தர்பத்தில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் பத்திரிக்கையாளர் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டார். இதனைத் தொடர்ந்து, காவல்துறை உயரதிகாரியை பணி நீக்கம் செய்து வேறு ஒரு அதிகாரியை அதிரடியாக நியமித்தார்…

Read More

மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்து மட்டக்களப்பில் இன்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் இன்று முற்பகல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

Read More

கிழக்குப் பாடசாலைகள் 12.00 மணியுடன் பூட்டு!

கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள பாடசாலைகள் அனைத்தும் பகல் 12.00 மணியுடன் நிறைவடையுமென கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.நிஸாம் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக சகல அரச பாடசாலைகளையும் இன்று முதல் (03) எதிர்வரும் வெள்ளிக்கிழமை (06) வரை காலை 7.30 தொடக்கம் பகல் 12.00 மணிவரை பாடசாலையை நடாத்துமாறு கல்வி அமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Read More

பிரதமரிடம் இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு

லால் விஜயநாயக்க தலைமையிலான, அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான பொதுமக்கள் கருத்தறியும் குழு, அதனது இறுதி அறிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இன்று (01) கையளித்துள்ளது. அறிக்கையை முழுமையாக வாசிக்க கீழேயுள்ள இணைப்பை அழுத்துங்கள்.

Read More

திருக்குர்ஆன் போதனைகளின்படி வாழ்ந்தால் உலகத்தில் அன்பும், மனிதநேயமும் தழைத்தோங்கும் – ஜெயலலிதா

திருக்குர்ஆன் போதனைகளின்படி வாழ்ந்தால் உலகத்தில் அன்பும், அறமும், மனிதநேயமும் தழைத்தோங்கும் – முதல்வர் ஜெயலயலிதா…..!! திருக்குர்ஆன் போதனைகளின்படி வாழ்ந்தால் உலகத்தில் அன்பும், அறமும், மனிதநேயமும் தழைத்தோங்கும் என்று முதல்வர் ஜெயலயலிதா பக்ரீத் பெருநாள் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டு ஹஜ் பெருநாள் வாழ்த்து செய்தியில்… இறைவனுக்காக எதையும் தியாகம் செய்யும் உயரிய எண்ணத்தை பறைசாற்றும் திருநாளாம் பக்ரீத் திருநாளைக் கொண்டாடி மகிழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பக்ரீத் திருநாள்…

Read More

வில்பத்து பாதை வழக்கு : அடுத்த வருடம் மார்ச் மாதம் மீண்டும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடிவு

வில்பத்து சரணாலயத்திற்கு அணித்தாகச் செல்லும் B37 இலவன் குளம் – மறிச்சுக்கட்டி பாதையை மீண்டும் பொதுமக்களின் பாவனைக்கு திறந்து விடுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் 25ஆம் திகதி இணக்கம் காணப்பட்டிருந்த போதும் மனுதாரர்களான சூழலியல் இயக்கங்கள் தீர்வு யோசனைக்கு , சம்மதம் தெரிவிக்க மீண்டும் மறுத்த காரணத்தினால், இன்று(08) 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் திகதி இந்த வழக்கை மீண்டும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதென உச்ச நீதிமன்றம் அறிவித்ததாக சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீப்…

Read More

பொசன் பண்டிகையை முன்னிட்டு வடமத்திய மாகாணங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை!

பொசன் பண்டிகையை முன்னிட்டு வடமத்திய மாகாணத்திலுள்ள சில பாடசாலைகளுக்கு ஜுன் முதலாம் திகதி முதல் 05 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தகவல் வௌியிட்டுள்ளது. இதன்படி, அனுராதபுரம் மத்திய மாகாண வித்தியாலயம், வலிசிங்க ஹரிச்சந்திர கல்லூரி, சாஹிரா கல்லூரி (அநுராதபுரம்), மிஹிந்தல மகா வித்தியாலயம், தந்திரமலை ஞானவிமலா வித்தியாலயம் நிவன்த-கச்சதிய கல்லூரி, சுவர்ணபாலி மகளிர் கல்லூரி, ஸ்ராவஸ்திபுர திஸ்ஸ மற்றும் தேவாநம்பியதிஸ்ஸபுர வித்தியாலயம், உட்பட 12 பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மாஷா அல்லாஹ்! மதுபான லோகோவை அணிய மறுத்த யூசுஃப் பதான்…

IPL இல் கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் யூசுஃப் பதான் அந்த அணியின் விளம்பர உரிமையினை பெற்ற ‘Royal Stag’ என்ற மதுபானத்தின் லோகோ’வை அணிய மறுத்துள்ளார். அணியின் மற்ற வீரர்கள் “Royal Stag” லோகோவை அணியும் போது, யூசுப் மட்டும் மறுப்பதற்கு அவரது மதநம்பிக்கை தான் முக்கிய காரணம். இளம் பருவத்தில் பரோடாவில் உள்ள மசூதியில் வளர்ந்த இவர், இஸ்லாமிய நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்றி வருகிறார்.அவர் மதுபான லோகோ’வை அணியாமல் இருக்க கொல்கத்தா அணி நிர்வாகமும் அனுமதி…

Read More

மத்திய கிழக்கு நாடுகளில் மிகச் சிறந்த விமான நிலையமாக துபாய் பன்னாட்டு விமான நிலையம் தேர்வு!

துபாய் பன்னாட்டு விமான நிலையம் இந்த ஆண்டின் சிறந்த விமான நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.சிறந்த விமான நிலையம் துபாய் பன்னாட்டு விமான நிலையம், மத்திய கிழக்கு நாடுகளில் மிகச் சிறந்த விமான நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளிலேயே துபாய் பல்வேறு வகைகளில் முன்னணியில் உள்ளது.Êசமீபத்தில் நடந்த கருத்துக்கணிப்பில் கூட, மக்கள் வாழ்வதற்கு சிறந்த நகரமாக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள விமான நிலைய சேவைகளை மதிப்பிட்டு துபாய் விமான…

Read More

முஸ்லிம் சகோதரிக்கு மூன்று பிரசவம், 7 குழந்தைகள் முஸ்லிம் சகோதரிக்கு மூன்று பிரசவம், 7 குழந்தைகள்

முதல் இரண்டு பிரசவங்களின்போதும் இரட்டை சிசுக்களை பெற்ற பெண்ணொருவர் தனது மூன்றாவது பிரசவத்தில் மூன்று சிசுக்களை பிரசவித்த விநோத சம்பவம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது. கொழும்பு, மரதானையை சேர்ந்த பாத்திமா நிரோஷா என்ற 31 வயதுடைய பெண்ணே இவ்வாறு தனது முன்றாவது பிரசவத்தின்போது 3 ஆண் சிசுக்களை பெற்றுள்ளார். இப்பெண் ஏற்கனவே முதலாவது பிரசவத்தில் இரட்டை சிசுக்களை பிரசவித்துள்ளதுடன் இரண்டாவது பிரசவத்திலும் இரட்டை சிசுக்களை பெற்றார். இந்நிலையிலே மூன்றாவது பிரசவத்திலும் அவர் மூன்று சிசுக்களை பிரசவித்துள்ளார். சொய்சா பிரசவ…

Read More

ஸ்ரீலங்கா ஏயார்லைன்ஸ் தனியார் நிறுவனத்துடன் இணைய அமைச்சரவை அங்கீகாரம்!

ஸ்ரீலங்கா ஏயார்லைன்ஸ் நிறுவனத்தை தனியார் நிறுவனம் ஒன்றுடன் இணைத்துஎதிர்காலத்தில் செயற்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக விசேடதிட்டமிடல் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கருத்துதெரிவிக்கும் போதே சரத் அமுனுகம இவ்வாறு தெரிவித்திருந்தார். இந்த ஊடக சந்திப்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More